வெள்ளிக்கிழமையோடு வந்திருக்கும் இந்த அமாவாசை நாளில் மகாலட்சுமி தாயாரின் அருள் பொருந்திய இந்த பொருளை உங்கள் நிலை வாசலில் கட்டி விடுங்கள். பொன் பொருள் அனைத்தும் உங்க வாசலை தேடி வந்து கொண்டே இருக்கும்.

mahalashmi nilaivasal
- Advertisement -

அமாவாசை என்றாலே முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, வீட்டில் இருக்கும் கண் திருஷ்டிகள் போக பரிகாரம் செய்வது போன்றவற்றை தான் நாம் பெரும்பாலும் செய்வோம். ஆனால் இதே அமாவாசையில் பொன்னும் பொருளும் நம்மை தேடி வர மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருளையும் பெறுவதற்கான ஒரு எளிய பரிகாரம் செய்யும் போது நம்முடைய கஷ்டம் எல்லாம் நீங்கி வாழ்க்கை பிரகாசமாக மாறும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த அமாவாசை நாளில் நாம் எதை செய்ய தவறினாலும் முன்னோர்களுக்கு கொடுக்க வேண்டிய திதியையும் அவர்களுக்கான வழிபாட்டையும் தவறாமல் செய்ய வேண்டும். இத்துடன் மாலை வேளையில் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு ஆலயத்திற்கு சென்று தீபம் ஏற்றி உங்களால் முடிந்த யாரேனும் ஒருவருக்கு இன்றைய நாளில் ஒரு வேளை உணவாது வாங்கிக் கொடுக்கும் போது உங்கள் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் அனைத்தும் நீங்கும்.

- Advertisement -

மகாலட்சுமி தாயாரின் அருள் பெற நினைவாசலில் கட்ட வேண்டிய முடிச்சி
வெள்ளிக்கிழமை என்றாலே அது மகாலட்சுமி தாயாருக்கு உகந்த தினம். இன்றைய தினத்தில் அமாவாசையும் சேர்ந்து வந்திருப்பதால் இன்று இந்த பரிகாரத்தை செய்யும் போது நம்முடைய வாழ்க்கை பன்மடங்கு உயரும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் என்று இப்போது பார்க்கலாம்.

இந்த பரிகாரம் செய்வதற்கு முதலில் மஞ்சள் நிற பட்டுத் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் ஒரு கைப்பிடி அளவு உப்பு ஒரு ஐந்து ரூபாய் நாணயம் உங்களிடம் உள்ள சிறிய அளவு தங்கம்,  வெள்ளி போன்ற ஏதேனும் ஒன்றை இதில் வைக்கலாம். அது இல்லை என்றாலும் பரவாயில்லை இந்த மூன்று பொருட்களை மட்டும் வைத்து இந்த மஞ்சள் நிற துணியில் மஞ்சள் நிற நூலால் முடிச்சை கட்டி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு நீங்கள் கட்டிய இந்த மூட்டைக்கு சாம்பிராணி தூபம் காட்டிய பிறகு உங்கள் குலதெய்வம் இஷ்ட தீப மகாலட்சுமி தாயார் அனைவரையும் மனதார நினைத்துக் கொண்டு உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கி பொன்னும் பொருளும் உங்களுக்கு கிடைக்கப் பெற்று நல்ல முறையில் வாழ வழி செய்ய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு இந்த முடிச்சை உங்கள் வீட்டு நிலை வாசலில் கட்டி விடுங்கள். இதை காலையில் 10 லிருந்து 11, மதியம் 1 லிருந்து 2, மாலை 6 லிருந்து 7, இரவு 8 மணியில் இருந்து 9 இப்படியான நான்கு வேளையில் இதை கட்டலாம். இந்த முடிச்சை கட்டுவதில் உள்ள முக்கியமான தகவல் இதை கட்டும் நேரம் நிச்சயம் அம்மாவாசை திதி இருக்க வேண்டும். ஆகவே இங்கு குறிப்பிட்டிருக்கும் நான்கு நேரங்களில் அமாவாசை நேரத்தை கணக்கில் கொண்டு நிலை வாசலில் இந்த மூலிகை கட்டி விடுங்கள்.

- Advertisement -

இந்த முடிச்சு அடுத்த அமாவாசை வரை அப்படியே நிலை வாசலில் இருக்கட்டும். அதன் பிறகு இந்த முடிச்சை கழற்றி உப்பை மட்டும் கால்படாத இடத்தில் போட்ட பிறகு துணியை அலசி காய வைத்து மறுபடியும் உப்பு , ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து மறுபடியும் இதே போல் பூஜை அறையில் வைத்து பூஜை செய்த பின்பு உங்கள் நிலை வாசலில் கட்டி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் மறந்தும் கூட இந்த சில விஷயங்களை செய்யாதீர்கள், தரித்திரம் பிடிக்க வாய்ப்பு உண்டாம்! குடும்பத்திற்கு ஆகவே ஆகாத செயல்கள் என்ன?

இந்த ஒரு முடிச்சு உங்கள் நிலை வாசலில் எப்போதும் இருக்கும் போது மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் எப்போதும் உங்கள் வீட்டில் இருந்து கொண்டே இருக்கும். அது மட்டும் இன்றி பொன்னும் பொருளும் சேர்வதற்கான வாய்ப்பு பல மடங்கு பெருகி, கடன் இல்லாத ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழ இந்த முடிச்சு நல்ல பலன் தரும் என்று நம்பப்படுகிறது. இந்த உப்பு மூட்டை பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள். இன்றைய அமாவாசை நாளிலே இதைக் கட்டி பயன் பெறலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -