முன் நெற்றி முழுவதும் வேகமாக முடி வளர, வழுக்கை மறைய, இதை மட்டும் செய்தால் போதும். ஒரே மாதத்தில் முன்னேற்றியில் குட்டி குட்டியா நிறைய முடிகள் வளர்ந்து விடும்.

vazhukai
- Advertisement -

சில பேருக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கும். அதனாலேயே முன்னேற்றியில் அதிகமாக வழுக்கையும் விழுந்து விடும். வழுக்கை விழுந்த முன்னெற்றியில் மீண்டும் முடி வளரவும், முடி உதிர்ந்த தலையில் மீண்டும் வேகமாக முடி வளரவும், ஒரு எளிமையான அழகு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்தக் குறிப்பை வாரத்தில் இரண்டு நாள் பின்பற்றி வந்தால், ஒரே மாதத்தில் உங்களுடைய தலையில் குட்டி குட்டியாக புதிய முடி வளர்வதை பார்க்க முடியும். அழகுக்கு அழகு சேர்க்கும் சுலபமான அழகு குறிப்பு இது உங்களுக்காக.

முன்னேற்றியில் முடி வளர எளிய வீட்டு குறிப்பு:
இந்த குறிப்புக்கு நமக்கு கருஞ்சீரகம் 1 டேபிள் ஸ்பூன், வெந்தயம் 2 ஸ்பூன், கருவேப்பிலை 1 கொத்து, தயிர் தேவையான அளவு, விளக்கெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், இந்த பொருட்கள் தான் தேவை. முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து, கருஞ்சீரகம் 1 டேபிள் ஸ்பூன் போட்டு, லேசாக வறுத்து அடுப்பை அணைத்து விடுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தில் வெந்தயத்தை போட்டு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் நன்றாக ஊற வைத்து விடுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து வறுத்த கருஞ்சீரகம், ஊற வைத்த வெந்தயம், கழுவிய கருவேப்பிலைகள், விளக்கெண்ணெய் ஊற்றி, இதை அரைப்பதற்கு தேவையான அளவு தயிர் ஊற்றி விழுது போல அறைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான். நமக்கு தேவையான பேக் தயாராகிவிட்டது. இந்த பேக்கை முன்னேற்றியில் வழுக்கையாக இருக்கக்கூடிய இடத்தில் மட்டும் தடவி, லேசாக ஐந்து நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்து வந்தால், முன்னேற்றியில் சீக்கிரம் முடி வளரும்.

உங்களுக்கு தலை முழுவதும் அடர்த்தியாக முடி வளர வேண்டும் என்றாலும், இந்த பேக்கை தலையில் மயிர் கால்களில் படும்படி போடலாம். 15 நிமிடம் கழித்து ஜென்டில் ஆக ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளித்துக் கொள்ளலாம். ஆனால் இதில் நாம் வெந்தயம் சேர்த்து இருப்பதால், நம்முடைய உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். உங்களுக்கு உடல் ரொம்பவும் குளிர்ந்த உடலாக இருந்தால், முன்னேற்றியில் மட்டும் இதை பயன்படுத்துங்கள். தலைக்கு போட்டாலும் கூட பத்து நிமிடத்தில் தலைக்கு குளித்து விட வேண்டும். ரொம்பவும் சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் வெந்தயம் சேர்த்த இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

- Advertisement -

வாரத்தில் 2 நாட்கள் மேல் சொன்ன குறைப்பை பின்பற்றி வரும் போது, நிச்சயமாக உங்களுடைய வாழுக்கையில் சீக்கிரம் முடி வளர்வதை பார்க்கலாம். ஒரே மாதத்தில் நிச்சயமாக வித்தியாசம் தெரியும். தொடர்ந்து மூன்று மாதம் இந்த குறிப்பை பின்பற்றி வரும்போது அடர்த்தியான முடி உங்களுக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் வேருடன் நீங்க எளிதான டிப்ஸ்! தூங்கும் முன்பு இதை செய்துவிட்டு தூங்கினால் முகத்தில் புள்ளிகள் எதுவும் இல்லாமல் பளபளன்னு எப்போதுமே இருக்கும்.

மேல் சொன்ன ஹேர் பேக் குறிப்போடு சேர்த்து, உங்களுடைய ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவு பொருட்களை தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள். நீங்கள் எதற்காவது தொடர்ச்சியாக மாத்திரை சாப்பிட்டு வருபவர்களாக இருந்தால் இந்த குறிப்பு அவ்வளவு எளிதில் வேலை செய்யாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். மற்றபடி அழகான முடி தேவை என்பவர்கள் குறிப்பை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -