நாளை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் பஞ்சமி திதி. வாராகி அம்மனுக்கு இந்த 5 இலைகளை வைத்து வழிபாடு செய்தால், கடன் தொல்லை நீங்கி செல்வ செழிப்பு பெருகும்.

varahi
- Advertisement -

நாளைய தினம் வெள்ளிக்கிழமை. பஞ்சமி திதியும் சேர்ந்து வந்திருக்கின்றது. வாராஹி அம்மனுக்கு மிகவும் உகந்த நாள் இது. நாளைய தினம் வீட்டில் பஞ்சமி திதி வழிபாட்டை மிக மிக சுலபமான முறையில் எப்படி மேற்கொள்வது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எதிரி தொல்லை உள்ளவர்கள், வறுமையால் கஷ்டப்படுபவர்கள், மனநிம்மதி இல்லாமல் இருப்பவர்கள், முன்னேற்றம் இல்லாமல் இருப்பவர்கள், தொழில் முடக்கம் கொண்டவர்கள், கண் திருஷ்டி கொண்டவர்கள், ஏவல் பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று எல்லோரும் நாளை இந்த வழிபாடு செய்யலாம். எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் தீர்வு தரக்கூடிய சக்தி நாளைய தின வாராஹி வழிபாட்டிற்கு உண்டு.

நாளை வெள்ளிக்கிழமை என்பதால் வீட்டு பூஜை அறை, பூஜை செய்வதற்கு தயாராகத்தான் இருக்கும். வராகி தேவியின் திருவுருவ படம் உங்கள் வீட்டில் இருந்தால், அந்த படத்திற்கு செம்பருத்திப்பூ வைக்க வேண்டும். வாராகி தேவியின் திருவுருவ சிலை இருந்தால் அதற்கு அபிஷேகம் செய்துவிட்டு, அந்த சிலைக்கு அலங்காரம் செய்துவிட்டு, செம்பருத்தி பூவை சூட்டிவிடுங்கள். சிவப்பு நிற செம்பருத்தி பூ வாராஹி அம்மனுக்கு ரொம்பவும் உகந்தது.

- Advertisement -

வாராகி திருவுருவ படம் இல்லை. திரு உருவ சிலை இல்லை, என்பவர்கள் கவலைப்பட வேண்டாம். வாராஹி அம்மனை மனதார நினைத்து இந்த பூஜையை செய்யலாம். ஒரு சிறிய தாம்பூல தட்டில் 5 செம்பருத்தி பூ இலைகளை வட்டமாக அடுக்கி விட வேண்டும். அதன் நடுவே ஒரு மண் அகல் விளக்கை வைத்துவிட்டு, அதில் 5 திரி போட வேண்டும். அதாவது குத்துவிளக்கில் எப்படி ஐந்து முகங்கள் இருக்கும். அதேபோல அகல் விளக்கிலும் நீங்கள் ஐந்து திரியைப் போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, இந்த தீபத்திற்கு பக்கத்திலும் ஒரு செம்பருத்திப் பூவை வைத்து விடுங்கள்.

திருவுருவப்படம் சிலை இல்லாதவர்களுக்கு இந்த தீபம் தான் வராகி அன்னை. திருவுருவப்படம் சிலை இருந்தால்,  அந்த அம்மனுக்கு முன்பு இந்த தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். தீபத்திற்கு முன்பு அமர்ந்து கொள்ள வேண்டும். உங்களுடைய கோரிக்கைகளை அம்பாளிடம் மனதார சொல்லலாம். குங்குமம் அர்ச்சனை அல்லது மாதுளம் பழம் அர்ச்சனை அல்லது உதிரி பூக்களால் கூட வாராகி தேவிக்கு அர்ச்சனை செய்யலாம். வாராகியின் 12 நாமங்கள் தெரிந்தால் சொல்லலாம். அப்படி இல்லை என்றால் ‘ஓம் வாராஹி தேவியே போற்றி’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து அர்ச்சனையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பூஜையில் கட்டாயம் ஏதாவது ஒரு நிவேதியம் வைக்க வேண்டும். சர்க்கரை பொங்கல், கிழங்கு வகைகள் அல்லது பழ வகைகள் உங்களால் எது முடியுமோ அந்த பிரசாதத்தை நிவேதனமாக வைத்து வழிபாடு செய்யுங்கள். இந்த பூஜை குறிப்பாக நாளை மாலை 6.30 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் செய்து கொள்ளலாம். நாளை இரவு 11 மணி வரைக்கும் பஞ்சமி திதி இருக்கிறது.

வாராகி தேவிக்கு சுத்தம் மிக மிக அவசியம். உடல் சுத்தம் மன சுத்தம் நம்முடைய வீடும் சுத்தம் ஆக, இருக்க வேண்டும். அடுத்தவர்களை கெடுக்கும் எண்ணத்தோடு நாம் வாராகி தேவி வழிபாடை மேற்கொண்டால், அது நமக்கு தான் தீமையை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: விக்கிரகங்களை வைத்து பூஜை செய்த பலனை பெற, இந்த ஒரே ஒரு தீபத்தை உங்கள் வீட்டில் ஏற்றி வழிபட்டாலே போதும்.

எல்லா வேண்டுதலிலும் நம் பக்கம் நியாயம் இருக்கிறதா என்று பாருங்கள். அநியாயத்திற்கு என்றைக்குமே வாராஹிதாய் துணை போக மாட்டாள். நஷ்டம் நமக்கு தான் பின்பு. அதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அனைவரும் வாராகி தேதியை சுத்தமான மனதோடு வழிபாடு செய்து கை மேல் பலனை பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -