வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தாலும் மகாலட்சுமி தேவி இந்த ஒரு வீட்டிற்குள் மட்டும் நுழையவே மாட்டாள்.

mahalakshmi-vilakku
- Advertisement -

மகாலட்சுமியின் அருள் ஆசி ஒரு துளி கூட கிடைக்காத ஒரு வீடா, மகாலட்சுமி நுழையாத வீடு என்றால் அது எந்த வீடாக இருக்கும். மகாலட்சுமி தேவி ஒரு வீட்டில் நுழையவே வில்லை என்றால் நிச்சயமாக அது ஒரு வீடாக இருக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு இடம் இந்த உலகத்தில் இருக்குமா என்ன. நிச்சயம் இருக்கு. மகாலட்சுமிக்கு சுத்தமாக பிடிக்காத வீடு எது என்பதை பற்றிய புத்தம்புதிய ஒரு தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இதுவரை நீங்கள் கேள்விபடாத விஷயம். இதை எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்வீர்கள் என்று தெரியவில்லை. உங்கள் மனதிற்கு கீழே சொல்லப்பட்டிருக்கும் குறிப்பு சரி என்று பட்டால் மட்டும் இந்த விஷயத்தை நீங்கள் பின்பற்றிக் கொள்ளலாம்.

அமைதியான இடத்திற்கு நம்முடைய ஊரில் ஒரு பெயர் உண்டு. அதாவது மயான அமைதி என்று சொல்லுவார்கள். சில வீடு பார்த்தால் குண்டு ஊசி கூட போட்டால் சத்தம் கேட்கும். ரொம்பவும் அமைதியாக இருக்கும். இப்படி ஒரு அமைதியான வீட்டில் நிச்சயமாக மகாலட்சுமி நுழைய மாட்டாள். அதற்காக அடித்து பிடித்து எல்லோரும் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும் என்பது அர்த்தம் கிடையாது.

- Advertisement -

வீட்டிற்குள் எல்லோரும் இருக்கின்றோம். ஆனால் ஒருவருக்கு ஒருவர் பேசுவது கிடையாது. ஆளுக்கு ஒரு மூலையில் அவரவர் வேலையை பார்ப்பது வீட்டில் ஒரு பேச்சு சத்தம் கிடையாது, சந்தோஷமான சிரிப்பு சத்தம் கிடையாது, குழந்தைகளின் விளையாட்டு கிடையாது,  கேட்பதற்கு இனிமையான ஒளி கிடையாது. இப்படி எதையுமே செய்யாமல் வீட்டை தங்கும் விடுதி போல நிறைய பேர் பயன்படுத்துகிறார்கள். (இரவு வந்து தூங்குவது, காலை எழுந்து அவரவர் வேலையை பார்க்க செல்வது.)

இப்படிப்பட்ட வீட்டில் லட்சுமி கடாட்சம் நிச்சயமாக இருக்காது. ஆளாளுக்கு கை நிறைய சம்பாதித்தாலும், அந்த பணம் பிரயோஜனமாக இருக்காது. அதாவது அந்த பணத்தை வைத்து ஒரு நல்ல சுபகாரியங்களை அந்த வீட்டில் செய்ய முடியாது. வரக்கூடிய பணத்தின் ஆடம்பரமான உயிர் இல்லாத விலை உயர்ந்த பொருட்களை வாங்கி வைக்கலாம். வங்கிக் கணக்கில் பல லட்சம் பணம் குவிந்திருக்கலாம். தினமும் ஹோட்டலில் ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள். அந்த சாப்பாட்டில் ஆரோக்கியமும் இருக்காது. இப்படி ஆடம்பரமான வாழ்க்கையே இருந்தாலும் லக்ஷ்மி கடாட்சம் கிடையாது.

- Advertisement -

குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் அடுத்தவர்களோடு அன்போடு பழகி நேரத்தை கழித்து, சந்தோஷமாக சிரித்து விளையாடி, அளவான வருமானத்தோடு சிறிய வீட்டில், ஏதாவது ஒரு வேலையாவது வீட்டில் சமைத்த உணவை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்றாக சாப்பிட்டு மகிழ்ந்து, மகிழ்ச்சியாக வாழக்கூடிய வாழ்க்கையில் மட்டும்தான் லட்சுமி கடாட்சம் இருக்கும். இந்த இடத்தில் மிகக் குறைவான வருமானம் இருந்தாலும் அந்த வீட்டில் லட்சுமி தேவி நிலையாக குடியிருப்பாள். அந்த வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் சரியான நேரத்தில் சரியான முறையில் நடைபெறும்.

இதையும் படிக்கலாமே: நாளை வரும் இந்த ஆயுத பூஜையை வணங்குவதின் நோக்கம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? தெரியாதவர்கள் எளிமையாக தெரிந்து கொள்வதற்காக தான் இந்த பதிவு.

உங்களுடைய வீட்டை எப்போதும் மயான அமைதியோடு வைத்திருக்காதிங்க. சந்தோஷமாக கலகலப்பாக இருக்கும் வீட்டில் மகாலட்சுமியை அழைக்கவே வேண்டாம். தானாக லட்சுமி கடாட்சம் அந்த வீட்டிற்குள் வந்துவிடும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -