பெரிய வெங்காய கார சட்னி 5 நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள அசத்தலாக இருக்கும்.

big-onion-chutney
- Advertisement -

காரசாரமாக பெரிய வெங்காயத்தில் இப்படி ஒரு முறை காரச்சட்னி அரைத்துப் பாருங்கள். இட்லி, தோசைக்கு அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும் இந்த சட்னி கொஞ்சம் காரமாக இருந்தாலும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். இனிப்பும், காரமும் கலந்த இந்த வெங்காய கார சட்னி வித்தியாசமான சுவையுடன் இருக்கப் போகிறது. ரொம்ப ரொம்ப சுலபமாக குறைந்த பொருட்களை வைத்து ஐந்து நிமிடத்தில் செய்யக் கூடிய இந்த வெங்காய கார சட்னி எப்படி செய்வது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

வெங்காயம்

பெரிய வெங்காய கார சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
வர மிளகாய் – 10, பெரிய வெங்காயம் – 2 புளி – சிறிய எலுமிச்சை அளவு, வெல்லம் – ஒரு துண்டு, உப்பு – தேவையான அளவு, சமையல் எண்ணெய் – 2 ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், பூண்டு பல் – 4, கருவேப்பிலை – ஒரு கொத்து, வர மிளகாய் – ஒன்று.

- Advertisement -

பெரிய வெங்காய காரச் சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் பத்து வர மிளகாய்களை உங்கள் காரத்திற்கு ஏற்ப எடுத்துக் கொள்ளுங்கள். உருண்டையாக இருக்கும் காய்ந்த மிளகாயை எடுக்கக் கூடாது. நீளமாக இருக்கும் வர மிளகாய்களை எடுத்து காம்பு நீக்கி அதனை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது தான் மிளகாய் அரைக்கும் பொழுது நைசாக அரைப்படும்.

spicy-onion-chutney2

ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஊற வைத்த மிளகாய்களை தண்ணீர் வடிகட்டி விட்டு சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நாலைந்தாக வெட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். மிகச் சிறிய எலுமிச்சை பழம் அளவிற்கு புளியை உருட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதையும் சேர்த்து அதனுடன் ஒரு துண்டு வெல்லத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். காரமும், இனிப்பும் ஆக இருக்கும் பொழுது சுவை கூடுதலாக இருக்கும்.

- Advertisement -

தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். இப்போது மிக்ஸியை இயக்கி நைசாக சட்னியை அரைத்து எடுத்து வாருங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் அதில் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். உளுந்து வதங்கி வரும் சமயத்தில் சீரகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் பூண்டு பற்களை தோலுரித்து ஒன்றுக்கு இரண்டாக மைய நசுக்கி சேர்த்துத் தாளியுங்கள். ஒரு கொத்து கறிவேப்பிலையை நன்கு கழுவி உருவி இரண்டாகக் கிள்ளி சேர்க்கவும். ஒரே ஒரு வர மிளகாயை காம்பு நீக்கி கிள்ளி சேருங்கள். இப்படி தாளித்து பின்னர் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து 2 நிமிடம் தண்ணீர் வற்ற வதக்கி விட்டால் அருமையான கார வெங்காய சட்னி ரெடி. இதே முறையில் நீங்களும் வீட்டில் செய்து பார்த்து அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -