முடி உதிர்வை முற்றிலுமாக தடுத்து நிறுத்தும் ரகசிய பொருட்கள் 3. இதை தெரிந்து கொண்டால் மூன்று மாதத்தில் மூன்று மடங்கு முடி வளர்ச்சியை பெறுவது உறுதி.

hair3
- Advertisement -

இன்னைக்கு பாக்க போற குறிப்பு ரொம்ப ரொம்ப பவர்ஃபுல்லான குறிப்பு. இதை நீங்கள் பின்பற்றினால் உங்களுக்கு முடி உதிர்வது கட்டாயம் நிற்கும். முடி வளர்வது கட்டாயம் அதிகரிக்கும். இரண்டு வகையாக குறிப்புகளை பார்க்கப் போகின்றோம். ஹேர் பேக் குறிப்பு ஒன்று. உடல் ஆரோக்கியத்திற்கு எந்தெந்த பொருட்களை மூன்று மாதங்களும் தொடர்ந்து மாற்றி மாற்றி சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றிய குறிப்பு மற்றொன்று. இந்த இரண்டு குறிப்புகளை சரியான முறையில் பின்பற்றி வந்தாலே 100% ரிசல்ட் கிடைப்பது உறுதி.

முதலில் ஹேர்பேக் குறிப்பை பார்த்து விடுவோம். முந்தைய நாள் இரவே ஒரு பவுலில் 1 கைப்பிடி அளவு பச்சை பயிறு, 3 ஸ்பூன் வெந்தயம் போட்டு, கழுவி விட்டு நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வைத்து விடுங்கள். தனியாக ஒரு சிறிய கிண்ணத்தில் பூந்திக்கொட்டை 2 போட்டு ஊற வைக்க வேண்டும். பூந்திக்கொட்டைக்கு உள்ளே இருக்கும் கருப்பு நிற கொட்டையை நீக்கி விடுங்கள். (பூந்திக்கொட்டைக்கும் மேலே இருக்கும் தோல் மட்டும் தான் குறிப்புக்கு தேவை.)

- Advertisement -

மறுநாள் காலை வெந்தயம், பச்சை பயிறு, ஊற வைத்த தண்ணீரோடு மிக்ஸி ஜாரில் போட்டுக்கோங்க. பூந்திக்கொட்டை ஊற வைத்ததையும் தண்ணீரோடு மிக்ஸி ஜாரில் ஊற்றி எல்லாவற்றையும் அரைக்க வேண்டும். இது நுரை நுரையாக சூப்பராக பொங்கி பொங்கி பேக் போல நமக்கு கிடைத்து விடும். இதை உங்களுடைய தலையில் அப்ளை செய்ய வேண்டும். உங்களுடைய தலையில் கட்டாயம் எண்ணெய் இருக்க வேண்டும். இந்த பேக்கோடு தேவைப்பட்டால் ஒரு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றி, கலந்து கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான்.

முடியை நன்றாக சிக்கு எடுத்து விட்டு, இந்த பேக்கை தலையில் நன்றாக படும்படி அப்ளை செய்து மீதம் இருக்கும் பேக்கை முடியின் நுனிவரை போட்டு, ஒரு கொண்டை கட்டிக் கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து தலையில் தண்ணீரை ஊற்றி அப்படியே உங்கள் கையை கொண்டு முடியை தேய்த்து கசக்கினால், நுரை பொங்கி தலையில் இருக்கும் அழுக்கும் சுத்தமாக நீங்கிவிடும். தண்ணீரில் முடியை அலசி விடுங்கள். முடியை நன்றாக அலச வேண்டும் பச்சை பயிரின் திப்பி, லேசாக தலையில் ஒட்டி இருக்கும்.

- Advertisement -

அப்பவும் உங்களுக்கு மனசு திருப்தியா இல்லையா? ஷாம்பு போட்டு குளித்தால் தான் தலையில் எண்ணெய் பசை போனது போல உணர்வு வருமா. நல்ல பேபி ஷாம்புவாக போட்டு தலையை மீண்டும் ஒருமுறை அலசி விடுங்கள். தலையை காய வைத்த பிறகு நன்றாக உதறி சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் ஹேர் பேக்கில் இருக்கும் டஸ்ட் தலையில் தங்காமல் இருக்கும். வாரத்தில் இரண்டு நாள், மூன்று மாதம் இந்த ஹேர் பேக்கை போட்டு வர வேண்டும்.

இதையும் படிக்கலாமே: உச்சி முதல் பாதம் வரை மில்கி ஒயிட் கலராக தமிழ்நாட்டில் வைரலாகும் சூப்பர் ஃபேஸ் பேக். இத போட்டா 3 நாளில் நீங்க செம கலரா மாறிடுவீங்க.

இதோடு சேர்ந்து தொடர்ந்து இந்த உணவு பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும். ஊறவைத்த கருப்பு கொண்டை கடலை சுண்டல், முளைகட்டிய பச்சைப் பயிறு சுண்டல், பேரிச்சம் பழம், உலர் திராட்சை, நட்ஸ் வகைகள், அதில் நிலக்கடலை கட்டாயம் சாப்பிட வேண்டும். பாதாம் பருப்பு கட்டாயம் சாப்பிட வேண்டும். முருங்கைக்கீரை சாப்பிட வேண்டும். இப்படி ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை உள்ளுக்கும் எடுத்துக்கொண்டு மேல் சொன்ன பேக்கை முயற்சி செய்து வர உங்களுடைய முடி வளராமல் போவதற்கு வாய்ப்பே கிடையாது. முடி உதிர்வதற்கும் வாய்ப்பு கிடையாது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா அழகான முடி கிடைக்கும்.

- Advertisement -