இந்த ராசியில் பிறந்த பெண்களை திருமணம் செய்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் தாம்

Couples jathagam
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு இயல்பு உண்டு. அந்த ராசியில் பிறந்தவர்களும் இதே தன்மையுடன் இருப்பார்கள். இது பெரும்பாலும் அனைவரும் அறிந்த ஒன்று தான். அதே போல் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் அவர்களுடைய வாழ்க்கை முறை மாறும். அதுவும் குறிப்பாக திருமணத்திற்கு பின்பு எல்லோருடைய வாழ்விலும் மாற்றங்கள் நிகழும்

இதற்குக் காரணம் இரண்டு கிரகங்கள், ராசிகள், நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து வாழ்க்கையை துவங்குவது தான். ஆகையால் தான் இன்றளவும் திருமணம் செய்ய பெரியவர்கள் முடிவு செய்த உடனே அவர்களுடைய ஜாதகத்தை வைத்து தான் திருமண பொருத்தத்தையே தீர்மானிக்கிறார்கள். அந்த அளவிற்கு ஒருவருடைய ராசி, நட்சத்திரம், திருமண வாழ்க்கையை நல்ல முறையில் நகர்த்தி செல்ல உதவுகிறது.

- Advertisement -

அதிலும் ஒரு சில ராசியில் பிறந்த பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிக் கொண்டு செல்வார்கள். அதுமட்டுமின்றி அதிர்ஷ்டமானது அவர்களை தேடி வரும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அது எந்த ராசியில் பிறந்த பெண்கள் என்பதை இந்த ஜோதிடம் குறித்த பதிவில் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

இந்த ராசியில் பிறந்த பெண்கள் பொதுவாகவே சகிப்புத்தன்மையும் விட்டுக் கொடுக்கும் தன்மையும் வாய்ந்தவர்கள். அது மட்டும் இன்றி மிகவும் அமைதியானவர்களாகவும் இருப்பார்கள். இந்த பெண்களை திருமணம் செய்து கொள்ளும் கணவர்கள் பாக்கியவான்கள். கணவரின் எல்லா வித முயற்சியிலும் துணை நிற்பார்கள். கணவன் மற்றும் அவருடைய குடும்பத்தாருடன் அனுசரித்து நல்ல முறையில் வாழ்க்கை நடத்துவார்கள். இந்த பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்.

- Advertisement -

மகர ராசி

இந்த ராசியில் பிறந்த பெண்கள் தோல்வியை எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆகையால் எந்த ஒரு காரியத்தில் இறங்கினாலும் நிச்சயம் வெற்றியை பெற வேண்டும் என்று முழு முயற்சியுடன் செயல்படுவார்கள். இந்த ராசி பெண்கள் தங்களுடைய கணவனுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவிலும் முக்கிய பங்கு வகிப்பார்கள். கணவர்களை நல்ல முறையில் முன்னுக்கு கொண்டுவர பெரிதும் துணை நிற்பார்கள். ஆகையால் இந்த ராசி பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் ஜாக்பாட் அடித்தவர்கள் தான்.

ரிஷப ராசி

ரிஷப ராசி இதில் பிறந்த பெண்கள் அதிபுத்திசாலியாக இருப்பார்கள். அவர்கள் தொடர்புகள் அனைத்தும் இது போன்று புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதாகவே இருக்கும். இந்த பெண்கள் தங்களுடைய கணவரை பாசத்துடனும், அக்கறையுடனும் பார்த்துக் கொள்வார்கள். அவர்களுடைய முன்னேற்றத்தில் மட்டும் இன்றி கணவனின் குடும்பத்தாருடனும் அனுசரித்து அவர்களின் முன்னேற்றத்திற்கும் உதவி புரிவார்கள். இந்த ராசி பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் அதிர்ஷ்டசாலிகள்.

- Advertisement -

மேஷ ராசி

இந்த ராசியில் பிறந்த பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் திருமணத்திற்கு பிறகு தங்களுடைய வாழ்க்கையின் திசையை மாறும். அந்த அளவிற்கு இந்த பெண்கள் கணவனின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருப்பார்கள். இந்த ராசியில் பிறந்த பெண்கள் எப்போதும் தன்னுடைய குடும்பத்தை முன்னற்கு கொண்டு வருவதை பற்றியே சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். இந்த ராசி பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் லக்கி மேன்கள் தான்.

இதையும் படிக்கலாமே: திருச்செந்தூர் முருகனை வழிபட வேண்டிய ராசிக்காரர்கள்

இந்த நான்கு ராசியில் பிறந்த பெண்களும் திருமணத்திற்கு பிறகு கணவனுடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்துவார்கள். இது ஜோதிடத்தின் பொதுவான பலன்களை கொண்டு கணிக்கப்பட்டதாகும். அவர்களின் கிரகநிலைகளுக்கு ஏற்றார் போல் சில சில மாற்றங்களும் ஏற்படும். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -