இந்த குறிப்புகளை தெரிந்து கொண்டால் போதும். ஸ்டவ்வை பற்ற வைப்பதற்கு முன்பே உங்கள் சமையல் மணக்கும். அன்றாட சமையலுக்கு தேவையான அத்தியாவசியமான 5 குறிப்புகள்.

cooking
- Advertisement -

அடுப்பைப் பற்ற வைத்து சமைத்தாலே நமக்கு சமையலில் வாசம் வீசுவது கஷ்டம். குறிப்பாக இந்த சாம்பார் வைப்பதில் நிறைய பெண்களுக்கு கஷ்டம் இருக்கிறது. மணக்க மணக்க சாம்பார் எப்படி வைப்பது என்றே தெரியாது. நீங்கள் எந்த மசாலா பொடி சேர்த்து சாம்பார் வைத்தாலும் சரி, எந்த காய் போட்டு சாம்பார் வைத்தாலும் சரி, எப்படி சாம்பார் வைத்தாலும் சரி, அந்த சாம்பாரை இறுதியாக சூப்பராக மணக்க மணக்க மாற்ற உங்களுக்காக ஒரு டிப்ஸ். இந்த டிப்ஸ் உடன் சேர்த்து இன்னும் சில சமையல் குறிப்புகள் உங்களுக்காக.

avarai-sambar5

Tip 1:
நம்முடைய எல்லார் வீட்டு பிரிட்ஜிலும் கட்டாயமாக காய்ந்து போன பிரட் துண்டுகள் 4 இருக்கும். காய்ந்துபோன பிரெட்டை யாருமே தொட மாட்டார்கள். அந்த காய்ந்து போன பிரட்டை பிரிட்ஜில் இருந்து வெளியே எடுங்க. இட்லி சட்டியை அடுப்பில் வையுங்கள். சட்டியில் தண்ணீர் ஊற்றி இட்லித் தட்டை மேலே வையுங்கள். அடுப்பை பற்ற வைத்து தண்ணீரை கொதிக்க விடுங்கள். அந்த இட்லி தட்டின் மேல் காய்ந்துபோன பிரட்டை வைத்து, இட்லி சட்டியை மூடி 5 நிமிடங்கள் போல, இட்லி வேகவைப்பது போல வேக வைத்து, அடுப்பை அனைத்து விட்டு, இட்லி சட்டி மூடியைத் திறந்து பாருங்கள். வரண்டு போன பிரட் துண்டுகள் சாஃப்டாக, சொல்லப்போனால் புதியதாக வாங்கிய பிரட் துண்டுகளை விட மிக மிக மிருதுவாக கிடைக்கும். இந்த பிரெட் துண்டுகள் ஆறிய பிறகு சாப்பிட்டாலும் மிருதுவாக தான் இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

Tip 2:
காபி தூளை மாற்றி மாற்றி பல பிராண்டுகளை வாங்கி ட்ரை பண்ணி பார்த்திருப்போம். இந்த காபியை மணக்க மணக்க எப்படி போடுவது. ஒரு டம்ளரில் முதலில் காப்பித்தூள் தேவையான அளவு, சர்க்கரை தேவையான அளவு, போட்டுக்கொள்ளுங்கள். அதில் சுட சுட பாலையும் ஊற்றி, இரண்டு முறை தூக்கி நன்றாக ஆற்ற வேண்டும். அப்போது காப்பியில் நுரை பொங்கி இருக்கும். அதை எடுத்து ஒரு கப் அல்லது அதே டம்ளரில் கூட வைத்துக் கொள்ளுங்கள். காபி மேலே நுரை பொங்க பொங்க இருக்கும் நிலையில், அந்த நுரைக்கு மேலே இரண்டு சிட்டிகை காபித் தூளை தூவி விட்டு அப்படியே காபியை குடிச்சுப் பாருங்க. உங்களுக்கே டேஸ்ட் தெரியும்.

coffee

Tip 3:
பழங்கள் அடுக்கி வைத்திருக்கும் பழக் கூடையில் எப்போது பார்த்தாலும், இந்த பொடி கொசுவின் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். முதலில் பழக்கூடை நன்றாக சுத்தம் செய்து விட்டு, ஒரு காட்டன் பஞ்சில் வினிகரை தொட்டு பழக்கூடை முழுவதும் தடவி விடுங்கள். அதன் பின்பு பழங்களை அந்தக் கூடையில் அடுக்கி வைத்தால், கொசு தொல்லை இருக்காது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பழக்கூடை சுத்தம் செய்து, மீண்டும் வினிகரை தடவி வைக்க வேண்டும்.

- Advertisement -

Tip 4:
பஜ்ஜிக்கு வட்ட வடிவில் வெங்காயத்தை வெட்டினால், அது தனித்தனியாக பிரிந்து வரும். மெல்லிசாக வெட்ட முடியாது. இல்லத்தரசிகளுக்கு இது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். முதலில் நீங்கள் வெங்காயத்தை வெட்டும் கத்தியை கூர்மையாக வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தைத் தோல் உரிக்காமல் அப்படியே காம்பை மட்டும் நீக்கிவிட்டு, தோல் உரிக்காத வெங்காயத்தை வட்ட வடிவில் வெட்டும்போது வெங்காயம் தனித்தனியாக பிரியாமல் அழகாக பஜ்ஜி போட கிடைக்கும். வட்ட வடிவில் வெட்டிய வெங்காயத்திலிருந்து சுலபமாக தோல் பிரிந்து வந்துவிடும். தோலை நீக்கிவிடுங்கள்.

onion

Tip 5:
இறுதியாக எல்லாரும் எதிர்பார்த்த டிப்ஸ் இது. ஒரு சிறிய உரலில் சீரகம் – 1 ஸ்பூன், சேர்த்து நன்றாகப் தட்டிக் கொள்ளுங்கள். சீரகம் நசுக்கியதும் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல், பூண்டு பல் 5, இந்த இரண்டு பொருட்களையும் போட்டு மீண்டும் நன்றாக நசுக்கி விட வேண்டும். இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக 2 ஓட்டு ஓட்டியும் சாம்பாரில் சேர்க்கலாம். அது நம்முடைய விருப்பம்தான். உரலில் சீரகம், பூண்டு, தேங்காய் இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து இடிக்கும் போது இதன் வாசம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக சுவையை தரும்.

சாம்பாரை உங்கள் வழக்கம்போல வைத்து கொள்ளுங்கள். அடுப்பை அணைத்து விடுங்கள். சாம்பார் சுட சுட அடுப்பின் மேலே இருக்கும் போது இடித்து வைத்திருக்கும் மசாலா பொடியை சாம்பாரில் போட்டு கலந்து விட்டால், உங்கள் சாம்பார் மணக்க மணக்க மாறிவிடும். ஐந்து பேருக்கு சாம்பார் வைத்தால் இந்த மசாலா பொருட்களின் அளவு சரியானதாக இருக்கும். அடுப்பை பற்ற வைக்காமலேயே உங்கள் சாம்பார் மணக்க மணக்க சுவைக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -