தீராத மன உளைச்சலில் இருந்து வெளிவர கோவிலுக்கு இந்த 1 பொருளை மட்டும் வாங்கி தானம் கொடுத்துக் கொண்டே இருங்கள். உங்கள் மனது அப்படியே, சாந்தமாகி நிம்மதியாகிவிடும்.

vibuthi
- Advertisement -

பிரச்சனைகள் எவ்வளவு தான் வந்தாலும், அதை சமாளித்து விடலாம். நம்முடைய மனது தெளிவாக இருக்கும் வரை. நம்பிக்கையாக இருக்கும் வரை. அதுவே பிரச்சனைகளை கண்டு நம்முடைய மனம் சோர்ந்து போய் துவண்டு போய், மன உளைச்சலுக்குள் நாம் விழுந்து விட்டால், நம்மை தூக்கி விட அந்த ஆண்டவனே வந்தாலும் நிச்சயமாக நம்மால் மீண்டு எழுவே முடியாது. மன உளைச்சலுக்கு அவ்வளவு சக்தி உண்டு. எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் மனதை மட்டும் குழம்ப விடக்கூடாது. குழப்பம் இல்லாத தெளிவான மனது ஒன்று இருந்தால் போதும், எப்போதும் தெளிந்த ஓடை போல வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கும்.

மனதை தெளிவுபடுத்தும் ஆன்மீக குறிப்புகள்:
நம்முடைய மனதை தெளிவாக வைத்துக்கொள்ள வேண்டும். எப்போதுமே மனதில் இருள் சூழக் கூடாது என்றால் என்ன செய்யலாம். ஆன்மீகம் சார்ந்த ஒரு சில குறிப்புகளை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். தினமும் காலையில் எழுந்து மனதை ஐந்து நிமிடம் அமைதிப்படுத்தி நெற்றியில் நீர் பூசிக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் என்னதான் ஆட்டம் ஆடினாலும் நம்முடைய வாழ்க்கை இந்த ஒரு கைப்பிடி சாம்பலாக போகின்றது என்பதை நினைத்து கண்களை மூடி அமர்ந்து 5 நிமிடங்கள் ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை தியான நிலையில் உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்து உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய கோவிலுக்கு விளக்கு ஏற்ற நல்லெண்ணெயை உங்களால் முடிந்தவரை வாங்கி தானம் கொடுக்கலாம். சிவன் கோவிலுக்கு சுத்தமான பசு சான விபூதி தானமாக வாங்கி கொடுக்கலாம். குறிப்பாக பராமரிப்பு இல்லாத கோவில்களில் நீங்கள் முயற்சி செய்து அந்த கோவிலில் தினமும் விளக்கு ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்து விட்டீர்கள் என்றால், அதில் கிடைக்கும் மன நிறைவு வாழ்க்கையில் உங்களை உயரத்தில் கொண்டு சேர்த்து விடும்.

இல்லாதவர்களுக்கு தானம் கொடுப்பதில் இருக்கும் திருப்தி வேறு எதிலும் நமக்கு கிடைப்பது கிடையாது. இல்லாதவர்கள் நாம் கொடுத்த தானத்தை பெற்று பயனடைந்தாலே போதும். நம் பிறவி பலனை நாம் அடையலாம். இந்த தானத்தில் இருக்கக்கூடிய சந்தோஷத்தை கோடி ரூபாய் பணத்தாலும் நமக்கு கொடுக்க முடியாது. இருக்கிறதை இல்லாதவர்களுக்கு கொடுத்து பார்ப்பது தானே அழகு.

- Advertisement -

உங்கள் கைகளால் இல்லாதவர்களுக்கு ஏழை எளியவர்களுக்கு முடிந்த தானத்தை செய்யுங்கள். அன்னதானம், ஆடை தானம், செருப்பு தானம், குடை தானம், போர்வை தானம், பழங்கள் தானம், இப்படி யாருக்கு என்ன தேவையோ, அதை தேடி கொண்டு போய் தானமாக கொடுத்து, அதை அவர்கள் பயன்படுத்தும்போது, உங்களை வாழ்த்தும்போது உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் தூள் தூளாக போய்விடும்.

இதையும் படிக்கலாமே: இதை மட்டும் செய்தால் போதும். நீங்கள் 90ஸ் கிட்ஸ்களாக இருந்தால் கூட உங்களுக்கு நிச்சயம் திருமணம் நடக்கும்.

அடுத்து வாய் இல்லா ஜீவன்களுக்கு நல்ல வெயில் நேரத்தில் கீரை வகைகள், தண்ணீர் இவைகளை தானமாக கொடுக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தாலும் உங்கள் கைகளால் கொடுங்கள். வெயில் சமயத்தில் பறவைகள் ஓரிடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்கு இடம்பெயரும் போது குடிக்க தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும். அப்போது மொட்டை மாடியில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்திருந்தால் அந்த தண்ணீரைக் குடித்து இளைப்பாரி உங்களை வாழ்த்தி விட்டுச் செல்லுமாம். ஆக தண்ணீர் தானத்தையும் இப்படி வாயில்லாத ஜீவன்களுக்கு செய்வது சிறப்பான பலன்களை கொடுக்கும். இப்படி நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு புண்ணிய காரியமும் உங்களை தெளிவுப்படுத்தும். மனம் நிம்மதியான பிறகு தானாக மன உளைச்சலில் இருந்து வெளிவந்து விடுவீர்கள். பிறகு வாழ்வில் வரும் பிரச்சனைகள் தானாக சரியாகும். என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -