இந்த புதுவிதமான மெது வடையை நீங்களும் ஒருமுறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். பல்லில் பட்டதும் கர முர சத்தத்துடன் மிகவும் சூப்பராக இருக்கும்

VADAI
- Advertisement -

நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்றான மெதுவடை, மசால்வடை இவை இரண்டையுமே இறைவனுக்கான பூஜை நைவேத்தியங்களிலும், திருமண பந்தியிலும் அல்லது வீட்டில் நடக்கும் எந்த வித விருந்தாக இருந்தாலும் சரி அதில் நிச்சயம் இதனை வைத்து விடுவோம். அவ்வாறு அடிக்கடி நாம் செய்யும் இந்த வடை எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் இருப்பதால் ஒரு சில சமயம் வீட்டில் உள்ளவர்களுக்கு அது அலுப்பாக தோன்றி விடும். ஆனால் ஒரு சிறிய டிப்ஸை பயன்படுத்தி எப்போதும் செய்யும் அதே வடையை சற்று காரமுரவென கிரிஸ்பியாக செய்து கொடுத்தால் அனைவரும் விருப்பமாக சாப்பிட்டுவிடுவார்கள். இதனை எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

toor-dal-vadai

தேவையான பொருட்கள்:
உளுத்தம்பருப்பு – ஒரு கப், பெரிய வெங்காயம் – ஒன்று, சீரகம் – கால் ஸ்பூன், மிளகு – கால் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி – ஒரு கொத்து, உப்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – கால் லிட்டர், ஓட்ஸ் அல்லது வெள்ளை அவல் – ஒரு கப்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு கப் உளுத்தம் பருப்பை தண்ணீர் ஊற்றி இரண்டு, மூன்று முறை நன்றாகக் கழுவி, மறுபடியும் தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊற வைத்து விடவேண்டும். பின்னர் தண்ணீரை வடிகட்டி உளுத்தம் பருப்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் அரிசி மாவு மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்

ulundhu.

பின்னர் இந்த மாவிலிருந்து ஒரு கரண்டி மாவை எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் மீதமிருக்கும் மாவினை மற்றுமொரு கிண்ணத்திற்க்கு மாற்றி அதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், அரை ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம், மற்றும் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதன் மீது கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கலந்து வைத்துள்ள உளுத்த மாவிலிருந்து ஒரு உருண்டையை எடுத்து உள்ளங்கையில் உருட்டி தட்டையாக தட்டி வடையின் நடுவில் ஆள்காட்டி விரலை வைத்து ஒரு ஓட்டை போட்டு எண்ணெயில் சேர்த்து பொறிக்க வேண்டும்.

Kadaai

வடை பாதி அளவு வெந்ததும் அவற்றை வெளியே எடுத்து வைக்க வேண்டும். பின்னர் ஒரு கப் அவல் அல்லது ஓட்ஸை மிக்ஸியில் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொண்டு அதனை ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

rice-flour-vadai1

பின்னர் ஒவ்வொரு வடையாக எடுத்து நாம் கலந்து வைத்துள்ள உளுத்தம் மாவில் வடை முழுவதையும் நனைத்து, அதன் பின் பொடி செய்து வைத்துள்ள ஓட்ஸில் பிரட்டி எடுத்து, மீண்டும் எண்ணெயில் சேர்த்து பொறிக்க வேண்டும். இவ்வாறு வடை எண்ணெயில் ஐந்து நிமிடங்கள் நன்றாக பொறித்தும் ஒவ்வொன்றாக வெளியே எடுக்க வேண்டும். இதே போல் அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் கிறிஸ்டியானா மெது வடை தயாராகிவிட்டது. எப்போதும் செய்யும் வடையை விட இவ்வாறு ஒரு முறை செய்து கொடுத்து பாருங்கள். வாயில் வைத்ததும் கரமுர சுவையுடன் சூப்பராக இருக்கும்.

- Advertisement -