காலையில் வடித்த சாதம் மீந்து விட்டதா? நோ டென்ஷன் பத்து நிமிசத்துல சூப்பரனா பிரைட் ரைஸ் செய்து அசத்திடலாம். இத மீந்த சாதத்தில் தான் செஞ்சீங்கன்னு சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க.

- Advertisement -

வீட்டில் சமைப்பது ஒரு பிரச்சனை என்றால் சமைத்த பொருட்கள் மீதமாகி விட்டால், அதை வைத்து அடுத்த நேரம் எப்படி சமாளிப்பது என்பது பெரிய பிரச்சினை. முன்பெல்லாம் காலையில் சமைத்தால் இரவு வரை அதையே வைத்து சாப்பிடுவார்கள். இன்றைய சூழ்நிலையை வேறு அந்தந்த நேரத்திற்கு சுடச்சுட இருந்தால் தான் சாப்பிடுகிறார்கள். இந்த நிலையில் காலையில் வடித்த சாதம் மீந்து விட்டால் இரவில் அதை யாரும் சாப்பிடுவது கிடையாது. இப்ப எல்லாம் பழைய சாதம் சாப்பிடும் பழக்கமும் அரிதாகி விட்டது. இப்படி சாதம் மீந்து விட்டால், வீட்டில் இருக்கும் காய்கறிகளை வைத்து சுவையாக பிரைட் ரைஸ் செய்து கொடுத்து விடுங்கள் உடனே காலி ஆகி விடும். இதோ அந்த பிரைட் ரைஸ் ரெசிபி.

மீந்த சாதத்தில் பிரைட் ரைஸ் செய்முறை விளக்கம்:
இந்த பிரைட் ரைஸ்சுக்கு நாம் சாஸ் எதுவும் சேர்க்கப் போவதில்லை. அதற்கு பதிலாக இந்த பேஸ்ட்டை தயார் செய்து கொள்ளலாம். ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு மீடியம் சைஸ் தக்காளியை அறிந்து சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் நாலு பல் பூண்டு, ஒரு பச்சை மிளகாய், மூணு காய்ந்த மிளகாய் அனைத்தையும் சேர்த்து நல்ல பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே ஒரு புறம் இருக்கட்டும்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து கனமான பேனை வைத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிய பிறகு, ரெண்டு பெரிய வெங்காயத்தை நீளமாக அறிந்து சேர்த்துக் கொள்ளுங்கள். இதே போல் ஒரு கேரட், ஒரு குடைமிளகாய், முட்டை கோஸ் இவை எல்லாம் நீளமாக நறுக்கி அனைத்தையும் சேர்த்து ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து அடுப்பை ஹை ஃபிளைமில் வைத்து நன்றாக வதக்கி விடுங்கள். (இந்த காய்கறிக்கு பதிலாக ப்ரைட் ரைஸ் சேர்க்கும் வேறு எந்த காய்கறிகள் உங்களிடம் இருந்தாலும் அதை சேர்த்துக் கொள்ளுங்கள்) காய்கறிகள் நிறம் மாறாமல் இருக்க அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். காய்கறிகள் ஓரளவிற்கு வதங்கிய பிறகு அரைத்து வைத்த தக்காளி பேஸ்ட்டை இதனுடன் சேர்த்து, கைவிடாமல் கிளறிக் கொண்டே இருங்கள்.

இந்த பேஸ்ட் அனைத்தும் காய்கறிகளுடன் நன்றாக கலந்த பிறகு உங்களிடம் இருக்கும் மீந்த சாதத்தை இதில் சேர்த்து லேசாக இந்த மசாலா சாதத்தில் ஊறும் வரை கலந்து விடுங்கள். இந்த சாதத்தை இறக்கும் போது கொஞ்சம் மிளகுத் தூள், கொத்தமல்லியும் இரண்டையும் தூவி இறக்கி விடுங்கள் போதும். சுவையான ப்ரைட் ரைஸ் ரெடி.

- Advertisement -

இதற்கு தனியாக சாஸ் போன்றவை எதையும் சேர்த்து பரிமாற வேண்டிய அவசியம் இல்லை. தக்காளி பேஸ்ட்டே நல்ல காரம், புளிப்பு, காய்கறிகள் நிறம் மாறாமல் இருக்க சேர்த்து இருக்கும் சர்க்கரை இவை எல்லாம் சேர்த்து சுவை பிரமாதமாகவே இருக்கும்.

இதையும் படிக்கலாமே: உருளைக்கிழங்கு கறி ஈசியாக காரசாரமாக இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க, எல்லா சாதத்துக்கும் தொட்டுக்க அட்டகாசமாக இருக்குமே!

இனி சாதம் மிந்து விட்டால் மாலையில் பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு இதுபோல செய்து கொடுத்து விடுங்கள். குழந்தைகளுக்கும் காய்கறிகள் எல்லாம் சேர்த்து ஆரோக்கியமாக செய்து கொடுத்தது போல் இருக்கும்.

- Advertisement -