நவராத்திரியில் கொலு வைத்து வழிபட்ட பலனை பெற ஒரு நாள் எப்படி தீபம் ஏற்றினால் போதும்.

durgai dheepam
- Advertisement -

மகாளய பட்சத்தை தொடர்ந்து வரும் இந்த நவராத்திரி நாட்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த காலத்தில் முப்பெரும் தேவியரை வணங்கி ஒவ்வொரு நாளும் அவர்களுக்கான வழிபாடுகளையும், பூஜை முறைகளையும் செய்வது நம்முடைய வழக்கமாக உள்ளது. அதில் மூன்று நாட்கள் துர்க்கையும், மூன்று நாட்கள் சரஸ்வதி தாயார், மூன்று நாட்கள் மகாலட்சுமி தாயாரையும் வணங்குவது இந்த நவராத்திரி காலத்தில் சிறப்பு.

இப்படி ஒன்பது நாட்களும் தொடர்ந்து வழிபடக் கூடிய ஒரு வழிபாட்டை மிகவும் எளிமையாக நாம் செய்யக்கூடிய இந்த ஒரு சிறிய தீப வழிபாட்டின் மூலம் ஒன்பது நாள் வழிபட்டின் முழுப்பலனை தருகிறது என்று சொல்லப்படுகிறது. இந்த வழிபாட்டை கொலு வைத்து வழிபடும் பழக்கம் இல்லாதவர்கள் கூட செய்யலாம். அந்த வழிபாடு பற்றிய தகவலை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

நவராத்திரி காலத்தில் ஏற்ற வேண்டிய தீபம்

தீபம் என்றாலே அது தேவியின் சொரூபம் தான். நம்முடைய சாஸ்திரங்கள் தீபத்தின் ஒளியில் தான் தெய்வத்தின் அருள் நிறைந்திருக்கிறது என்று சொல்கிறது. ஆகையால் தான் நம் வீடுகளில் காலை மாலை இருவேளையில் தீபம் ஏற்றுவதை வழக்கமாகவே கொண்டுள்ளோம். இப்படி தீபம் ஏற்றும் வீடு ஒரு நாளும் வீணாக போகாது என்பது நம் முன்னோர்களின் வாக்கு அது உண்மையும் கூட.

இப்போது இந்த நவராத்திரி காலத்தில் ஏற்றக்கூடிய தீபத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த தீபமானது ஒரு அகண்ட தீபம் அதாவது நாம் எப்போதும் ஏற்றும் அகல் விளக்கு போல் அல்லாது சற்று பெரிய சக்தி போல் உள்ள அதனை வாங்க வேண்டும். அதில் எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு முன்னால் இந்த தீபத்தை வைக்க ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதில் நிறைய நெல்மணிகளை பரப்பி விடுங்கள். அதன் மேல் கொஞ்சம் துவரம் பருப்பை பரப்பி அதற்கு மேல் இந்த அகலில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து எண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். இதற்கு ஊற்றக் கூடிய எண்ணெய் நல்ல சுத்தமான தரமான எண்ணையாக இருக்க வேண்டும் . இந்த தீபம் வீட்டில் 24 மணி நேரமும் எரிய வேண்டும். அதாவது நீங்கள் நவராத்திரிக்கு இரண்டாவது நாளான இன்று ஏற்றினால் கூட இன்றிலிருந்து நவராத்திரி காலம் முடியும் வரை தினமும் தொடர்ந்து அணையா விளக்காக ஏற்றலாம்.

அப்படி ஏற்ற முடியாதவர்கள் இந்த காலங்கள் ஏதாவது ஒரு நாளை மட்டும் தேர்ந்தெடுத்து அன்றைய நாள் முழுவதும் இந்த தீபம் எரியும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி ஒரு நாளில் இந்த அகண்ட தீபம் நம் வீட்டில் அணியாமல் இருந்து கொண்டிருக்கும் பொழுது நவராத்திரி காலத்தில் வழங்கக்கூடிய அத்தனை தெய்வத்தின் அருளும் ஒருசேர நமக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

நவராத்திரி வழிபாட்டில் பலவகையில் உள்ளது கொலு வைத்து வழிபடுவது கலசம் வைத்து வழிபடுவது அல்லது ஆலயத்தில் சென்று கொலுவை தரிசனம் செய்து விட்டு வீட்டில் நெய்வேத்தியம் மட்டும் வைத்து வணங்குவது இப்படி பல முறைகள் உண்டு. ஆனால் நவராத்திரி வழிபாடு செய்யும் பழக்கம் உள்ளவர்கள் அதை எப்போதும் போல செய்து அத்துடன் இந்த தீபத்தையும் ஏற்றி வாருங்கள்.

இந்த தீபத்தை நவராத்திரி காலம் முழுவதும் ஏற்றும் பொழுது அதிகபட்ச பலன்களை பெற முடியும் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு வேளை நீங்கள் ஏற்றிய தீபம் இடையில் மலை ஏறி விட்டால், அதற்காக வருத்தப்படாமல் மறுபடியும் குளித்து சுவாமியை மனதார வேண்டிக் கொண்டு, இந்த தீபம் அணியாமல் எரிய வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டு ஏற்றுங்கள். இதனால் தவறு ஒன்றும் கிடையாது.

இதையும் படிக்கலாமே: ஏழு வாரம் திங்கட்கிழமை இந்த கோவிலுக்கு சென்று வந்தால் எவ்வளவு பெரிய கடனும் காணாமல் போகும்.

நம் வாழ்வை வளமாக்க கூடிய இந்த தீப ஒளியை நவராத்திரி காலத்தில் நம் வீட்டையும் செழிப்பானதாக மாற்ற இப்படி ஏற்றி பலன் அடையலாம். இதன் மூலம் முப்பெரும் தேவியரின் அருளை பெற்று வளமுடன் நல்லதொரு வாழ்க்கையை வாழ வழி தேடி கொள்ளலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -