நம்முடைய தலைமுடியில் பலவிதமான பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு விதமான தீர்வுகள் என்பது இருக்கத்தான் செய்கிறது. அந்த தீர்வுகளை தெரிந்து கொண்டு அதற்கேற்றால் போல் முயற்சி செய்தோம் என்றால் அந்தப் பிரச்சினையில் இருந்து நம்மால் வெளியில் வர முடியும். அந்த வகையில் நமக்கு இருக்கக்கூடிய மிகவும் கொடுமையான பிரச்சினை என்றால் அது பேன் பிரச்சனை தான். ஒருவருடைய தலையில் பேன் என்பது வந்து விட்டால் அவர்களால் அதை சமாளிக்கவே முடியாது என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட பேன் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கு எந்த முறையில் தலைக்கு குளிக்க வேண்டும் என்றுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
பேன் தொல்லை நீங்க
ஒருவருடைய தலையில் ஒரே ஒரு பேன் வந்து விட்டாலே போதும். அது பல்கி பெருகி தலையில் பேன் ஈறு என்று அனைத்தும் உண்டாகிவிடும். இதன் மூலம் நமக்கு தலையில் மிகவும் மோசமான அரிப்பு ஏற்படும். இதனால் நம்முடைய தலைமுடி உதிர்வதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். மேலும் வெளியில் செல்லும்பொழுது பேன் தொல்லையால் பலவிதமான இடையூறுகளுக்கும், அசவுகரியத்திற்கும் ஆளாக வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
இவற்றை நீக்குவதற்கு இன்றைய காலத்தில் கெமிக்கல் நிறைந்த மருந்துகள் பல இருக்கின்றன. அதை நாம் உபயோகப்படுத்தும் பொழுது நம்முடைய தலையில் இருக்கக்கூடிய பேன் என்பது போய்விடும் என்றாலும் ஒரு சில நாட்களுக்கு பிறகு மறுபடியும் பேன் வருவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். அதோடு மட்டுமல்லாமல் அதில் இருக்கக்கூடிய கெமிக்கலால் நம்முடைய தலைமுடிக்கு பலவிதமான பிரச்சனைகளும் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். இந்த பிரச்சனைகள் வராமல் தவிர்ப்பதற்கு இயற்கையிலேயே நமக்கு கிடைக்கக்கூடிய சில பொருட்கள் நம் தலையில் இருக்கக்கூடிய பேன் பிரச்சினையை நீக்கும். அதை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
இந்த பேன் தொல்லையை நீக்குவதற்கு பெரிதும் நமக்கு உதவி செய்வது இஞ்சி. மேலும் இந்த இஞ்சியை நம்முடைய தலையில் பயன்படுத்துவதன் மூலம் பொடுகு பிரச்சனையும் தீரும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் நம்முடைய தலை முடிக்கு ரத்த ஓட்டம் என்பது அதிகரிக்கும். அதனால் தலை முடி உதிர்தல் பிரச்சினையும் தீரும் என்றே கூறலாம். இஞ்சி மட்டுமே நாம் தனியாக நம்முடைய தலைக்கு தடவக்கூடாது. அதனுடன் இன்னும் சில பொருட்களை கலந்து உபயோகப்படுத்தினால் தான் அதன் பலனை நம்மால் முழுமையாக அனுபவிக்க முடியும்.
அந்த பொருட்கள்தான் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தண்ணீர். நம்முடைய தலைமுடிக்கு ஏற்றார் போல் இஞ்சி சாறை எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக இரண்டு ஸ்பூன் அளவிற்கு இஞ்சி சாரை எடுத்துக் கொள்கிறோம் என்று வைத்துக் கொண்டால் அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை பழச்சாறு, ஒரு ஸ்பூன் அளவிற்கு சாதாரண தண்ணீரை ஊற்ற வேண்டும். இவை மூன்றையும் நன்றாக கலந்த பிறகு நாம் நம்முடைய தலைக்கு எந்த ஷாம்புவை பயன்படுத்துவோமோ அந்த ஷாம்புவை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது எப்போதும் போல் தலைக்கு குளிப்பது போல் தலையில் இந்த தண்ணீரை பயன்படுத்தி நன்றாக மசாஜ் செய்து கொள்ளுங்கள். 5 லிருந்து 10 நிமிடம் இது அப்படியே தலையில் இருக்கட்டும். பிறகு எப்பொழுதும் தலைக்கு அலசுவது போல் அலசி விட வேண்டும்.
வாரத்தில் இரண்டு நாட்கள் நாம் தலைக்கு குளிப்போம் என்றால் இந்த முறையில் தலைக்கு குளிக்கும் பொழுது நம் தலையில் இருக்கக்கூடிய பேன் பிரச்சினை என்பது படிப்படியாக குறைந்து முற்றிலும் நீங்கிவிடும். மேலும் புதிதாக எந்தவித பேன் தொல்லையும் வராது என்பதுதான் குறிப்பிடத்தக்கது. இதில் இஞ்சி சாறை நாம் எடுக்கும் பொழுது இஞ்சியின் தோலை நீக்கிய பிறகுதான் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே:முகம் பளிச்சென்று இருக்க இரவு டிப்ஸ்
நம்முடைய தலையில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு பிரச்சினைக்கும் இயற்கையிலேயே பல வழிகள் இருக்கின்றன. அதை சரி செய்வதற்கு இயற்கையிலேயே பல வழிகள் இருக்கின்றன. அந்த வழிகளை கண்டறிந்து அதை உபயோகப்படுத்தி இயற்கையான முறையில் நம்முடைய தலைமுடிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் அந்த பிரச்சினைகளை சரி செய்து கொள்ளலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.