நம் அனைத்து கஷ்டங்கள் தீரவும், வேண்டுதல்களுக்கு சிவபெருமான் உடனே செவி சாய்க்கவும் நந்தி தேவரை இப்படி தான் வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை மட்டும் செய்தால் கை மேல் பலன் கண்டிப்பாக கிடைக்கும்.

sivan-nandhi-pradosham
- Advertisement -

நம் வாழ்க்கையில் நல்ல பல மாற்றங்களை தந்து நம்மை உயர்த்த கூடியவர்கள் தெய்வங்களே. அந்த தெய்வத்தை தூக்கி சுமக்கும் வாகனத்திற்கும் தனித்துவமான சக்திகள் நிறைந்து இருக்கின்றன. அந்த வகையில் ஆன்மிகம் குறித்த இந்தப் பதிவில் நாம் சிவனுக்குரிய வாகனமான நந்தியின் வழிபாட்டு முறையை எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.

“சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி,
சேவித்த பக்தர்களை காக்கும் நந்தி”

என்ற பாட்டிற்கு இணங்க நந்தியம் பெருமானுக்கு பல சிறப்புகள் இருக்கின்றன. அவரிடம் நாம் எந்த கோரிக்கைகள் வைத்தாலும் அந்த கோரிக்கைகள் சிவபெருமானிடம் வைத்ததற்கு சமமாக கருதப்படுகிறது. மேலும் அவரின் அனுமதி இன்றி சிவபெருமானின் அருள் நமக்கு கிடைக்காது என்பது புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது. எந்நேரமும் சிவனையே தரிசனம் செய்து கொண்டு, அவர் நாமத்தையே மூச்சுக் காற்றாக வெளியிட்டுக் கொண்டு இருப்பதால் தான் சிவபெருமானுக்கும் நந்திக்கும் நடுவில் குறுக்கே செல்லக் கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

- Advertisement -

நந்தி வழிபாடு செய்யும் முறை:
சிவாலயங்களுக்கு செல்லும் போது சிவனை தரிசிப்பதற்கு முன்பாக நந்தியை வழிபட்டு அவரிடம் அனுமதி பெற்ற பிறகு தான் சிவபெருமானை நாம் தரிசிக்க வேண்டும். அப்பொழுது தான் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். நந்தி தேவரை நாம் எந்த நேரத்திலும் வழிபடலாம். ஆனாலும் அவருக்கு சிறப்பாக கருதப்படுவது பிரதோஷ நேரம் ஆகும்.

பிரதோஷத்தன்று நாம் நந்தி தேவருக்கு நம்மால் இயன்ற அளவு அபிஷேகத்திற்காக பொருட்களை வாங்கி கொடுக்கலாம். மேலும் நந்தி பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து அவரை மனதார நினைத்து அவருடைய வலது காதில் “சிவாய நமஹ நமசிவாய நமசிவாய நமசிவாய” என்று கூறிய பிறகு நம்முடைய நியாயமான கோரிக்கைகளை அவரிடம் கூற வேண்டும். பிறகு மறுபடியும் “சிவாய நமஹ நமசிவாய நமசிவாய நமசிவாய” என்று கூறி முடிக்க வேண்டும். இவ்வாறு நாம் நந்தி தேவரிடம் வைக்கும் நியாயமான கோரிக்கைகளை நந்தி தேவர் சிவபெருமானிடம் கூறி நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

மேலும் நந்திதேவருக்கு சிவப்பரிசி, வெல்லம், தேங்காய் சேர்த்த நெய்வேத்தியம் மிகவும் பிடிக்கும் என்பதால் நம்முடைய கோரிக்கைகள் நிறைவேறிய பிறகு அவருக்கு இந்த நெய்வேத்தியத்தை வைத்து மனதார நன்றி சொல்லி பிரார்த்தனையை நிறைவு செய்ய வேண்டும். நந்தி தேவருக்கு நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் சிவபெருமானுக்கு செய்ததாக கருதப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வெள்ளிக்கிழமையோடு வந்திருக்கும் இந்த அமாவாசை நாளில் மகாலட்சுமி தாயாரின் அருள் பொருந்திய இந்த பொருளை உங்கள் நிலை வாசலில் கட்டி விடுங்கள். பொன் பொருள் அனைத்தும் உங்க வாசலை தேடி வந்து கொண்டே இருக்கும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த நந்தி தேவரை நாம் இனி மேலாவது கோவிலுக்கு செல்லும் பொழுது மனதார வேண்டி அவரிடம் அனுமதி வாங்கி சிவபெருமான் அருளை பெற்று அனைத்து கஷ்டங்களில் இருந்தும் விடுபட்டு சந்தோஷமாக வாழலாம்.

- Advertisement -