இந்த ஒரு சொல்லை சொன்னால் கோடி மந்திரங்களை ஜபித்த பலன் உண்டு

muruganl

சிலர் கடவுளை வணங்கும் சமயத்தில் மந்திரங்களை ஜெபிப்பது வழக்கம். ஆனால் சிலர் மந்திரங்களை ஜெபிக்காமல் மனதார இறைவனை தொழுவது வழக்கம். இறைவனை எப்படி வணங்கினாலும் அவர் நமக்கு அருள்புரிவார் என்பதே உண்மை. அவரது நாமமே ஒரு மந்திரம் தானே.

murugan“சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரமே முருகனுக்குரிய சிறந்த மந்திரமாக கருதப்படுகிறது. அதோடு முருகா, குமரா என்று முருகனின் நாமத்தை கூறி வணங்கினாலும் அதுவும் முருகனின் மந்திரமாகவே கருதப்படுகிறது. இது குறித்து பழந்தமிழ் இலக்கியமான திருமுருகாற்றுப்படையில் குறிப்புகளும் உள்ளன.

இதையும் படிக்கலாமே:
வீட்டில் செல்வம் பெறுக உதவும் லட்சுமி கணபதி மந்திரம்

முருகனுக்குரிய மந்திரங்களின் சிறப்பை பற்றி கிருபானந்த வாரியார் கூறுகையில் “முருகா” என்று ஒரே ஒரு முறை மனமுருகி சொன்னாலும் அது கோடி மந்திரங்களை(தெய்வ நாமத்தை) ஜெபித்ததற்கான பலன் தரும் என்று கூறியுள்ளார். ஆறுமுக ஐயனை “முருகா” என்று அன்போடு அழைப்போம், அவன் அருளை முழுமையாக பெறுவோம்.