கோவிலில் இறைவனை எப்படி வழிபட வேண்டும்? ஏன் கண்களை மூடி இறைவனை வழிபட கூடாது?

temple-prayer
- Advertisement -

பலரும் கோவிலுக்குள் நீண்ட வரிசையில் நின்று கருவறையின் அருகில் வந்ததும் மூலவரை கண்டவுடன் கண்களை மூடி தங்களையும் மறந்து இறைவனுக்கு ஆரத்தி எடுப்பது கூட தெரியாமல் நின்று கொண்டிருப்பார்கள். நாம் கோவிலுக்கு எதற்காக செல்கின்றோம்? இறைவனை மனதார பார்த்து மகிழ்வதற்காகவும், அவரிடம் நமது வேண்டுதல்களை கேட்பதற்காகவும் தானே செல்கின்றோம். ஆனால் அங்கு சென்று இவ்வாறு கண்களை மூடி நின்றிருந்தால் இறைவனை எவ்வாறு நம் மனதிற்குள் கொண்டு வர முடியும். கோவிலுக்கு சென்று எவ்வாறு இறைவனை வழிபட வேண்டும் என்று இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

pray

கோவிலுக்கு செல்லும் முறை:
கோவிலுக்கு செல்லும் போது உங்களால் முயன்ற பூ, பழம், தேங்காய், அபிஷேக பொருட்கள், விளக்கு ஏற்றுவதற்கான நெய் முதலானவற்றை கொண்டு செல்வது என்பது மிகவும் விசேஷமாகும். இவற்றை கொண்டு செல்ல இயலாத சூழ்நிலையில் உள்ளவர்கள் இதற்காக கவலைப்பட வேண்டாம். நீங்கள் இறைவனை மனதார வேண்டும் பொழுது உங்கள் கண்களில் இருந்து சுரக்கும் ஒரு சொட்டு நீரே இறைவனுக்கு உங்களை பிரியமானவராக மாற்றும்.

- Advertisement -

ஒவ்வொரு கோவிலுக்கென்றும் தனிப்பட்ட வழிமுறைகள் இருக்கும். அவ்வாறு அந்த விதிமுறைகளுக்கு ஏற்ப இறைவனை வழிபட்டு கோவிலை பிரதட்சணம் செய்து விட்டு வர வேண்டும்.

praying-god1

எப்பொழுது இறைவனை வழிபட வேண்டும்?
எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் இறைவனை வழிபடலாம். கோவிலுக்குச் சென்றும் இறைவனை வழிபடலாம். வீட்டில் பூஜை செய்தும் இறைவனை வழிபடலாம். தினமும் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் கோவில் கோபுரத்தை பார்த்து கையெடுத்துக் கும்பிட்டும் இறைவனை வழிபடலாம்.

- Advertisement -

இருப்பினும் செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் கோவிலுக்குச் சென்று இறைவனை தரிசிப்பது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் பௌர்ணமி, அமாவாசை, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிருத்திகை, சூரிய கிரகணம், சந்திர கிரகணம், பிரதோஷம், சதுர்த்தி, ஏகாதேசி, சிவராத்திரி, பிறந்த நாள் மற்றும் பண்டிகை நாள் இது போன்ற விசேஷ நாட்களில் தவறாமல் சென்று இறைவனை வழிபட்டு வருவது உங்களுக்கு சிறந்த பலன்களை கொடுக்கும்.

praying-god

இறைவனை வணங்கும் முறை:
கருவறைக்கு அருகில் வந்து மூலவரை கண்டதும் ஒரு நொடி கூட வீணாக்காமல் கையெடுத்து தொழுது, இறைவனை கண் இமைக்காமல் பார்த்து, ரசித்து மனதிற்குள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

gopuram-prayingman

உன்னை மனதார தரிசித்து உள்ளம் குளிர்ந்தேன். நீ என் உள்ளத்திலும், இல்லத்திலும் நிறைந்திருந்து அருளாசி வழங்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, உங்கள் இல்லத்திலும் எழுந்தருளுமாறும் வேண்டிக் கொள்ள வேண்டும்.

வீட்டில் தினமும் பூஜை செய்யும் பொழுது கோவிலில் தரிசித்த இறைவனின் திரு உருவத்தை மனதில் நினைத்துக் கொண்டு பிராத்தனை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது இறைவனே நம் வீட்டில் இருந்து நமக்கு அருள் புரிவது போன்ற மகிழ்ச்சியை உண்டாக்கும்.

kopuram-praying

இதற்காகவே கோவிலுக்குச் சென்று இறைவனை பார்க்கும் போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக்கூடாது என்று சொல்கின்றனர். இனிமேல் நீங்களும் கோவிலுக்குச் செல்லும் பொழுது ஒரு நொடி கூட வீணாக்காமல் இறைவனைக் கண்டதும் மனதார மனம் குளிர வேண்டிக் கொண்டு அவரை கண் இமைக்காமல் பார்த்து மகிழுங்கள்.

- Advertisement -