மீதமான சாதத்தில் சூப்பர் முறுக்கு ரெசிபி உங்களுக்காக. முறுக்கு மாவில் செய்தாலும் கூட இப்படி ஒரு முறுக்கை சுட்டு எடுக்க முடியாது.

murukku3
- Advertisement -

அரிசி மாவில் செய்யும் முறுக்கு கூட இந்த அளவிற்கு சூப்பராக வராது. ஆனால் மீதமான சாதத்தை வைத்து இப்படி ஒரு முறை முறுக்கை சுட்டு எடுத்துப் பாருங்கள். இதன் சுவை மொறுமொறுவென அட்டகாசமாக இருக்கும். அதேசமயம் மீதமான சாதத்தை நாம் வீணாகாமலும் இருக்கலாம். சரி பழைய சாதத்தில் முறுக்கு எப்படி செய்வது நேரத்தைக் கடத்தாமல் இப்போதே தெரிந்து கொள்வோமா.

rice

முதலில் மீதமான சாதம் – 1 கப், கடலை மாவு – 1/4 கப், அரிசி மாவு – 1/4 கப், பொட்டுக்கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எள்ளு, சீரகம் – 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன். மீதமான சாதத்தை எந்த கப்பல் அளந்து எடுத்துக்கொள்கிறீர்களோ, அதே கப்பில் மற்ற பொருட்களையும் அளந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் மீதமான சாதத்தை போட்டு கெட்டியாக மொழுமொழுவென அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்றாமல் சாதத்தை அரைக்க முடியவில்லை என்றால், 1 ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, சாதத்தை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். மிக்ஸியில் அரைத்த இந்த சாதத்தை தனியாக ஒரு பௌலில் மாற்றிக் கொள்ளுங்கள்.

muruku1

அரைத்த இந்த சாதத்துடன், கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு, எள்ளு, சீரகம், மிளகாய் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் முதலில் பிசைந்து பாருங்கள். சாதத்தில் இருக்கும் தண்ணீரோடு சேர்த்து பிசைந்தால் முறுக்கு மாவு பதத்திற்கு வந்துவிடும். தேவைப்பட்டால அளவோடு தண்ணீரை தெளித்து மாவு பிசைந்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான். நமக்கு தேவையான முறுக்கு மாவு தயார்.

- Advertisement -

முறுக்கு மாவு ரொம்பவும் தளதளவென இருக்கக் கூடாது. முறுக்கு மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால் அரிசி மாவையும் கடலை மாவையும் கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள். தள தளவென இருக்கும் முறுக்கு மாவில் முறுக்கை எண்ணெயில் பிழிந்தால், எண்ணெய் குடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

muruku4

முறுக்கு அச்சில் உள்ளே எண்ணெய்யை லேசாக தடவிக் கொள்ளுங்கள். அதன் பின்பு தயாராக வைத்திருக்கும் முறுக்கு மாவை சிறு பாகங்களாக பிரித்து கொள்ள வேண்டும். எண்ணெய் தடவிய முறுக்கு அச்சில் மாவைப் போட்டு, ஜல்லிக்கரன்டியின் பின்பக்கம் கொஞ்சம் எண்ணெயை தடவி முறுக்கினை பிழிந்து, அதை அப்படியே சூடான எண்ணெயில் விட்டு மிதமான தீயில் பொரித்து எடுத்தால் மொறு மொறு முறுக்கு தயாராகிவிடும். அவ்வளவு தான்.

muruku2

மீதமான சாதம் முறுக்காக மாறிவிட்டது. இந்த முறுக்கை சுவைத்துப் பாருங்கள். நிச்சயமாக முறுக்கு மாவில் செய்த முறுக்கை விட, இந்த முறுக்கு மிகமிக சுவையாகத்தான் இருக்கும். மீதமான சாதத்தில் செய்த முறுக்கா இது, என்று அனைவரும் கேட்பார்கள். அந்த அளவிற்கு ருசியாக இருக்கும். ஒரு முறை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -