மிளகாயை கிள்ளி போட்ட சாம்பார், ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க. ரொம்ப ரொம்ப சுவையா வரும்.

sambar
- Advertisement -

சாம்பார் பொடி, மிளகாய் பொடி எதுவும் சேர்க்காமல் மிளகாய் கிள்ளி போட்ட சாம்பாருக்கு என்று ஒரு தனி சுவை உண்டு. இந்த சாம்பாரை பக்குவமாக வைத்தால் அத்தனை ருசியாக இருக்கும். இட்லி தோசை பொங்கல் இவைகளுக்கு தொட்டுக்கொள்ள சைட் டிஷ் ஆகவும் இந்த சாம்பாரை வைத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் சுடச்சுட சாதத்தில் இந்த சாம்பாரை ஊற்றி, நெய் போட்டு பிசைந்து ஒரு அப்பளம் தொட்டு சாப்பிட்டால் கூட அவ்வளவு அருமையாக இருக்கும். சூப்பரான மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார் ரெசிபி உங்களுக்காக.

ஒரு குக்கரில் துவரம்பருப்பு – 1 கப் (150 கிராம்), பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் இந்த இரண்டு பருப்பையும் போட்டு முதலில் நன்றாக கழுவி தண்ணீரை வடித்து விடுங்கள். மீண்டும் பருப்பு மூழ்கும் அளவிற்கு நல்ல தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். இதோடு சின்ன வெங்காயம் தோலுரித்து – 10 பல், பச்சை மிளகாய் – 6 இலிருந்து 7 காரத்திற்கு ஏற்ப, தக்காளிப்பழம் நான்கு துண்டுகளாக வெட்டியது – 5, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு, பூண்டு – 5 பல், இந்த எல்லாப் பொருட்களையும் பருப்போடு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.

- Advertisement -

குக்கரை மூடி, 3 விசில் மிதமான தீயில் வைத்தால் பருப்பு பக்கமாக வெந்து வரும். விசில் வருவதற்குள் கேஸ் அடுப்பில் மறுபக்கம் கொஞ்சம் சுடு தண்ணீரை கொதிக்க கொதிக்க தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

sambar8

சாம்பார் வெந்து வரும்போது நமக்கு கொஞ்சம் கட்டியாக இருக்கும். அதில் பச்சை தண்ணீரை ஊற்றி எல்லாம் மீண்டும் கொதிக்க வைக்கக் கூடாது. இந்த சுடு தண்ணீரை ஊற்றி தான் கலக்க வேண்டும்.

- Advertisement -

விசில் வந்து பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து பருப்பை ஒரு மத்தை வைத்து நன்றாக மசித்து விடவேண்டும். பருப்பில் இருக்கும் தக்காளி பச்சைமிளகாய் அனைத்தும் மசிய வேண்டும். சாம்பாருக்கு தேவையான அளவு உப்பை போட்டு கொள்ளுங்கள். பக்கத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் சுடு தண்ணீரை எடுத்து சாம்பாரில் ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள். கொஞ்சம் கொத்தமல்லி தழையை பொடியாக வெட்டி தூவி விடுங்கள்.

killi-sambar

இந்த சாம்பாருக்கு கமகமன்னு ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டும். 2 ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில், கடுகு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், வரமிளகாய் விதைகளுடன் – 2 கிள்ளிப் போட்டு, முதலில் வதக்கி விடுங்கள். அதன் பின்பு தோலுரித்த சின்ன வெங்காயம் – 10 லிருந்து 12, கருவேப்பிலை – 1 கொத்து சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கி விட்டு இந்த தாளிப்பை அப்படியே எடுத்து சாம்பாரில் கொட்டி கலந்து பரிமாறுங்கள். கமகம வாசத்தோடு அட்டகாசமான கிள்ளி போட்ட சாம்பார் தயார். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்டுல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -