நினைத்தது நடக்க ஏற்ற வேண்டிய தீபம்

dheepam kali
- Advertisement -

ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் எண்ணற்ற ஆசைகளும், கனவுகளும், லட்சியங்களும் தேவைகளும் இருக்கத் தான் செய்யும். அதை நிறைவேற்றிக் கொள்வதற்கான முயற்சி தான் ஒவ்வொரு நாளில் அவர்கள் செய்யக் கூடிய பணிகள் அத்துடன் கூடிய தெய்வ வழிபாடு பரிகாரங்கள் பூஜைகள் போன்றவைகளும்.

இவை எல்லாம் தொடர்ந்து செய்தாலும் கூட நம்முடைய தேவைகளோ ஆசைகளோ நிறைவேற சிறிது காலம் கட்டாயம் காத்திருக்க வேண்டும். இன்றைய அவசர காலக்கட்டத்தில் யாருக்கும் எதற்கும் காத்திருக்க நேரம் இருப்பதில்லை. அப்படியான சூழ்நிலையில் நினைத்தவை எல்லாம் உடனே நடக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் உண்டு.

- Advertisement -

அப்படி ஒரு வாய்ப்பு உண்டு அதற்கு இந்த தீப பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று சித்தர் குறிப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

நினைத்த காரியம் நிறைவேற ஏற்ற வேண்டிய தீபம்

இந்த தீப வழிபாட்டை செய்வதற்கு உகந்த நாள் கரிநாள். கரிநாள் என்றவுடன் அனைவருக்கும் இந்த நாளில் நாம் எந்த நல்ல காரியம் செய்ய மாட்டோமே என்று தோன்றும். காளி கருப்பண்ணன் போன்ற உக்கிர தெய்வங்களை வணங்கி இந்த நாளில் நாம் செய்யக் கூடிய வழிபாடுகள் நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றித் தரும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த தீப பரிகாரத்தை செய்வதற்கு நாம் ஒரு எண்ணையை தயார் செய்ய வேண்டும். அதற்கு நாட்டு மருந்து கடையில் வசம்பு, புங்க எண்ணெய் இரண்டையும் வாங்கிக் கொள்ளுங்கள். வசம்பை நன்றாக இடித்து பவுடராக செய்து கொள்ளுங்கள். அதை உங்கள் எண்ணெயில் போட்டு காய்ச்ச வேண்டும்.

இந்த தீபம் ஏற்ற நமக்கு பிரம்ம தானியம் என்று சொல்லப்படும் நெல் தேவை அதையும் வாங்கிக் கொள்ளுங்கள். அதே போல் 9 அகல் விளக்கு, 9 அரச இலை, சிறிதளவு தேன், டைமண்ட் கற்கண்டு, நெய்வேத்தியமாக கருப்பு நிற உலர் திராட்சை, சிகப்பு மற்றும் மஞ்சள் நிற திரி இவை அனைத்தையும் இந்த தீப வழிபாடு செய்வதற்கு முதல் நாளே வாங்கி வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த தீபத்தை கரி நாள் அன்று பிரம்ம முகூர்த்த வேளையில் மட்டும் தான் செய்ய வேண்டும். பூஜையறையில் செய்யலாம். பிரம்ம முகூர்த்த வேளையில் காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு ஒரு பெரிய தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மீது நெல்லை பரப்பி விட்டு அரச இலையை அடுக்கி விடுங்கள்.

எட்டு அகல் விளக்கு வட்டமாகவும் நடுவில் ஒரு விளக்கு இருப்பது போலவும் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அகல் விளக்கில் சிகப்பு மஞ்சள் சேர்ந்த திரி ஒன்றாக சேர்த்து போடுங்கள் அத்துடன் காய்ச்சிய எண்ணெய் ஊற்றி விடுங்கள். இந்த அகல் ஒவ்வொன்றிலும் மூன்று டைமன் கற்கண்டுகளை போட வேண்டும். அத்துடன் சிறிதளவு தேனையும் சேர்த்த பிறகு தீபத்தை ஏற்றுங்கள்.

இந்த தீபம் எரியும் போது உங்களுடைய வேண்டுதல் ஏதேனும் ஒன்றை மட்டும் வைக்க வேண்டும். அது விரைவில் நடக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அப்படி வேண்டும் வேளையில் ராமதேவ சித்தரே போற்றி என்ற இந்த வார்த்தை மூன்று முறை சொல்லுங்கள். இந்த விளக்கில் உள்ள எண்ணெய்கள் முழுவதுமாக தீரும் வரை தீபம் எறிய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நோய்கள் நீங்க லிங்க வழிபாடு

இந்த வழிபாடு உங்களுடைய வேண்டுதலை உடனே நிறைவேற்றித் தரும் என்று சொல்லப்படுகிறது. இதை ஒவ்வொரு கரிநாளிலும் ஒவ்வொரு வேண்டுதல் வைத்து தொடர்ந்து செய்யலாம். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த தீப பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -