நாளை (3.9.23) மகா சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகருக்கு இப்படி தீபம் ஏற்றி இந்த மந்திர வழிபாடு செய்யுங்கள். சங்கடங்கள் தீர்ந்து விநாயகரின் அருள் ஆசியை பெற்று செல்வ வளமாய் வாழ நாளைய தினத்தை தவற விட்டால் இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டும்.

vinayagar dheepam
- Advertisement -

இந்த விநாயகர் பெருமான் கடவுள்களில் மட்டும் முழுமுதற் கடவுள் அல்ல. நம்முடைய சங்கடங்கள் துயரங்கள் அனைத்தையும் தீர்த்து நம்மை நல்ல முறையில் வாழ வைப்பதிலும் முழு முதல் கடவுள் அவரே. அத்தகைய சக்தி வாய்ந்த விநாயகரை நாளைய தினம் வரும் மகா சங்கடஹர சதுர்த்தி நாளன்று விரதம் இருந்து இந்த தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து செல்வ செழிப்புடன் வாழ விநாயகர் அருள் புரிவார். அந்த தீப வழிபாட்டு முறையை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

மகா சங்கடஹர சதுர்த்தி என்பது விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரும் தேய்பிறை சதுர்த்தி அன்று கொண்டாடப்படும். மகா என்றால் பெரிய சங்கடஹர என்றால் சங்கடங்களை அறவி தீர்க்கும் என்று பொருள் அத்தகைய நாலு நம்முடைய துன்பங்களை தீர்க்க இந்த தீபத்தையும் மந்திர வழிபாட்டையும் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் நமக்கு அறிவுறுத்துகிறது அந்த வழிபாட்டை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு முறை
இந்த சதுர்த்தி தினத்தன்று காலையில் பிரம்ம முகூர்த்த வேலையில் எழுந்து குளித்து முடித்து பிறகு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு உங்கள் விரதத்தை தொடங்க வேண்டும். எந்த பூஜை விரதம் இருந்து செய்வது மிகவும் சிறப்பு முடியாதவர்கள் எளிமையான உணவை உட்கொண்டு விரதம் இருக்கலாம். இதற்கு நமக்கு 11 அகல் விளக்குகள் தேவை. இதற்கு புதிதாக வாங்க வேண்டும் என்று இல்லை வீட்டில் இருக்கும் பழைய அகலையே கூட தேய்த்து சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளலாம்.

அடுத்து பதினோரு அரச இலை அல்லது வெற்றிலை இரண்டில் எது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அதே போல் விநாயகருக்கு பிடித்தமான நெய்வேதியம் ஏதாவது செய்து கொள்ளுங்கள். இந்த வழிபாடு செய்வதற்கான நேரமும் மிகவும் முக்கியம். இதை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலை 6 மணி முதல் 7.30 மணி வரை 8.15 லிருந்து 9.15 வரை காலை 10.45 முதல் 11.45 வரை மாலை 5.30 மணி முதல் 8.30 வரை இந்த நேரத்தில் உங்கள் வசதிக்கேற்ப ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்து இந்த பூஜையில் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பூஜை செய்ய நீங்கள் எடுத்து வைத்திருக்கும் 11 இலையும் 11 அகல் விளக்கையும் பூஜை அறையில் கிழக்கு அல்லது வடக்கு இரண்டில் ஏதாவது ஒரு திசையில் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல அனைத்து அகலையும் வெற்றிலை அல்லது அரச இலை மேல் வைத்து நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபமேற்றி வைத்து விடுங்கள். வீட்டில் இருக்கும் விநாயகர் படத்திற்கு அருகம்புல் மாலை சாற்றுங்கள். அதன் பிறகு அவருக்கு பிடித்த நெய்வேத்தியத்தை வைத்து வெற்றிலை பாக்கு, பூ, பழம், தேங்காய் என சகலமும் வைத்து பூஜையை உங்களால் முடிந்த வரையில் சிறப்பாக செய்யுங்கள். எல்லாம் செய்த பிறகு இந்த மந்திரத்தை படிக்க வேண்டும்.

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்திஹி ப்ரசோதயாத்

என்ற இந்த மந்திரத்தை 21 முறை பாராயணம் செய்ய வேண்டும். அதன் பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை முடித்து விடுங்கள். இந்த தீபம் குறைந்தது ஒரு மணி நேரம் வரையாவது எரியும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இந்த பூஜை செய்யும் நாளில் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வருவது மேலும் நல்ல பலன்களை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு மந்திரத்தை மனதிற்குள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருங்கள். கெட்ட சிந்தனை, கெட்ட கனவு, மறக்கவே முடியாத துயரத்தை கொடுக்கும் கெட்ட சம்பவங்கள், எதுவுமே நினைவுக்கு வராது.

சங்கடங்களை தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாளன்று இந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையில் நம்மை தொடரும் அனைத்து சங்கடங்களும் தீர்ந்து நிம்மதியாய் வாழ விநாயகர் அருள் புரிவார் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.

- Advertisement -