வீட்டின் இந்த மூலையில் ஐந்து நிமிடம் கண்களை மூடி அமர்ந்தால், மன நிம்மதி கிடைக்கும். முன்கோபம் குறைந்து, மனம் பக்குவம் அடைய இதை முயற்சி செய்து பாருங்கள்.

vasthu
- Advertisement -

சில பேர் மன நிம்மதியை இழந்து விட்டு தினம் தினம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டிருப்பார்கள். மனதில் எதிர்மறை எண்ணங்கள் இருக்கும். எதையுமே நேர்மறையாக சிந்திக்க முடியாது. கண்களை மூடி ஐந்து நிமிடம் தியானம் செய்யலாம் என்று நினைத்தால், அதுவும் முடியாது. மனதை ஒருநிலைப்படுத்த முடியாமல் நிறைய சிந்தனைகள் அவர்களுடைய நிம்மதியை நிலை குலைக்கும். இப்படிப்பட்ட பிரச்சனை உங்களுக்கு இருக்குதா. தியானம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை, வீட்டில் எந்த இடத்தில் அமர்ந்தால் மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்ய முடியும். இதோ, அதற்கான தீர்வு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் உங்களுக்காக.

மன நிம்மதியை பெற செய்ய வேண்டிய பரிகாரம்:
உங்களுடைய வீட்டில் வட கிழக்கு மூலையில் இருக்கக்கூடிய ஒரு அறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த இடத்தில் அறை இல்லை என்றால் வீட்டின் வடகிழக்கு மூலையில் நீங்கள் கிழக்கு பார்த்தவாரோ அல்லது வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக நீங்கள் அமரும் இடத்திற்கு பக்கத்தில் ஜன்னல் ஏதாவது இருந்தால் அந்த ஜன்னலை திறந்து வைத்துவிட்டு அந்த வெளிக்காற்று வீசும் இடத்தில் வடகிழக்கு மூலையில் அமர்ந்து ஐந்து நிமிடம் கண்களை மூடி கொள்ளுங்கள். மூச்சை உள்வாங்கி வெளி விடுங்கள் போதும்.

- Advertisement -

மூச்சை இழுக்க வேண்டும். ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து என்று எண்ணிக் கொள்ளுங்கள். பிறகு மூச்சை வெளியே விடும்போது, ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து வரை எண்ணுங்கள். இப்படி வெறும் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டு மனதை அமைதிப்படுத்தி ஒரு வாரம் இந்த தியானத்தை மேற்கொண்டாலே உங்களுடைய மனது ஒரு கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். இந்த தியானத்தை அதிகாலை வேலை சூரிய உதயத்திற்கு முன்பு 5 மணிக்கு செய்தால் ரொம்ப ரொம்ப நல்லது.

முன்கோபம் நிறைய வருகிறது. பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியவில்லை. எதிர்மறை எண்ணங்களால் சிந்தனை அலைபாய்கிறது என்பவர்கள் எல்லாம் இப்படி ஒரு தியானத்தை வடகிழக்கு மூலையில் அமர்ந்து செய்யும் போது உங்களுடைய மனதளவில் நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

- Advertisement -

வடகிழக்கு மூலையை தவிர்த்து விட்டு மற்ற இடங்களில் அமர்ந்தால் தியானம் செய்ய முடியாதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டாம். எந்த இடத்தில் அமர்ந்தாலும் மனதை ஒருநிலைப்படுத்த முடியும் என்பவர்கள் தியானம் செய்ய முடியும். ஆனால் மனதையே ஒருநிலைப்படுத்த முடியவில்லை என்று கஷ்டப்படுபவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள ஆன்மீகம் சார்ந்த பதிவு இது.

இதையும் படிக்கலாமே: செய்யும் வேலையில் ப்ரமோஷன் மேல் பிரமோஷன் கிடைத்து, உங்க மேல் அதிகாரிகளின் சீட்டில், நீங்க உட்கார வேண்டும் என்ற ஆசை, உங்களுக்கு இருக்குதா? புதன்கிழமை இந்த 1 பொருளை மட்டும் வாங்குங்க போதும்.

இந்த பயிற்சியை ஒரு நாள், இரண்டு நாள் செய்துவிட்டு பலனை எதிர்பார்க்கக் கூடாது. தினமும் தொடர்ந்து 48 நாட்கள் இந்த பயிற்சியை மேற்கொண்டு வந்தால் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒரு நல்ல மாற்றம் உங்களுடைய மனதில் ஏற்படும். அதை நிச்சயம் நீங்கள் உணர்வீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற கருத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -