தொடர் பிரச்சனைகளால் மன நிம்மதி இல்லாமல் வாடுகிறீர்களா? உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதில் இருந்து விடுபட்டு மன நிம்மதி பெற பரிகாரம்.

Mana nimadhi pera pariharam Tamil
- Advertisement -

மனம் நிம்மதி பெற பரிகாரம்

ஒருவரிடம் எவ்வளவு தான் பணம் இருந்தாலும் மன நிம்மதி என்ற ஒன்று இல்லை என்றால் அவர்களால் சந்தோஷத்துடன் வாழ முடியாது. அதே போல பண தேவையாலும் பலருக்கு மன நிம்மதி இல்லாமல் இருக்கும். அந்த வகையில் ஒருவருக்கு எந்த வகையான பிரச்சனை இருந்தாலும் அதில் இருந்து விடுபட்டு மன நிம்மதி பெற உதவும் ஒரு அற்புதமான பரிகாரம் குறித்து இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

ஒருவரிடம் நேர்மறை ஆற்றல்கள் இருப்பின் அவர்களை சுற்றி எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், அவர்களால் அந்த பிரச்சினையை எளிதாக சமாளித்து மன நிம்மதியுடன் வாழ முடியும். இதுவே அவர்களை சுற்றி அனைத்து செல்வங்களும் இருந்தும் அவர்களிடம் எதிர்மறை ஆற்றல்கள் இருப்பின் அவர்களால் சந்தோஷமாக வாழ முடியாது.

- Advertisement -

மனம் அமைதியுடனும், நிம்மதியுடனும் இருந்தாலே அனைத்து பிரச்சனைகளையும் நம்மால் எளிதில் சமாளித்து விடக்கூடிய திறமை நமக்கு கிடைத்து விடும். அப்படிப்பட்ட மன நிம்மதியை நமக்கு தரக்கூடியதாக விளங்குவது கோவில்களில் இருக்கும் தலவிருட்சம் ஆகும். ஒவ்வொரு கோவில்களும் ஒவ்வொரு விதமான மரத்தை தலவிருட்சமாக கொண்டிருக்கிறது.

தலவிருட்சம் என்பது கோவில் கட்டுவதற்கு முன்பு இறைவன் எழுந்தருளி இருந்த இடமாகும். அதனால் தெய்வத்துக்கு ஒப்பான சக்தி அதற்கு உண்டு. மேலும் கோவில் அமைப்பதற்கு முன்பாகவே இருக்கும் மரத்தை தான் தலவிருட்சம் என்கிறோம். அவற்றில் குறிப்பிடத்தக்கதாக கருதப்படுபவை வில்வம், வன்னி, வேம்பு, அரசு, அத்தி போன்ற மரங்களாகும்.

- Advertisement -

மனம் நிம்மதி பெற என்ன செய்ய வேண்டும்

அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று, அந்தக் கோவிலில் இருக்கும் தல விருச்சத்தை வணங்க வேண்டும். அந்தக் கோவில் எந்த தெய்வத்திற்குரிய கோவிலாக இருந்தாலும் சரி. அதில் எந்த விருட்சம் தலவிருட்சமாக இருந்தாலும் சரி, இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். எல்லா கோவில்களில் இருக்கும் எல்லா தல விருட்சமும் இந்த வழிபாட்டிற்கு உகந்தது தான்.

இதையும் படிக்கலாமே: அம்மாவாசை பெளர்ணமியில் இதை செய்தால் போதும். தீர்க்கவே முடியாத பிரச்சனையும் எளிதாக தீரும்.

காலை ஆறு மணிக்கு அதாவது, சூரிய உதயத்தின் பொழுது பசும்பாலை கொண்டு தல விருட்சத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அவ்வாறு அபிஷேகம் செய்த பிறகு 11 முறை அந்த மரத்தை வலம் வர வேண்டும். பிறகு அந்த இடத்தில் பத்து நிமிடம் அமர்ந்து, எதிலும் கவனம் செலுத்தாமல் தங்கள் மூச்சுக்காற்றிலேயே கவனத்தை செலுத்தி, தங்களுக்குரிய இஷ்ட தெய்வத்தை மனதார நினைத்து அந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு நாம் தினமும் செய்து வர நம்மிடம் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நேர்மறை ஆற்றலாக மாறி நமக்கு மன நிம்மதியையும், சந்தோஷத்தையும் தரும்.

- Advertisement -