நினைத்த காரியம் நிறைவேற விநாயகர் வழிபாடு

vinayagar valipadu
- Advertisement -

எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அந்த காரியம் சிறப்பாக செயல்பட வேண்டும், அதில் எந்தவித தடைகளும் ஏற்படக்கூடாது என்று நினைப்பவர்கள் முதலில் விநாயகரை வழிபட்டு விட்டு பிறகு தான் அந்த காரியத்தை செய்ய ஆரம்பிப்பார்கள். அப்படி நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகளை நீக்கும் அற்புத ஆற்றல் கொண்டவராக விநாயகப் பெருமான் திகழ்கிறார். அப்படிப்பட்ட விநாயகர் பெருமானை நாம் தொடர்ந்து 48 நாட்கள் எந்த முறையில் வீட்டில் வழிபட நம்முடைய வேண்டுதல் நிறைவேறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

விநாயகப் பெருமானுக்கு என்று பல சிறப்புகள் இருக்கிறது அதிலும் குறிப்பாக சங்கடஹர சதுர்த்தி என்பது மிகவும் சிறப்பு மிக்கதாக திகழ்கிறது. சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய சங்கடங்கள் அனைத்தையும் விநாயகப் பெருமான் நீக்குவார் என்று கூறப்படுகிறது. இதை தவிர்த்து செல்லும் காரியங்கள் வெற்றி அடைவதற்கு, தடைபட்ட காரியங்கள் நடைபெறுவதற்கு என்று பல வழிகளில் விநாயகப் பெருமானை நாம் வழிபாடு செய்வதுண்டு.

- Advertisement -

இந்த வழிபாட்டை யாருக்காக வேண்டுமானாலும் செய்யலாம். இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை அன்றுதான் தொடங்க வேண்டும். வியாழக்கிழமை அன்று வீட்டை சுத்தம் செய்துவிட்டு குரு ஓரையில் அருகில் இருக்கும் கடைக்கு சென்று 1/4 கிலோ மஞ்சள் தூளை வாங்கி வந்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். வெள்ளிக்கிழமை அன்று காலையில் பிரம்ம முகூர்த்த வேலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வாசலில் கோலம் போட்டுவிட்டு பூஜைகளை செய்து முடித்துவிட்டு காலை 6 மணிக்குள் நாம் வாங்கி வைத்திருக்கும் மஞ்சளை எடுத்து அதில் ஒரு சிறு பிள்ளையாரை பிடித்து வைத்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.

வெற்றிலை, மா இலை, எருக்கு இலை போன்ற இலைகளில் பிடித்து வைத்திருக்கும் பிள்ளையாரை வைக்கலாம். அப்படி இந்த இலைகள் கிடைக்காத பட்சத்தில் ஒரு தாம்பாளத்திலும் வைத்துக்கொள்ளலாம். பிறகு அருகம்புல்லால் விநாயகருக்கு 108 முறை அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படியே அர்ச்சனை செய்யும் பொழுது “ஓம் கம் கணபதியே நமஹ” என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு நாம் விநாயகரை வழிபாடு செய்யும்பொழுது அவருக்கு நெய்வேத்தியமாக வெற்றிலை பாக்கு, கற்கண்டு, பேரிச்சம்பழம், உலர் திராட்சை, ஏதாவது ஒரு இனிப்பு வகைகளையோ அல்லது பழ வகைகளையோ அவருக்கு நெய்வேத்தியமாக வைக்கலாம். இதுவும் வைக்க முடியாது என்னும் பட்சத்தில் பொரி, அவல், பால் போன்றவற்றையும் நெய்வேத்தியமாக வைக்கலாம்.

கண்டிப்பான முறையில் பூஜை அறையில் ஒரு கலச செம்பு நிறைய தண்ணீரை பிடித்து வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இதே போல் தொடர்ந்து 48 நாட்கள் 48 பிள்ளையாரை மஞ்சளில் பிடித்து வைத்து ஒவ்வொரு பிள்ளையாருக்கும் அருகம்புல்லால் 108 முறை அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். 49 வது நாள் பிடித்து வைத்திருக்கும் அனைத்து பிள்ளையாரையும் கலச செம்பில் இருக்கும் தண்ணீரில் போட்டு கரைத்து விட வேண்டும்.

- Advertisement -

பிறகு அருகில் இருக்கும் பழங்கால அரச மரத்தடியில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு கலச செம்பை எடுத்துச் செல்ல வேண்டும். அந்த கலச செம்பில் இருக்கும் மஞ்சள் தண்ணீரை அரச மரத்தடியில் ஊற்றிவிட்டு விநாயகரை வழிபட வேண்டும்.

அவ்வாறு வழிப்படும் பொழுது நாம் யாருக்காக இந்த வழிபாட்டை செய்தோமோ அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு வீடு திரும்பி தங்களால் இயன்ற அளவு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் அன்னதானம் வழங்கி வஸ்திர தானம் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமி வழிபாடு

இந்த முறையில் நாம் விநாயகரை நினைத்து வழிபாடு செய்தால் கண்டிப்பான முறையில் விநாயகரின் அருளால் நாம் நினைத்த காரியம் நிறைவேறும்.

- Advertisement -