குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது உங்கள் வீட்டில் இருந்து, இதை மட்டும் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். குலதெய்வம் மனநிறைவோடு உங்களை வரவேற்கும்.

kula-dheivam
- Advertisement -

அந்த காலத்தில் நாம் பின்பற்றி வந்த பழக்கவழக்கங்களில் நிறைய இன்று மாறிவிட்டது. அந்த வரிசையில் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது நம்முடைய முன்னோர்கள் எந்த பொருளை அவசியமாக கொண்டு சென்றார்கள் என்பதை பற்றி நினைவு கூறவே இந்த பதிவு. பல வருடங்களுக்கு முன்பு குல தெய்வத்திற்கும் பக்தர்களுக்கும் இடையே இருந்த உறவு, ஒரு குடும்ப உறவாக தான் இருந்தது. அதாவது குலத்தைக் காக்கும் குல தெய்வத்தை தங்கள் குடும்பத்தில் உள்ள உயிருள்ள ஒரு உறுப்பினராக தான் கருதினார்கள்.

kuladheivam

குலதெய்வ கோவிலுக்கு செல்பவர்களுடைய மனதில், நம் குல தெய்வத்தை தரிசனம் செய்யப் போகின்றோம். குலதெய்வத்தை காணப் போகின்றோம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதேபோல்தான் குல தெய்வத்திற்கும், தன்னுடைய குடும்பம் தன்னை வந்து காணப் போகின்றது என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.

- Advertisement -

அந்த காலத்தில் குலதெய்வ கோவிலுக்கு செல்பவர்கள் கட்டு சோறு இல்லாமல் செல்லவே மாட்டார்கள். ஏனென்றால் அந்த காலத்தில் ஹோட்டல் வசதிகள் எல்லாம் கிடையாது. குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது தங்களுடைய வீட்டில் தங்களுடைய கையால் சமைத்த சாப்பாட்டை எடுத்து செல்லும் வழக்கம் அவர்களிடம் இருந்தது.

kuladheivam

இப்படியாக அவர்கள் கட்டி செல்லும் அந்த கட்டு சோறு என்பது அவர்களுக்காக மட்டுமானது கிடையாது. குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது எடுத்துச் செல்லக்கூடிய அந்த சாதத்தை, அந்த குடும்ப உறுப்பினர்கள் சாப்பிடுவதற்கு முன்பாக அதிலிருந்து ஒரு பிடியை எடுத்து ஒரு வாழை இலையில் வைத்து தங்களுடைய குல தெய்வத்திற்கு சமர்ப்பணம் செய்வார்கள்.

- Advertisement -

பாசத்தோடு நாம் எடுத்துச் செல்லும் இந்த கட்டுச்சோறு சாப்பாடில் இருந்து ஒரு பிடி சாதத்தை குலதெய்வத்திற்கு தனியாக எடுத்து நாம் வைத்து விட்டால், அந்த சாதத்தை நம் வீட்டு குல தெய்வம் பறவை ரூபத்திலேயே, விலங்கு ரூபத்திலேயே, ஈ எறும்பு ரூபத்திலேயே வந்து சாப்பிடும் என்ற நம்பிக்கை அவர்களிடத்தில் இருந்தது.

அப்படி இல்லையென்றால் நாம் எடுத்துச் செல்லும் சாதத்தில் இருந்து ஒரு பகுதியை எச்சில் படாமல் எடுத்து வைத்து ஒரு ஏழைக்கு கூட தானமாக கொடுக்கலாம். அந்த ஏழையின் ரூபத்திலும் குலதெய்வம் அந்த பிரசாதத்தை ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கையும் அந்த காலத்தில் வாழ்ந்த நம்முடைய முன்னோர்களிடத்தில் இருந்து வந்தது.

- Advertisement -

Amman

நம் வீட்டு குலதெய்வம் நாம் கொடுக்கப்போகும் இந்த ஒரு பிடி சாதத்தில், தான் நமக்கு வரங்களை வாரி வழங்கப் போவது கிடையாது. இருப்பினும் அந்த இடத்தில் நம்மிடம் இருக்கும் பக்தியும் அன்பும் குலதெய்வத்தின் மனதை நிறைவடைய செய்யும் என்பதே இதனுடைய உள்ளர்த்தம். பசி என்பது நமக்கு மட்டுமல்ல நம்முடைய குல தெய்வத்திற்கும் தான் உண்டு என்ற எண்ணம் அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் இடத்தில் உண்மையாக இருந்தது.

pachai-amman

இப்படியாக ஒரு உணர்வுப்பூர்வமான நெருக்கத்தினை குலதெய்வத்திடம் வைத்து வந்தார்கள் நம்முடைய முன்னோர்கள். ஆனால் இந்த காலத்தில் இதெல்லாம் சாத்தியமா என்று பார்த்தால் நிச்சயம் இல்லை. இருப்பினும் உங்களுடைய வீட்டிலிருந்து நீங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லும்போது, உங்கள் கைகளால் உங்களால் இயன்ற சாதத்தை சமைத்து அதை எடுத்து சென்று, இயலாமல் இருக்கும் யாராவது ஒருவருக்கு அதை தானமாக கொடுத்து விடுங்கள்.

kuladheivam 1

அதன் பின்பு குல தெய்வத்திற்கு அபிஷேகம் செய்வது கிடா வெட்டுவது பொங்கல் வைத்தல் எதுவாக இருந்தாலும் அந்தப் பிரார்த்தனையை நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளலாம். இந்த முறைப்படி குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் நிச்சயமாக உங்கள் வீட்டு குல தெய்வம் மனமகிழ்ச்சி அடையும். உங்கள் குடும்பத்திற்கு மனநிறைவோடு அருளாசியை அள்ளி வழங்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -