காரியத்தடை நீங்க செய்ய வேண்டிய தானம்

gomatha suriyan
- Advertisement -

வாழ்க்கையில் எப்போதும் சிலர் தோல்வியைத் தவிர எதையுமே சந்தித்திருக்க மாட்டார்கள். எந்த வேலையை தொடங்கினாலும் அதில் ஏதேனும் ஒரு சிக்கல் இருக்கும். சரியான வேலை இருக்காது, வேலை செய்யும் இடத்தில் நிம்மதி இருக்காது, குடும்பத்தில் பிரச்சனைகள் எழுந்த வண்ணம் இருக்கும். இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே செல்லலாம்.

இந்த காரியத்தடை என்று எடுத்துக் கொண்டால் இது மட்டும் இன்றி திருமணம் ஆகாமல் தள்ளிக் கொண்டு செல்வது, குழந்தை பாக்கியம் இல்லாமல் போவது வீட்டில் மங்கள காரியங்கள் தடைபடுவது. இவை எல்லாம் கூட காரியத் தடை தான். இவை அத்தனையும் சரி செய்யக் கூடிய ஒரு எளிய அருமையான பரிகாரத்தை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

காரியத்தடை நீங்க பரிகாரம்

பொதுவாக நம்முடைய வழிப்பாட்டு முறைகள் பரிகாரங்கள் அனைத்திலுமே தானத்திற்கு எப்போதுமே முக்கியமான அதே சமயம் முதன்மையான பங்கு உள்ளது. எந்த ஒரு பூஜை பரிகாரம் வழிபாட்டின் போதும் ஏதேனும் ஒரு தானத்தையும் சேர்த்து செய்தால் அதற்கான பலன் அதிக அளவு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதிலும் வாயில்லா ஜீவராசிகளுக்கு செய்யும் தானம் நேரடியாக கடவுளுக்கு செய்ததை போன்றதாக கருதப்படுகிறது. அப்படியான ஒரு தான பரிகாரத்தை தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். இதற்கு நீங்கள் பசு மாட்டிற்கு உணவு தானம் செய்ய வேண்டும் அதை குறித்து விரிவாக பார்க்கலாம்.

- Advertisement -

பசுவை கோமாதா என்று நாம் அழைப்பதோடு மட்டுமில்லாமல் அவைகளுக்கென தனியான வழிபாட்டு முறைகளும் பல நம்முடைய சாஸ்திரம் உண்டு. ஏனெனில் இந்த கோமாதாவில் முப்பது முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. அப்படி இருக்கையில் இந்த ஒரு தானத்தை கோமாதாவிற்கு செய்யும் போது அனைத்து தேவ தேவதைகளுக்கும் செய்ததாக ஆகும்.

இதற்கு நீங்கள் பசு மாட்டிற்கு ஏழு நாளும் சப்பாத்தியை உணவாக கொடுக்க வேண்டும். இதற்கு நீங்கள் கோதுமையை தானியமாக வாங்கி அரைத்து உங்கள் கையாலே சப்பாத்தியா செய்து கொடுப்பது சிறந்தது. கொடுக்கும் போது மூன்று ஐந்து ஏழு என ஒற்றைப்படையில் கொடுக்க வேண்டும் எத்தனை பசு மாட்டிற்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம் அது உங்கள் விருப்பம்.

- Advertisement -

அப்படி செய்து கொடுக்க முடியாதவர்கள் மட்டும் மாவாக வாங்கி செய்து கொடுங்கள். இதையும் கூட செய்ய முடியாதவர்கள் கடைகளில் விற்கும் சப்பாத்தி கூட வாங்கி கொடுக்கலாம். எந்த ஒரு காரியத்தையும் நம் கையால் செய்யும் பொழுது அதற்கான பலன் தனி என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.

ஆனால் இதை ஏழு நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இதை தொடங்கும் நாள் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் மிகவும் நல்லது. ஏனெனில் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு உரிய நாள். சூரிய பகவானுக்குரிய தானியம் கோதுமை. அன்றைய நாளில் தொடங்கக் கூடிய இந்த பரிகாரம் நல்ல பலன்களை தருவதாக அமையும்.

இந்த பரிகாரத்தை ஏழு நாட்கள் செய்து முடிப்பதற்குள்ளாகவே உங்களுடைய வாழ்க்கையில் ஏதேனும் ஒரு மாறுதல் நிச்சயமாக தெரியும் என்று சொல்லப்படுகிறது. தடைகள் நீங்கி உங்கள் வாழ்க்கை பிரகாசமாக மாறுவதற்கான வழிகள் புலப்படும். எப்போதுமே காரியத்தடை இல்லாமல் நினைத்ததெல்லாம் சாதகமாக முடிய இந்த தானத்தை தொடர்ந்து செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: வேலை கிடைக்க தீப வழிபாடு

நம்முடைய வாழ்க்கையில் முன்னேற விடாமல் தடுக்கும் இந்த தடைகளை தகர்த்தெறிய எளிமையான இந்த பரிகார முறை உதவி செய்யும் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகாரத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கை உடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -