எவ்வளவு பெரிய முகப்பருவாக இருந்தாலும் அதை சரி செய்ய சமையலறையில் இருக்கும் இந்த 3 பொருட்களே போதும். முப்பதே நாளில் முழு மதியை உங்கள் முகத்தில் பார்க்கலாம்.

face22
- Advertisement -

சில பேருக்கு இந்த முகப்பரு பிரச்சனை அழகை மொத்தமாக குறைத்து விடும். அதுவும் ஒரு சில பேருக்கு ஒரே ஒரு முகப்பரு தான் வரும். அதுவே கட்டி போல இருக்கும். அதை தொட்டாலே வலிக்கும். அந்த முகப்பரு காலப்போக்கில் சரியானாலும் அந்த முகப்பரு வந்த இடத்தில் தழும்பு மட்டும் நீங்காமல் நிற்கும். அதை சரி செய்ய நாம் எவ்வளவோ குறிப்புகளை முயற்சி செய்து பார்த்திருப்போம். ஆனால் தழும்பு போன படியாக இருக்காது. சில பேருக்கு முகப்பருவே போகாது. உங்களுடைய முகத்திலும் இப்படி பெரிய முகப்பரு, சின்ன முகப்பரு போன்ற பிரச்சனைகள் இருக்குதா அதையெல்லாம் சரி செய்ய எளிமையான ஒரு அழகு குறிப்பு இந்த பதிவில் உங்களுக்காக.

முகப்பருவை போக்கும் அழகு குறிப்பு:
இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் இயற்கையான சமையலறையில் இருக்கக்கூடிய பொருட்கள் தான். சோம்பு, சீரகம், வெந்தயம். இந்த மூன்றுமே அஞ்சரை பெட்டியில் இருக்கக்கூடிய பொருட்கள். மருத்துவ குணம் நிறைந்த பொருட்கள். ஒரு சின்ன கிண்ணத்தில் 1/2 ஸ்பூன் சோம்பு, 1/2 ஸ்பூன் சீரகம், 1 ஸ்பூன் வெந்தயம் போட்டுக்கோங்க. இந்த மூன்று பொருட்களும் மூழ்கும் அளவுக்கு தண்ணீரை ஊற்றி ஊற வைத்து விடுங்கள். மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் ஊறலாம். அல்லது இரவு முழுவதும் ஊறினாலும் சரி, மூன்று பொருட்களும் நன்றாக ஊறி வந்தால் அந்த தண்ணீரின் நிறம் மாறியிருக்கும்.

- Advertisement -

ஊறிய இந்த பொருட்களை எல்லாம் வடிகட்டி அந்த தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதுதான் நமக்குத் தேவை. அந்த தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் ஏழு நாட்களுக்கு கெட்டுப் போகாது. இரவு தூங்க செல்வதற்கு முன்பு முகத்தை சுத்தமாக கழுவி விட்டு இந்த தண்ணீரை உங்கள் முகத்தில் ஸ்பிரே செய்து அப்படியே விட்டுவிடலாம். முகம் கழுவ கூடாது. மறுநாள் காலை எழுந்து தான் முகம் கழுவ வேண்டும்.

நீங்கள் இதை முகத்தில் ஸ்பிரே செய்தவுடன் ஓரிரு நிமிடத்தில் இந்த தண்ணீரை உங்களுடைய முகமே உறிஞ்சிக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இல்லை என்றால் ஒரு சிறிய கிண்ணத்தில் கலர் சேர்க்காத எந்த ஒரு வாசனையும் சேர்க்காது அலோவேரா ஜெல் 2 ஸ்பூன் போட்டு இதில் நாம் வடிகட்டி வைத்திருக்கும் தண்ணீரை கொஞ்சமாக ஊற்றி அடித்து கலக்கினால் லிக்விட் பதத்தில் ஒரு ஜெல் உங்களுக்கு கிடைக்கும். அந்த ஜல்லை முகம் முழுவதும் தடவிக் கொள்ளலாம். இதையும் இரவு நேரத்தில் உங்களுடைய முகத்தில் தடவிக் கொண்டு அப்படியே விட்டுவிட்டு, மறுநாள் காலை எழுந்தவுடன் முகத்தை கழுவிக்கொள்ளலாம்.

- Advertisement -

திக்காக இந்த பேக்கை போடக்கூடாது. சீரம் போல கண்ணுக்கே தெரியாமல் தான் இந்த பேக்கை போட்டு முகத்தில் தடவி விட வேண்டும். முகப்பரு இருப்பவர்கள் எந்த கிரீமையும் முகத்தில் போட்டு மசாஜ் செய்யக்கூடாது. லேசாக தடவி விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. (அலோவேரா சேர்த்த இந்த ஜெல்லையும் பிரிட்ஜில் ஏழு நாட்கள் வரை சோறு செய்யலாம்).

இதையும் படிக்கலாமே: பத்து நிமிசத்துல உங்க முகம் பளபளன்னு மில்கி ஒய்ட்டா மாறி கியூட்டா ஆக சூப்பர் ஃபேஸ் பேக். அட இது தெரியாம ஆயிரம் ஆயிரமா பார்லருக்கு செலவு பண்ணணோம்ன்னு நினைப்பீங்க.

தொடர்ந்து நான்கு வாரம் இந்த குறிப்பை பின்பற்றி வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் பிரச்சனை படிப்படியாக குறைவதை பாப்பீங்க. சில பேருக்கு பிக்மென்ட்டேசன் முகத்தில், சின்ன சின்ன ஓட்டைகள் எல்லாம் கூட இருக்கும். அதையெல்லாம் கூட ஒரு சில நாட்களில் சரி செய்யக்கூடிய பவர் இந்த மூன்று பொருளுக்கு உள்ளது. எளிமையான குறிப்பு தான். ஆனால் உடனடியாக ரிசல்ட்டை எதிர்பார்க்க முடியாது. எந்த ஒரு கெமிக்கலும் இதில் கலக்கவில்லை. பொறுமையாக ரிசல்ட் தெரியும். அந்த ரிசல்ட் நிரந்தரமாக இருக்கும். பக்க விளைவுகள் இல்லாமல் இருக்கும். அழகு குறிப்பு பிடிச்சிருந்தா முயற்சி செய்து பார்க்கவும்.

- Advertisement -