1 துண்டு தேங்காய் இல்லாமல் ‘தேங்காய் தண்ணி சட்னி’ மதுரை ஸ்டைலில் 10 நிமிடத்தில் செய்வது எப்படி?

madurai-thanni-chutney1
- Advertisement -

தேங்காய் சட்னி என்றாலே பலருக்கும் அலர்ஜியாக இருக்கும். இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னியை விட காரச் சட்னி தான் எல்லோருக்கும் அதிகம் பிடிக்கும். தேங்காய் சேர்த்தால் நெஞ்சு கரிப்பு ஏற்படும் என்பதால் பலரும் அதனை தவிர்த்து விடுவது உண்டு. இப்படி தேங்காய் பிடிக்காதவர்கள் எளிய முறையில் மதுரை ஸ்டைலில் தேங்காய் சேர்க்காமல் தேங்காய் சட்னியை எப்படி செய்வது? இதனை மதுரை தண்ணி சட்னி என்றும் கூறுவார்கள். அதை நாமும் எப்படி செய்யலாம்? என்பதை இனி வரும் பத்திகளில் காண்போம்.

madurai-thanni-chutney

‘மதுரை தண்ணி சட்னி’ செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 2, சின்ன வெங்காயம் – 7, பொட்டுக்கடலை – கால் கப், பச்சை மிளகாய் – 10, வர மிளகாய் – 2, கடுகு – கால் டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு, எண்ணெய் – தேவையான அளவிற்கு.

- Advertisement -

‘மதுரை தண்ணி சட்னி’ செய்முறை விளக்கம்:
மதுரை என்றாலே மல்லிப் பூவை போல இட்லிக்கும் பிரசித்தி பெற்றதாகும். இட்லிக்கு மட்டுமல்லாமல் இந்த வகையான தண்ணி சட்னிக்கு கூட பிரசித்தி பெற்றது தான் மதுரை. ரொம்ப ரொம்ப சுலபமான முறையில் அதீத சுவையுடன் கூடிய இந்த மதுரை தண்ணி சட்னி எப்படி செய்வது? முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெயை விட்டு கொள்ளுங்கள்.

madurai-thanni-chutney2

எண்ணெய் நன்கு காய்ந்து வந்ததும் அதில் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை மிளகாயை காம்பு நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய் வதங்கியதும் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் நன்கு சுருள வதங்கியதும் அடுப்பை அணைத்து ஆற வைத்து விடுங்கள். மிக்ஸி ஜாரில் ஆறிய இந்த பொருட்களை சேர்த்து அதனுடன் கால் கப் அளவிற்கு பொட்டு கடலை மற்றும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது நன்கு தாராளமாக இரண்டு டம்ளரிலிருந்து மூன்று டம்ளர் வரை தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர் அதே கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து விடுங்கள். பொடிப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக கரிய விடுங்கள். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு நீங்கள் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்துக் கொள்ளுங்கள்.

madurai-thanni-chutney3

அடுப்பை அணைத்து விடாமல் சட்னியை ஊற்றி விடக்கூடாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். அந்த கடாயின் சூட்டிலேயே சட்னியை கிளறி இறக்கி இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பஜ்ஜி, சொஜ்ஜி, பணியாரம் என்று எதற்கு தொட்டுக் கொண்டாலும் அவ்வளவு அருமையான, அட்டகாசமான, சுவையுடன் கூடிய தேங்காய் சேர்க்காத தண்ணி சட்னி தயாராகி இருக்கும். அபாரமான ருசியில் இருக்கும் இந்த சட்னி செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்ளப் போவதில்லை வித்தியாசமான முறையில் நீங்களும் ஒருமுறை செய்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -