சுவையான மிளகாய்த் துவையலின் ரகசியம் இதுதான்‌. காரசாரமான மிளகாய் சட்னியை இப்படி அரைச்சா ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப்போகாது.

milagai-thuvaiyal
- Advertisement -

இட்லிக்கு தொட்டுக் கொள்ள எத்தனையோ வகையான சைட் டிஷ் இருந்தாலும் சரி, இந்த காரசாரமான மிளகாய் சட்னியை அடித்துக் கொள்வதற்கு வேறு எந்த ரெசிபியினாலும் முடியாது. இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான ஒரு கார சட்னி எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இதை மிளகாய் துவையல் என்றும் சொல்லலாம். கட்டியாக அரைத்து அப்படியே வைத்துக் கொண்டால் மிளகாய் துவையல். இந்தத் துவையலை தயிர் சாதம் ரசம் சாதம் சாம்பார் சாதத்திற்கு தொட்டும் சாப்பிடலாம். ஒரு தாளிப்பு கொடுத்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி தளதளவென வைத்தால் காரச் சட்னி அவ்வளவு தான். காரச் சட்னியை இட்லி தோசைக்கு சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். சரி நேரத்தைக் கடத்தாமல் ரெசிபியை தெரிஞ்சுக்கலாம் வாங்க.

poondu-chutney1

முதலில் சட்னிக்கு தேவையான பொருட்களை பார்த்துவிடுவோம். தோலுரித்த சின்ன வெங்காயம் – 100 கிராம் (அதாவது 20 பல்) எடுத்துக் கொண்டால் போதும். வரமிளகாய் – 10, தோல் உரித்த பூண்டு பல் – 4, உளுந்து – 2 டேபிள்ஸ்பூன், பெரிய நெல்லிக்காய் அளவு – புளி, நல்லெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன் கல் உப்பு தேவையான அளவு.

- Advertisement -

அடுப்பில் ஒரு அகலமான கடாயை வைத்து அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தின் பச்சை வாடை முழுமையாக நீங்கும் படி வதக்க வேண்டும். வெங்காயம் சரியாக வதங்கவில்லை என்றால், சட்னி சீக்கிரமே கெட்டுப் போய்விடும். வதக்கிய வெங்காயத்தை கடாயில் இருந்து எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

சின்ன வெங்காயம்

அடுத்தபடியாக அதே கடாயில் மீதமிருக்கும் எண்ணெயில், புளியை போட்டு ஒரு நிமிடம் வரை வதக்கி எடுத்துக் கொள்ளவேண்டும். அடுத்த படியாக வரமிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும். அடுத்த படியாக உளுந்தை சிவக்க வறுத்து விட்டு, இறுதியாக உளுந்துடன் பூண்டினை போட்டு வதக்கி, இதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ‌இப்போது எல்லா பொருட்களையும் தனித்தனியாக வதக்கி முடித்து விட்டோம். இந்த பொருட்கள் எல்லாம் நன்றாக ஆரட்டும்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் முதலில் மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும். மிளகாய் நன்றாக அரைந்தவுடன், புளி சேர்த்து அரைத்து விட்டு, அதன் பின்புதான் மீதமிருக்கும் மற்ற பொருட்களை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். தண்ணீர் ஊற்றி அரைத்தால் சட்னி சீக்கிரம் கெட்டுப் போய்விடும்.

Milagai

இப்படி எல்லாப் பொருட்களையும் சேர்த்து அரைத்து விட்டு, அதன் பின்பு இறுதியாக கல் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். சட்னி அரைக்கும் போது முதலிலேயே எக்காரணத்தைக் கொண்டும் உப்பை சேர்க்காதீர்கள். அவ்வளவு தாங்க. காரசாரமான மிளகாய் துவையல் தயார். இதை ஒரு ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும். நீங்கள் வெளியூருக்கு டூர் செல்வதாக இருந்தால் கூட, இந்த துவையலை செய்து எடுத்து செல்லலாம். (சட்னியை வெளியூர்களுக்கு எடுத்துச் செல்வதாக இருந்தால் எக்காரணத்தைக் கொண்டும் தண்ணீர் சேர்த்து கலக்கக்கூடாது.)

poonu-chutney2

இட்லி தோசைக்குத் தொட்டுக்கொள்ள இந்த துவையலை சட்னியாகவும் மாற்றிக்கொள்ளலாம். ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, வரமிளகாய் கறிவேப்பிலை தாளித்து துவையலில் கொட்டி கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்து சட்னி ஆகவும் பரிமாறிக் கொள்ளலாம். அது நம்முடைய இஷ்டம் தான்.

kaara-chutney3

பின்குறிப்பு: இந்த வரமிளகாய் துவையலில் காரம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். நீங்கள் இதை துவையலாக பரிமாறினாலும் சரி, அல்லது கரைத்து சட்னியாக பரிமாறினாலும் சரி, கொஞ்சம் நல்லெண்ணையை இதோடு சேர்த்து சாப்பிட்டால் வயிறு எரிச்சல் வராமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். உங்க வீட்ல அம்மி இருந்து அதுல இந்தச் சட்னியை அரைச்சா இந்த சட்னியோடு டேஸ்ட் வேற லெவல்ங்க. உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருக்கா. நாளைக்கு வர மிளகாய் துவையல் செஞ்சு அசத்துங்க.

- Advertisement -