உங்களுடைய வீட்டு நிலை வாசலில் இப்படி தீபம் ஏற்றும் பழக்கம் இருந்தால், வீட்டில் நிச்சயம் தீராத கஷ்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கும்.

vasal

நம்முடைய வீட்டில் தீப வழிபாடு செய்வது எதற்காக? நம்முடைய வீடு இருளில் இருந்து விலகி, வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்பதற்காகத் தான். அதாவது தீராத கஷ்டங்களிலிருந்து விடுபட்டு, நம்முடைய வீட்டில் சந்தோஷம் நிலவ வேண்டும் என்பதற்கான அர்த்தம் தான் தீபவழிபாடு. ஆனால், இந்த தீப வழிபாட்டில் நாம் செய்யக்கூடிய சில தவறுகளின் மூலம் நமக்கு பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. அந்த வரிசையில் நிலை வாசல்படியில் தீபம் ஏற்றும் போது நாம் செய்யக்கூடிய தவறு என்ன? அதை எப்படி சரிசெய்து கொள்ளலாம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோம்.

vasal-kathavu

நிலை வாசலில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும் என்ற ஒரு முறையை, இன்று நாம் தவறாக புரிந்து கொண்டு தவறான முறையில் செயல் படுத்துகின்றோம். நிலை வாசலில் செருப்பை அவிழ்த்து விடும் அந்த இடத்திலேயே, தீபம் ஏற்றுவது என்பது மிக மிக தவறான ஒரு விஷயம். வாசல் படியில் தீபம் எரிய வேண்டும் என்றால், நிலை வாசப்படியில் மேல் பக்கம் உள்ள மாடத்தில்தான் தீபம் எரிய வேண்டுமே தவிர, நிலை வாசலில் காலணிகளை விடும் இடத்தில் சக்தி வாய்ந்த அந்த தீபத்தை நாம் ஏற்றவே கூடாது.

காலணிகளை நிலை வாசல் பகுதியில் இருந்து நீக்கிவிட்டு அந்த இடத்தை என்னதான் கூட்டி, கழுவி சுத்தம் செய்தாலும், அந்த இடம் செருப்புகள் வைக்கும் இடம் தான். முடிந்தவரை நிலை வாசலில் செருப்பு வைக்கும் இடத்தில் தரையில் தீபத்தை ஏற்றாதீர்கள். முடிந்தால் நிலை வாசலில் மேல் பக்கத்தில் இரண்டு மரத்தினால் செய்யப்பட்ட ஸ்டாண்டை அடித்துக்கொண்டு அதன் மேல் தீபம் ஏற்றலாம்.

vilakku2

அப்படி இல்லை என்றால் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் ஆக இருந்தால், ஆணி அடித்து விளக்கு வைக்க ஸ்டாண்டை மாட்ட முடியாதவர்களாக இருந்தால், 2 ஸ்டூலை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மரத்தினால் செய்யப்பட்ட நாற்காலிகளை நிலை வாசலில் வெளி பக்கத்தில் வைத்து அதன் மேலே தீபம் ஏற்றினால் தவறு கிடையாது.

- Advertisement -

ஏனென்றால் இன்றைய சூழ்நிலையில் நிறைய பேர் குபேரர் விளக்கை நிலை வாசலில் வைத்து ஏற்றும் பழக்கத்தை வைத்துள்ளார்கள். நிலையில் அந்த குபேர விளக்கு ஏற்ற வேண்டும் என்பதற்காக செருப்பு விடும் அந்த இடத்திலேயே தீபம் ஏற்றப்படுவது நம் வீட்டிற்கு எந்த ஒரு பலனையும் கொண்டுவந்து சேர்க்காது. சொல்லப்போனால் விளக்கை அவமதிப்பதற்கு சமம், நாம் செய்யும் இந்த காரியம்.

vilakku

உங்களுடைய வீட்டு நிலை வாசல் படியில் மண் அகல் தீபங்களை ஏற்றினாலும் சரி, அல்லது குபேர விளக்கு ஏற்றினாலும் சரி, அதை சுத்தமில்லாத இடத்தில் தரையில் வைத்து ஏற்றும் பழக்கத்தை கொஞ்சம் மாற்றிப் பாருங்கள். (நிலை வாசலில் செருப்பு விடும் இடத்தில் தரையில் தட்டு வைத்து அதன் மேலே தீபத்தை வைத்து ஏற்றினாலும் அது தவறு.) நிச்சயமாக வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் படிப்படியாக குறைவதை உணர முடியும்.

vasal.1jpg

அந்தக் காலத்தில் நம்முடைய முன்னோர்கள் நிலை வாசலில் தரையில் வைத்து தீபத்தை ஏற்ற வில்லை. உயரத்தில் வைத்திருந்த விளக்கு மாடத்தில் தான் தீபத்தை ஏற்றி வைத்தார்கள். காலப்போக்கில், தீபத்தை நாம் தரையில் வைத்து ஏற்ற தொடங்கி விட்டோம். இனியாவது இந்த தவறை நாம் மேலும் மேலும் செய்யாமலிருக்க வேண்டும் என்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள பதிவு இது. அறியாமல் தெரியாமல் செய்த தவறினை அந்த ஆண்டவன் நிச்சயம் மன்னித்து விடுவார் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.