கோவிலுக்குள் பிரசாதமாக பல பொருட்களை எடுத்துச் செல்லலாம். ஆனால் அங்கிருந்து எடுத்து வரக் கூடாத பொருட்கள் என்னென்ன என்பது தெரியுமா?

kovil
- Advertisement -

கோவிலுக்குள் இறைவனை வேண்டி வரம் வாங்க செல்கிறோம். அதற்காக நமது முழு மனதுடன் பல காணிக்கைகளை செலுத்துகிறோம். கோவிலுக்காக நாம் கொடுக்கும் காணிக்கைகள் அனைத்தும் முழுவதுமாக கோவிலுக்கும், இறைவனுக்கும் இறைபணிக்குமாக செலவிடப்படுகிறது. இவ்வாறு நாம் காணிக்கை செய்யும் பொழுது நமக்கு புண்ணியம் சேர்ந்து, நமது கர்மாக்கள் அனைத்தும் அழிந்துவிடுகிறது. இதனாலேயே நமது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுகிறது. பலரின் வாழ்த்துகளும் ,மனமகிழ்ச்சியும் தான் நமக்கான பலனைக் கொடுக்கிறது. அவ்வாறு கோவிலுக்கு காணிக்கையாக எவ்வளவு பொருட்களை வேண்டுமானாலும் வாங்கிக் கொடுக்கலாம். ஆனால் தவறியும் கூட இந்த பொருட்களை கோவிலில் இருந்து எடுத்து வரக்கூடாது. இவ்வாறு செய்வது நாம் செய்த பிராய்சித்தத்திற்கு பலனில்லாமல் செய்து விடும். அவ்வாறு என்னென்ன பொருட்களை கோவிலில் இருந்து கொண்டு வரக்கூடாது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இன்று வரையிலும் கோவிலுக்கு செல்லும்போது என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? எப்படி இறைவனை வணங்க வேண்டும்? இவ்வாறான பூஜைகளை எப்படி செய்ய வேண்டும்? இப்படிப்பட்ட காணிக்கைகளை எவ்வாறு செய்ய வேண்டும்? என்ற பல கேள்விகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

- Advertisement -

“சிவன் சொத்து குல நாசம்” சிவன் கோவிலுக்குச் சென்று வரும்போது அங்கு கொடுக்கும் விபூதியை கூட வீட்டிற்கு கொண்டு வரக்கூடாது என்று சிலர் கூறுவார்கள். அதேபோல் ஒரு சிலர் தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பிறகு கோவிக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் கொடுப்பார்கள். அப்படி கொடுக்கப்படும் பிரசாதத்தையும் வீட்டிற்கு கொண்டு வரக் கூடாது என்றும் சிலர் சொல்வதுண்டு. இவ்வாறு எதைச் செய்வது எதைச் செய்யக்கூடாது என்ற புரிதல் இல்லாமலேயே பலரும் இருக்கின்றனர்.

அவ்வாறு கோவிலில் நாம் வேண்டி பிரசாதம் கொடுக்கும் பொழுது அந்த பிரசாதத்தை மீதம் செய்து அதனை வீட்டிற்கு கொண்டு வரக்கூடாது. இப்படி செய்வதால் நாம் செய்த பிராய்சித்தத்திற்கு பலன் இல்லாமல் போய்விடும். அடுத்ததாக ஒவ்வொரு கோவிலிலும் தலவிருட்சம் என்று ஒன்று இருக்கும். அந்த விருட்சத்தில் இருந்து இலை, பூ, தண்டு இவற்றை கிள்ளி எடுத்து வீட்டுக்குக் கொண்டு வரக்கூடாது. இவ்வாறு செய்வது உங்கள் குடும்பத்திற்கு நன்மையை கொடுக்காது.

- Advertisement -

அடுத்ததாக நாம் வேண்டிக்கொண்டு கோவிலுக்கு செய்ய நினைக்கும் வேண்டுதலை தவறாமல் செய்து விடவேண்டும். அதனை மாற்றம் செய்து செய்யக்கூடாது. நாம் செய்த வேண்டுதல் ஒன்றாகவும், செய்யும் காணிக்கை ஒன்றாகவுமாக இருக்கக் கூடாது. இதற்கும் எந்தவித பலனும் கிடைத்து விடாது. அதேபோல் சிவன் கோவிலிலோ அல்லது மற்ற கோவிலிலோ கொடுக்கப்படும் விபூதி, குங்கும பிரசாதத்தை வீட்டிற்கு கொண்டு வரலாம். இதில் எந்த ஒரு தவறும் கிடையாது.

அதேபோல் கோவிலில் பிரசாதமாக அந்த கோவிலின் தல விருட்ச மரத்தின் இலை, பூவை பிரசாதமாக கொடுத்தால் அதனை வீட்டிற்கு கொண்டு வரலாம். அடுத்ததாக சனிக்கிழமை சனிபகவானுக்கு வேண்டிக்கொண்டு, பிரசாதமாக கொடுக்கப்படும் எள்ளு சாதத்தை வாங்கிக் உண்ணலாமே தவிர அதனை வீட்டிற்குக் கொண்டு வரக்கூடாது.

- Advertisement -