திடீரென குரங்காக மாறும் விசித்திர சாமியார் – வீடியோ

Kurangu samiyar

மனிதர்கள் குரங்கில் இருந்து தோன்றியவர்கள் தான் என்று விஞ்ஞானம் கூறுகிறது. இந்துக்கள் பலர் குரங்கை தெய்வமாகவும் வணங்குகின்றனர். குரங்கு ரூபத்தில் இருக்கும் அனுமனுக்கு உலகெங்கும் பல கோவில்கள் இருப்பதையும் அங்கு பல லட்சம் பக்தர்கள் தினம்தோறும் செல்வதையும் நாம் காண்கிறோம். இதெல்லாம் ஒருபுறம் இருக்க அனுமன் கோவிலில் உள்ள சாமியார் ஒருவர் திடீரென குரங்கை போல் மாறி பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். இதோ அதன் வீடியோ காட்சி.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பூண்டி காலனி என்னும் ஊரில் உள்ளது ஒரு அனுமன் கோவில். இந்த கோவிலில் பூஜை செய்யும் சாமியார் சனிக்கிழமை தோறும் குரங்கை போல மாறி வருகிறார். இவருடைய பெயர் துறை ஆறுமுகன். இவரும் இவருடைய மனைவியும் இந்த கோவிலை கவனித்து வருகின்றனர். ஆரம்பகாலத்தில் எலெக்ட்ரிசியனாக வேலை செய்த இவரின் வாழ்க்கையில் ஒரு திரும்பு முனை ஏற்பட்டுள்ளது.

ஒரு விபத்தில் குரங்கு ஒன்று இறந்துள்ளது. அந்த குரங்கை இவர் தன் சொந்த செலவில் அடக்கம் செய்து அதற்கான பூஜையையும் 48 நாட்கள் செய்துள்ளார். அப்படி பூஜை செய்கையில் இவருக்கு அனுமனின் அருள் கிடைத்துள்ளது. அதோடு அவர் குடும்பத்தில் இருந்த தீரா பிரச்சனைகள் பல தீர்ந்துள்ளன. அதன் பிறகு இவர் அனுமனுக்கு கோவில் கட்டி உள்ளார். அதோடு சனிக்கிழமைகளில் அந்த கோவிலிற்கு வரும் பக்தர்களை இவர் ஆசிர்வதிக்கிறார்.

சனிக்கிழமைகளில் இவருக்கு அருள் வரும் சமயங்களில் நூற்றிற்கும் மேற்பட்ட கற்பூரங்களை தனது கைகளாலேயே ஏற்றுகிறார். இவரை காண வரும் பக்தர்கள் அனைவரும் ஒரு கற்பூரதோடு தான் வருகிறார்கள். அந்த கற்பூரத்தை தான் அவர் ஏற்றுகிறார். அதோடு அன்று ஒரு நாள் மட்டும் பத்து பதினைந்து நிமிடங்கள் வரை ஆணி செருப்பில் நடக்கிறார்.