கொத்தமல்லி சட்னியை நிறம் மாறாம ஹோட்டல் ஸ்டைலில் இப்படி அரைச்சி பாருங்க. சுட சுட இட்லிக்கு இந்த சட்னி இருந்தா போதும் எவ்வளவு இட்லி சுட்டாலும் பத்தவே பத்தாது.

kothamalli chutney
- Advertisement -

இட்லி தோசைக்கு சைடிஸ்ஸாக எப்போதுமே சிம்பிளாக அதே நேரத்தில் உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தால் நாம் முதலில் தேர்ந்தெடுப்பது சட்னியை தான். அதிலும் அந்த சட்னியையும் எவ்வளவு சுலபமாகவும் ருசியாகவும் அரைக்க முடியும் என்று தான் யோசிப்போம். அப்படி ஒரு சுவையான அதே நேரத்தில் சுலபமான செய்யக் கூடிய கொத்தமல்லி சட்னியை ர எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை

கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு -1 ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1பொடியாக நறுக்கியது, தக்காளி – 1பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் – 4, கொத்தமல்லி – 1 கைப்பிடி, தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன், கடுகு – 1/2 டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – 1/4 ஸ்பூன்.

- Advertisement -

இந்த சட்னி செய்ய முதலில் அடுப்பில் கடாய் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்தும் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும். அதன் பிறகு பச்சை மிளகாய் சேர்த்து அதுவும் லேசாக நிறம் மாறி வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

இதன் பிறகு வெங்காயம் சேர்த்து நன்றாக வதங்கிய பின் தக்காளியும் சேர்த்து ஒரு முறை நன்றாக வதக்கி விடுங்கள். இவை எல்லாம் வதங்கிய பிறகு கொத்தமல்லி சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்டு தேங்காய் துருவலை சேர்த்து பின் அடுப்பை அணைத்து விடுங்கள். காடாய் சூட்டிலே தேங்காய் வதங்க நன்றாக வதங்கி விடும்.

- Advertisement -

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் இதையெல்லாம் சேர்த்த பிறகு உப்பையும் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி முதலில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு மீண்டும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்து எடுத்த பிறகு இதை ஒரு பவுலுக்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: அட புளி சேர்க்காமல் வெண்டைக்காய் குழம்பு இப்படி கூட வைக்கலாமா? வச்சு தான் பாருங்க! ஒரு குண்டான் சோறு இருந்தா கூட, ஒரு பருக்கை மீதமாவாது.

இப்போது அடுப்பில் சின்ன தாளிப்பு கரண்டி வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிந்த பிறகு கருவேப்பிலை ஒரே ஒரு காய்ந்த மிளகாய் மட்டும் சேர்த்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு இந்த தாளிப்பை சட்னியில் ஊற்றி விடுங்கள் அவ்வளவு தான் சூப்பரான கொத்தமல்லி சட்னி தயார்.

- Advertisement -