நம்முடைய கஷ்டங்கள், கவலைகள், பிரச்சனைகள், எல்லாவற்றையும் ஒரு நொடிப் பொழுதில் தீர்க்கும் மேஜிக் பரிகாரம்.

temple-magic

நம்முடைய வீட்டில் சதாகாலமும் கஷ்டம், சதாகாலமும் கவலை, சதாகாலமும் பிரச்சனை, எந்நேரமும் எதையோ இறந்து விட்டது போலவே சிலர் இருப்பார்கள். பார்க்கப் போனால் பிரச்சினை என்பது ஒன்று இருக்கவே இருக்காது. எதை எதையோ அவர்களாகவே நினைத்துக் கொண்டு, அவர்களாகவே யூகித்துக் கொண்டு இல்லாத பிரச்சனையை இருப்பது போல் நினைத்து பாரத்தை தலைக்கு மேலே ஏற்றி வைத்துக் கொண்டிருப்பார்கள். நிறைய மனிதர்களுக்கு இப்படிப்பட்ட பழக்கம் இருக்கிறது. இப்படிப்பட்ட குணம் கொண்டவர்களை சித்த பிரம்மை பிடித்தவர்கள், பைத்தியம் என்று கூட கூறுவார்கள். ஆனால் அப்படியெல்லாம் இல்லை. இவர்களும் சாதாரண மனிதர்களைப் போன்று தான். ஆனால் சிந்தனையில் எப்போதும் எதிர்மறை எண்ணங்களை வைத்திருப்பதால் தான் இந்த பிரச்சனை வருகிறது. இப்படிப்பட்டவர்களை சுலபமாக சரிசெய்துவிடலாம்.

nellaiyappar-temple

முதலில் இந்த குணம் படைத்தவர்கள் தனிமையில் இருக்கக்கூடாது. தனிமையில் இருந்தால் தான் சிந்தனை பல கோணங்களில் செல்லும். முடிந்தவரை வீட்டில் இவர்களுடன் யாராவது ஒருவர் இருக்கும் சூழ்நிலையை உண்டு பண்ணவேண்டும். வீட்டிலேயே அடைந்து கிடக்காமல் கோவில், கடைவீதி இப்படி எங்காவது சென்று வரலாம். அக்கம்பக்கத்தினரிடம் பேசும் பழக்கத்தை வைத்துக்கொள்ளலாம். குறிப்பாக எந்த வீட்டில் குழந்தை இருக்கின்றதோ, அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனைகள் வராது. இப்படி எல்லாம் செய்தால் இவர்களது சிந்தனை தேவையற்ற எதிர்மறை எண்ணங்களுக்கு செல்லாமல் இருக்கும். இவர்களும் சாதாரண மனிதர்களைப் போல் இயல்பாக இருப்பார்கள்.

அடுத்ததாக பிரச்சனைகள் உண்மையாகவே இருக்கிறது. சமாளிக்க முடியவில்லை. எவ்வளவுதான் தைரியத்தோடு எதிர்நோக்கி நின்றாலும் தலைவலியை தந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளுகா பஞ்சம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்ன செய்யலாம்? உங்களுக்கான சுலபமான ஒரு பரிகாரம் தான் இது. நம்பிக்கையோடு செய்து பார்த்தபின் உங்களுக்கு ஒரு மன நிம்மதி கிடைக்கும். அந்த நிம்மதியே  பிரச்சனையை சரி செய்ய தூண்டுகோலாக அமைந்துவிடும் பாருங்கள்!

paper-ink

சனிக்கிழமை அன்று வெள்ளைக் காகிதத்தில், கருப்பு நிறப் பேனா கொண்டு உங்களுக்கு இருக்கும் பெரிய கஷ்டத்தை எழுதி விடுங்கள். அதன்பின்பு கருப்பசாமியை நன்றாக மனதில் நினைத்து வேண்டிக்கொண்டு அந்த பேப்பரை சுருட்டி ஒரு நூலால் கட்டி, மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து உங்களுடைய குறைகள் எல்லாம் தீர்ந்துவிட்டது என்று நினைத்து, அந்த நெருப்பில், குறைகள் எழுதப்பட்ட பேப்பரை பொசுக்கி விடுங்கள். எரிந்த பின் அந்த சாம்பல் அனைத்தையும் எடுத்து குப்பையில் போட்டு விடலாம். உங்களது குறை சிறியதாக இருந்தால் இரண்டு, மூன்று முறை இப்படி செய்தால் சரியாகிவிடும். உங்களது குறை தீராத குறையாகவும், வெகுநாட்கள் சரி செய்ய முடியாத பிரச்சனையாக இருந்திருந்தாலும் 8 வாரங்கள் தொடர்ந்து இப்படி செய்து வர நல்ல பலன் கிடைக்கும். எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும், எங்கு வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம். பரிகாரம் என்று சொல்வதைவிட இது ஒரு மேஜிக். நம்பிக்கையோடு செய்து பாருங்கள் பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே
எப்படிப்பட்ட வசியத்தையும் 5 நாளில் சரி செய்ய இதை சாப்பிட்டால் போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Prachanaigal theera Tamil. Tamil astrology pariharam. Kastam theera pirachanai theera in Tamil. Maya manthiram Tamil.