சப்பாத்திக்கு பக்காவான ஒரு சைட் டிஷ். இதைவிட சுலபமா டேஸ்டா மஸ்ரூம் கிரேவியை யாராலும் செய்யவே முடியாதுங்க.

mushroomgravy
- Advertisement -

எல்லோர் வீட்டிலும் மஸ்ரூம் வைத்து சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள கிரேவி செய்வோம். ஆனாலும் இப்படி ஒரு முறை மஸ்ரூம் கிரேவியை ட்ரை பண்ணி பாருங்க. கொஞ்சம் சுவை கூடுதலாக இருக்கும். நம்ப முடியவில்லையா. சரி, பின் சொல்லக்கூடிய ரெசிபியை வச்சு ஒரே ஒரு வாட்டி உங்க வீட்ல நீங்களே ட்ரை பண்ணி தான் பாருங்க. டேஸ்ட் பண்ணி பாருங்க. அப்புறம் சொல்லுங்க இது பர்ஃபெக்ட்டான கிரேவியா, இல்லையான்னு. சரி நேரத்தைக் கடத்தாமல் ரெசிபியை தெரிஞ்சுக்கலாமா.

mushroom1

முதலில் 300 கிராம் அளவு மஸ்ரூமை கொஞ்சம் பெரிய துண்டுகளாக வெட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். கிரேவிக்கு தேவையான மசாலா விழுது அரைக்கவேண்டும். பச்சை மிளகாய் – 1, இஞ்சி – 1 1/2 இன்ச் அளவு – 1 துண்டு, தோல் உரித்த பூண்டு – பல் 10, ஒரு மீடியம் சைஸில் இருக்கும் தக்காளி, இந்த எல்லா பொருட்களையும் தண்ணீர் எதுவும் ஊற்றாமல் விழுதுபோல் அரைத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக இப்போது கிரேவியை தாளிக்கப் போகின்றோம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தோல் உரித்த சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது – 150 கிராம் போட்டு, வெங்காயத்தை முதலில் பொன் நிறம் வரும் வரை நன்றாக வதக்கி விடுங்கள்.

musroom1

வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் விழுதை கடாயில் ஊற்றி விடுங்கள். அதன் பின்பு மிளகாய் தூள் – 2 ஸ்பூன், மல்லித் தூள் – 2 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு இந்த பொருட்களை சேர்த்து ஒருமுறை மசாலா பொருட்களை வெங்காயத்துடன் நன்றாக கலந்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து 4 டேபிள் ஸ்பூன் அளவு தயிரை இதோடு சேர்த்து ஒருமுறை நன்றாக கலந்து விட்டு, அதன் பின்பு வெட்டி வைத்திருக்கும் மஷ்ரூம் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக பிரட்டி விடுங்கள். இறுதியாக 1/4 கப் அளவு தண்ணீரை ஊற்றி கிரேவியை கலந்து, உப்பு சரிபார்த்து கொண்டு ஒரு மூடி போட்டு 10 நிமிடங்கள் மஸ்ரூமை வேகவைத்துக் கொள்ளுங்கள். அடி பிடிக்க விடாதீர்கள். தேவைப்பட்டால் இடையிடையே திறந்து கலந்து விடலாம்.

இறுதியாக கரம் மசாலா – 1/4 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி, அடுப்பை அணைத்து விட்டு நன்றாக கலந்து விட்டு சுட சுட பரிமாறினால் சப்பாத்திக்கு பக்காவான சைடிஷ் தயார்.

- Advertisement -