மகாலட்சுமி தாயாரே மனம் குளிர்ந்து வீடு தேடி வந்த அமர்ந்து செல்வ மழை பொழிய இந்த தீபத்தை ஏற்றுங்கள். சகல ஐஸ்வர்யங்களும் தரும் தீப வழிபாடு.

mahalakshmi
- Advertisement -

குடும்பத்தின் மகிழ்ச்சி அமைதி நிம்மதி என எதை எடுத்துக் கொண்டாலும் அதற்கெல்லாம் ஆதாரமாக விளங்குவது பணம் தான். பணம் மட்டும் தான் இதற்கெல்லாம் ஆதாரமா என்ற கேள்வி எழலாம். ஆனால் பணம் இல்லை எனில் எது இருந்தும் அதை நான் நிவர்த்தி செய்ய முடியாது என்பதையும் மறுக்க இயலாது. அப்படியான பணவரவை நமக்கு அளிக்கக் கூடிய தெய்வம் மகாலட்சுமி தாயார். அந்த தாயாரை மனம் மகிழ்ந்து நம் வீட்டின் செல்வ நிலையை உயர்த்த இந்த தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் லட்சுமி கடாட்சத்தை பெருக்கி தரும் நெல்லி தீபம்
கனிகளிலே நெல்லிக்கனி மகாலட்சுமி தாயாரின் அம்சமாக போற்றப்படுகிறது. மகாலட்சுமி தாயார் நெல்லி மரத்தில் வாசம் செய்வதாகவும் ஐதீகம் உள்ளது. ஆகையால் தான் நெல்லிக்கனிக்கு அத்தனை சிறப்புகள் உண்டு. இந்த நெல்லிக்கனியை வைத்து தான் நாம் இப்போது தீபம் ஏற்ற வேண்டும் நெல்லிக்கனி என்றவுடன் பெரும்பாலானோர் நெல்லிக்காயை அப்படியே எண்ணெய் ஊற்றி ஏற்றுவார்கள். அதை விட இந்த முறையில் தீபம் ஏற்றும் போது வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

- Advertisement -

இந்த தீபம் ஏற்ற முதலில் ஒரு நல்ல நெல்லிக்கனியாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். இது எந்த விண்ணமும் இருக்கக் கூடாது. அந்த நெல்லிக்கனியை வீட்டிற்கு கொண்டு வந்து இரண்டாக உடைத்து சாறு எடுக்க வேண்டும். அதற்காக நெல்லிக்கனியை போட்டு அதிகமாக சிதைக்காமல் உடைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து 50 கிராம் தேங்காய் எண்ணெய் 50 கிராம் நெய் இதை எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு நெல்லிக்கனியின் சாறை கலந்து கொள்ளுங்கள்.

அடுத்து பூஜை அறையில் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக அகல் தீபம் வைத்து அதில் நீங்கள் கலந்த எண்ணையை ஊற்றி பஞ்சித் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தின் முன் அமர்ந்து நீங்கள் வேண்டும் போது உங்களுக்கு சகல விதமான ஐஸ்வர்யங்களையும் தாயாரே மகிழ்ந்து அளிப்பார். இது மட்டுமின்றி வேறு எந்த குறைகள் இருப்பினும் அத்தனையும் நிவர்த்தி செய்யக்கூடிய சக்தி இந்த தீபத்திற்கு உண்டு.

- Advertisement -

இந்த தீபத்தின் முன் அமர்ந்து ஒரு தீபம் ஏற்றும் போது ஒரு வேண்டுதலை மட்டும் தான் வைக்க வேண்டும். அதே போல் இந்த தீபத்தை காமாட்சி அம்மன் விளக்கில் எண்ணெய் ஊற்றி ஏற்றக் கூடாது. அகல் தீபத்தில் தான் ஏற்ற வேண்டும். இந்த தீப வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் போது உங்களுடைய குடும்பத்தின் செல்வ நிலை பல மடங்கு உயரும் என்பதில் சந்தேகமே இல்லை.

இதையும் படிக்கலாமே: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சொந்த வீட்டில் குடியேற வாடகை பணத்தை கொடுக்கும் முன் இப்படி செய்து விட்டு கொடுத்துப் பாருங்கள் அடுத்த வாடகை பணத்தை கொடுப்பதற்குள்ளாகவே சொந்த வீடு வாங்கும் யோகம் உங்களை தேடி வரும்.

இந்த தீபம் ஏற்ற உகந்த நாள் என்று எதுவும் இல்லை. உங்களுக்கு வேண்ட வேண்டும் என்று நினைக்கும் போது தீபத்தை ஏற்றுங்கள். ஆனால் தீபம் ஏற்றும் வரை அசைவம் சாப்பிடாமல் இருந்து ஏற்றுங்கள். அதன் பிறகு சாப்பிடலாம். இந்த தீப வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து தாயாரின் அனுகிரகத்தை பெற்று நல்லதொரு வளமான செல்வ வாழ்க்கை வாழுங்கள்.

- Advertisement -