நேர்த்திக்கடனை செய்யாமல் விட்டுவிட்டால் தெய்வக்குத்தம் உண்டாகுமா? தீராத குடும்ப கஷ்டம் தீர, தெய்வ குத்தத்திலிருந்து மீண்டு வருவதற்கு என்ன வழி?

pooja-room-kula-dheivam
- Advertisement -

வார்த்தையிலேயே உள்ளது. நேர்த்திக் கடன். கடன் என்றால் என்ன. வாங்கியதை நாம் திருப்பிக் கொடுத்து தானே ஆக வேண்டும். நேர்த்திக்கடனையும் செய்யாமல் விட்டு விட்டால், தெய்வ குற்றம் நிச்சயம் வரும். எந்த தெய்வமும் ‘நீ எனக்கு இதை செய்தால் தான், பதிலுக்கு நான் உனக்கு இதை செய்வேன்’ என்று சொல்லுவது கிடையாது. நம் கஷ்டங்கள் தீர, நம்மை வருத்திக்கொண்டு, நாமே தெய்வங்களுக்கு வாக்கு கொடுத்து விடுகின்றோம். நான் உனக்கு இதை செய்கின்றேன், அதை செய்கின்றேன் என்று. ஆனால் காலப்போக்கில் அதை மறந்து விடுகின்றோம். சில பேருக்கு நேர்த்திக்கடனை செலுத்த நேரம் காலம் உடனே கூடி வந்து விடும். சில பேருக்கு நேர்த்திக்கடனை செலுத்துவதற்கான நேரம் காலமே வராது.

கூடுமானவரை நீங்கள் செய்த நேர்த்திக் கடனை உடனடியாக நிறைவேற்ற பாருங்கள். அதுதான் உங்களுடைய குடும்பத்திற்கு நல்லது. எத்தனையோ முறை முயற்சி செய்கின்றோம். நேர்த்தி கடனை செலுத்துவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கின்றோம். கோவிலுக்கு செல்ல டிக்கெட் கூட புக் பண்ணிட்டோம். ஆனால் கடைசி நேரத்தில் அந்த கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடனை எங்களால் செய்ய முடியவில்லை. என்பவர்கள் இப்படி செய்யலாம்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் ஏதாவது கன்னி தெய்வங்கள் வழிபாடு செய்யக் கூடிய வழக்கம் இருந்தால், அந்தக் கன்னி தெய்வத்தை நினைத்து உங்கள் வீட்டு பூஜை அறையில், சிறிய பூஜை செய்ய வேண்டும். உங்கள் வீட்டு வழக்கப்படி அந்த பூஜையை செய்து கொண்டு, எப்படியாவது இந்த நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு நல்ல நேரத்தை காட்டிக் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால், நேர்த்திக் கடனை செலுத்துவதற்கான நேரம் காலத்தை உங்கள் வீட்டு கன்னி தெய்வம் உங்களுக்கு காண்பித்துக் கொடுக்கும். இது ஒரு வழி.

இல்லை என்றால் உங்களுடைய குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளலாம். நேர்த்திக்கடனை செய்வதற்கு உண்டான வழியை எனக்கு காண்பித்துக் கொடுக்க வேண்டும் என்று குலதெய்வத்தின் பாதங்களை பற்றி கொண்டால், குலதெய்வம் உங்களுக்கு நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு உண்டான வழியை உடனடியாக காண்பித்துக் கொடுக்கும். செலுத்த முடியாத நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு மேல் சொன்ன விஷயங்களை நீங்கள் கடைப்பிடித்து பாருங்கள். நிச்சயமாக நல்லதொரு தீர்வு கிடைக்கும்.

- Advertisement -

சில குடும்பங்களில் தாத்தா பாட்டி அம்மாவோ, அப்பாவோ நேர்த்தி கடனை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் செய்த நேர்த்திக்கடனை வெளியில் சொல்லாமலேயே மறந்திருப்பார்கள். அல்லது இறந்திருப்பார்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து பிரச்சினைகள் வரும். ஜோசியரிடம் கேட்டால், நேர்த்திக்கடன் பாக்கி என்று சொல்லுவார்கள். எந்த நேர்த்திக்கடன் பாக்கி என்று தெரியவில்லையே என்ற குழப்பம். இந்த மறந்து போன நேர்த்திக்கடனை சரி செய்யவும் ஒரு பரிகாரம் நமக்கு சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

பௌர்ணமி தினத்தன்று உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும். உங்கள் வீட்டு வழக்கப்படி குலதெய்வத்திற்கு நீங்கள் எந்த பிரசாதத்தை வைப்பீர்களோ அதை செய்து வைத்து குலதெய்வத்தை மனதார வழிபாடு செய்து, மறந்த நேர்த்தி கடனுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு பூஜை செய்யுங்கள். குலதெய்வத்துக்கு நிவேதிமாக வைத்த பிரசாதத்தை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும்.

சர்க்கரைப் பொங்கல் வைப்பது, உணவு சமைத்து படையல் படைப்பது இப்படி உங்கள் குலதெய்வத்திற்கு நீங்கள் எந்த முறைப்படி வழிபாடு செய்வீர்களோ அதே முறைப்படி 6 பௌர்ணமி அன்று தொடர்ந்து இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். 6 பௌர்ணமி தினத்திற்கு மாதம் மாதம் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாது என்பவர்கள் வீட்டிலேயே இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். வீட்டில் செய்து வைத்த பிரசாதத்தை உங்கள் வீட்டில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு பிரசாதமாக கொடுக்கலாம் அல்லது இரண்டு ஏழைகளுக்கு தானமாக அன்னதானம் செய்யலாம்.

இப்படி மறந்து போன நேர்த்திக்கடனுக்காக பௌர்ணமி நாளில் குலதெய்வ வழிபாடு செய்தால், மறந்த நேர்த்திக்கடனை ஏதாவது ஒரு ரூபத்தில் குல தெய்வம் உங்களுக்கு காட்டி கொடுக்கும். அப்படி இல்லை என்றால் மறந்த நேர்த்திக்கடனுக்கான மன்னிப்பு உங்களுக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இறை நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -