யாராலும் அவ்வளவு எளிதில் இந்த விளக்கை மட்டும் வீட்டில் ஏற்றிவிட முடியாது. அப்படி இந்த விளக்கை வீட்டில் ஏற்றி விட்டால், உங்களுக்கு அபரிவிதமான அதிர்ஷ்டம் கிடைக்கும்.

mahalakshmi
- Advertisement -

நிறைய குடும்பத்தில் நீங்கள் நன்றாக கவனித்துப் பாருங்கள். அவர்களுடைய வீட்டில் சாதாரண ஒரு மண் அகல் விளக்கை கூட அவ்வளவு சுலபமாக ஏற்ற முடியாது. வீட்டில் விளக்கு ஏற்ற கூட ஆள் இருக்காது. வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருப்பார்கள். தினம் தினம் வீட்டில் விளக்கு ஏற்றி குலதெய்வத்தையும் லட்சுமி தேவியையும் வழிபாடு செய்யக்கூடிய குடும்பங்கள் எல்லாம் அதிர்ஷ்டம் செய்த குடும்பங்கள்தான். இந்த விளக்கு ஏற்றினால் அதிர்ஷ்டம்! அந்த விளக்கு ஏற்றினால் அதிர்ஷ்டம்! என்ற பாகுபாட்டை ஒதுக்கி வைத்து விடுங்கள். விளக்கு ஏற்றினாலே வீட்டில் அதிர்ஷ்டம் தான். அதிலும் குறிப்பாக இந்த விளக்கை ஏற்றக்கூடிய நேரம் காலம் உங்களுக்கு வந்துவிட்டால் உங்களுடைய குடும்பத்திற்கு எதிர்பாராத ஏதோ ஒரு அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறது என்று தான் அர்த்தம். அப்படி அற்புதம் வாய்ந்த அந்த விளக்கை நம்முடைய வீட்டில் எப்படி ஏற்ற வேண்டும்? பதிவைப் படித்துவிட்டு நாளை வெள்ளிக்கிழமை இந்த விளக்கை ஏடுபவர்களுக்கும் அதிர்ஷ்டம் ஏதோ ஒன்று காத்துக் கொண்டிருக்கிறது.

வெள்ளிக்கிழமை என்றதுமே எல்லோருடைய வீடும் பெரும்பாலும் சுத்த பத்தமாகத்தான் இருக்கும் அல்லவா. காலையில் எழுந்து வாசலில் எப்படியும் கோலம் போட்டு விடுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் காலையில் தலைக்கு குளித்து விடுவீர்கள். கொஞ்சம் முன்பாக இந்த வேலைகளை எல்லாம் செய்ய வேண்டும். அதாவது காலை 6 மணிக்கு முன்பே குளித்துவிட்டு வந்து விடுங்கள்.

- Advertisement -

நிலை வாசல் படிக்கு மேலே மகாலட்சுமியின் பாதங்களை போட வேண்டும். கிருஷ்ணருடைய பாதம் போடுவோம் அல்லவா. அதேபோலத்தான் இரண்டு பாதங்களை நிலை வாசல் படி மேல் போட்டுவிட்டு, அதற்கு மஞ்சள் குங்குமம் போட்டு வைத்து, பூ வைத்து, விடுங்கள். மகாலட்சுமி தேவி வெள்ளிக்கிழமை காலை உங்களுடைய வீட்டிற்கு விரும்பி சந்தோஷமாக நுழைகிறாள் என்பது இதனுடைய அர்த்தம். (கோலம் போடக்கூடிய பச்சரிசி மாவிலேயே இந்த பாதங்களை வரையலாம்.)

அதன் பின்பு நிலை வாசலில் இரண்டு பக்கத்திலும், மண் அகல் விளக்குகளை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி அதில் பச்சரிசி அட்சதை போட்டு விளக்கு ஏற்ற வேண்டும். பச்சரிசி அட்சதைக்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கக்கூடிய அபரிவிதமான சக்தி உள்ளது. ஒரு கைப்பிடி பச்சரிசியில் கொஞ்சமாக நெய் விட்டு, மஞ்சள் பொடி தூவி கலந்தால் பச்சரிசி அட்சதை தயார் அவ்வளவுதான்.

- Advertisement -

பின்பு பூஜை அறைக்கு வந்து உங்கள் வீட்டு காமாட்சியம்மன் விளக்கில் கொஞ்சமாக நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு ஓம் மகாலட்சுமி தாயே போற்றி, ஓம் மகாலட்சுமி தாயே வருக வருக, என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி குடும்ப கஷ்டம் தீர குடும்பம் செழிக்க பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இப்படி ஒரு விளக்கை உங்களுடைய வீட்டில் என்றைக்கு நீங்கள் ஏற்றி இருக்கிறீர்களோ, அன்றைக்கே உங்களுக்கு விடிவு காலம் பிறந்து விட்டது என்று அர்த்தம்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் இந்த வழிபாட்டை மேற் கொண்டால் வீட்டில் நிச்சயமாக பணக்கஷ்டமும் மன கஷ்டமோ வராது. எளிதில் அந்த குடும்பத்திற்கு கெடுதல் நடக்காது. குடும்பம் ஆரோக்கியத்தோடு அமைதியோடு அற்புதமாக சந்தோஷமாக இருக்கும் என்பது நம்பிக்கை. உங்களுடைய வீட்டிலும் இந்த ஒரு விளக்கை தொடர்ந்து ஒரு மூன்று மாதங்கள் ஏற்றி வாருங்கள். பிறகு நீங்களே நினைத்தாலும் இந்த விளக்கு ஏற்றும் வழிபாட்டை உங்களால் நிறுத்த முடியாது. அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசுவதை உணர முடியும். வாழ்வில் நம்ப முடியாத நல்ல முன்னேற்றங்கள் தெரியும். மகாலட்சுமியின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -