இந்த குறிப்புகளை மட்டும் தெரிந்து கொண்டால் போதும். இனிமேல் அசைவம் சமைப்பதில் பெரிய கஷ்டம் எதுவும் இருக்காது

cooking
- Advertisement -

என்னதான் ஆரோக்கியம் அதிகமாக சைவ உணவுகளில் இருந்தாலும் பெரும்பாலானோர் அதிகமாக விரும்புவது அசைவ உணவினை தான். ஆனால் அசைவம் சமைப்பது என்பது சிலருக்கு கடினமாக இருக்கும். ஏனெனில் அவற்றை சுத்தமாக எந்த ஒரு அசுத்தமும் இல்லாமல் தூய்மை செய்ய வேண்டும். பிறகு அதில் எவ்வித நாற்றமும் இல்லாமல் பதமாக அலசி எடுக்க வேண்டும். இவ்வாறு சமைப்பதை விட அதனை தூய்மைப்படுத்துவதற்காக நேரம் அதிகமாக செலவிட வேண்டி இருக்கும். இதற்காகவே பலர் அசைவம் சமைப்பதை தவிர்க்க நினைப்பார்கள். இங்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த குறிப்புகள் இனிமேல் உங்களுக்கு இவ்வாறான மனக்கவலைகளை கொடுக்காது. வாருங்கள் அவை என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

fish

குறிப்பு 1:
பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் கடல் மீனா விட ஆற்று மீன்கள் தான் அதிகம் கிடைக்கும். இவற்றை சமைக்கும் பொழுது சேற்று வாடை அதிகமாக இருக்கும். இந்த வாடை வராமல் தடுப்பதற்கு தண்ணீரில் ஒரு பிடி கல்லுப்பு சேர்த்து அதனுள் மீன்களை ஊற வைக்க வேண்டும்.

- Advertisement -

குறிப்பு 2:
கருவாடு போன்ற உலர்த்திய மீன்களை சமைப்பதற்கு முன்னர் குளிர்ந்த நீரில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அப்போதுதான் அவை எவ்வித கெட்ட மணம் இல்லாமலும் சமைக்கும் பொழுது சீக்கிரத்தில் வேகும் அளவிற்கும் இருக்கும்.

mutton 1

குறிப்பு 3:
மாமிச உணவுகளை வாங்கும்பொழுது முக்கியமாக கவனிக்கவேண்டியது அவை புதியதா? இல்லை பழையதா? என்று. அவ்வாறு ஆட்டு இறைச்சியை வாங்கும் பொழுது அவை உறைந்த பாலாடை போன்ற கொழுப்போடும், இளஞ்சிவப்பு நிறத்திலும், உடைந்த எலும்புகளின் உட்பகுதி வெண்மைதநிறத்திலும் இருக்க வேண்டும்.

- Advertisement -

குறிப்பு 4:
மஞ்சள் நிறத்துடனும் எண்ணெய் மணமான கொழுப்புடனும், மற்றும் உலர் ஊதா நிறத்திலும் இருக்கும் மாமிசங்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். அவை மிகவும் பழையதாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

mutton

குறிப்பு 5:
எப்பொழுதும் மாமிச உணவுகளை சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து ஊற வைத்தால் அவை சமைப்பதற்கு எளிதாக சீக்கிரத்தில் வேக கூடியதாகவம், மிருதுவாகவும் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 6:
முட்டையை அனைவரும் அதிகமாக சமைத்து வருகின்றோம். அப்போது அவற்றில் இருக்கும் அழுகிய முட்டையை கண்டுபிடிப்பதற்கு அவற்றைத் தண்ணீரில் போடும் பொழுது அதன் குறுகிய முனை பாத்திரத்தின் அடியில் சென்று விட்டால் அவை அழுகி போன முட்டை என்று தெரிந்து கொள்ளலாம். நல்ல முட்டைகள் நீரின் மேலே மிதந்து கொண்டிருக்கும்.

egg

குறிப்பு 6:
ஆம்லெட் செய்வதற்கு முட்டையை உடைத்து ஊற்றி கலக்கும் பொழுது அவற்றின் வெள்ளைக்கரு அதிகமாக பாத்திரத்திலேயே ஒட்டிக்கொள்ளும். இவற்றை தவிர்ப்பதற்கு சற்று ஈரமான பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி கலக்கினால் வெள்ளைக்கரு பாத்திரத்தில் ஒட்டி வீணாவதைத் தவிர்க்க முடியும்.

egg-white

குறிப்பு 7:
முட்டையை உடைத்து ஊற்றும்போது அவற்றில் வெள்ளை கரு, மஞ்சள் கரு இவற்றுடன் சேர்த்து சிவப்பு நிறத்தில் இருந்தால் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது. அவை உடலுக்கு ஆரோக்கியம் அளிக்காது.

lemon-juice2

குறிப்பு 8:
அசைவ சாப்பாடு அதிகமாக சாப்பிட்ட பிறகு சிறிது நேரத்தில் எலுமிச்சை பழச்சாறு குடித்தால் சீக்கிரத்தில் ஜீரணமாகிவிடும்.

- Advertisement -