நரசிம்மர் அவதாரம் வீடியோ – வெறும் 5 நிமிடத்தில் முழு கதை

narasimmar-avathaaram1
- Advertisement -

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
காக்கும் கடவுளான விஷ்ணுவின் நான்காவது அவதாரமே நரசிம்மர் அவதாரம் ஆகும். சிங்க தலையுடனும் மனித உடலுடனும் இந்த அவதாரத்தை எடுத்த மகா விஷ்ணு, இரண்யகசிபு என்னும் அரக்கனை வதம் செய்தார். இந்த அவதாரம் குறித்த சுருக்கனமான கதை இதோ கீழே உள்ள வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

நரசிம்மர் அவதாரம் கதை சுருக்கம்:

வராக அவரதாரம் எடுத்த மகா விஷ்ணு இரண்யாட்சன் என்னும் கொடிய அசுரனை அழித்தார். இதை கண்ட தேவர்கள் மகிழ்ச்சிகொண்டனர். நம்மை எல்லாம் ஆட்டி படைத்த அசுரன் அழிந்துவிட்டான் என்று பெருமூச்சு விட்டனர். ஆனால் அவர்களின் சந்தோசம் வெகு காலம் நிலைக்க வில்லை. இரண்யாட்சனின் சகோதரனான இரண்யகசிபு, இரண்யாட்சனின் மரணத்திற்கு பழிவாங்க கொதித்தெழுந்தான். இதன் காரணமாக அவன் மந்திரமலைமீது கடும் தவம் மேற்கொண்டான். அவன் தவத்தை கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கினர். அவனை சுற்றி புதர்கள் வளர்ந்தன. அவன் எதையும் பொருட்படுத்தாமல் தவத்தினை மேற்கொண்டான்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் அவன் கடுந்தவத்தின் பலத்தால் அவன் தலையில் இருந்து ஒருவிதமான கொடிய புகை ஒன்று வெளியில் வந்தது. அந்த புகையானது அனைத்து ஜீவராசிகளையும் வாட்டியது. இதை கண்டு தேவர்கள் அஞ்சி நடுங்கினர். தேவர்கள் அனைவரும் இதுகுறித்து பிரம்ம தேவரிடம் தெரிவித்தனர். பிரமதேவர், இரண்யகசிபுவிடம் சென்று, உம் தவத்தை கண்டு யாம் மெச்சினோம். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார். அதற்கு இரண்யகசிபு, இரவிலோ, பகலிலோ, உள்ளேயோ, வெளியேயோ, மனிதர்களாலோ, மிருக்கத்தாலோ, பூமியிலோ, ஆகாயத்திலோ மரணம் என்னை தீண்டக்கூடாது என்னும் வரத்தினை அவன் வேண்டினான். பிரம்ம தேவரும் அவன் வேண்டிய வரத்தினை அளித்தார்.

narakasura

அதன் பிறகு இரண்யாட்சன், தேவர்களை வாட்டி வதைக்க துவங்கினான். தேவர்கள் அனைவரும் மிகுந்த துன்பத்திற்கு உள்ளானார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் மகா விஷ்ணுவிடம் சென்று தங்களது துயரத்தினை சொன்னார்கள். அவர்களிடம் மகாவிஷ்ணு, சில காலம் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அதோடு இரண்யகசிபுவின் மகனான பிரகலாதன் என்னுடைய தீவிர பக்தன். ஆகையால் இரண்யகசிபு எப்போது பிரகலாதனை கொள்ள முயற்சிக்கிறானோ அப்போது அவனை காக்க நானே செல்வேன். அச்சமயம் இரண்யகசிபுவை வதன் செய்வேன் என்றார்.

narasimmar

இதையும் படிக்கலாமே:
துன்பங்களை விரட்டும் நரசிம்மர் சுலோகம்

அவர் சொன்னது போல ஒரு கட்டத்தில் இரண்யகசிபு தன் மகனை வெறுக்க துவங்கினான். பிரகாலநாதன் தன் தந்தையிடம், என்னுடைய இறைவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்று கூற, அதற்கு இரண்யகசிபு, நான் உன்னை இப்போது கொள்ளப்போகிறேன், உன் இறைவன் இந்த தூணில் இருந்தால் அவன் வந்து என்னை தடுக்கட்டும் என்று கூறிவிட்டு பிரகலாதனை கொள்ள முற்பட்டான். அப்போது தூணில் இருந்து வெளிப்பட நரசிம்மர், இரண்யகசிபுவை தூக்கி சென்று, உள்ளேயும் இல்லாமல் வெளியேயும் இல்லாமல் வாசலில் நின்று தன் தொடைமீது அவனை வைத்து வதம் செய்தார்.

- Advertisement -