தக்காளி, வெங்காயத்துடன் இவற்றையும் சேர்த்து இப்படி சுவையான சட்னி செய்து கொடுத்தால், 10 இட்லி கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள்

chutni
- Advertisement -

ஒவ்வொரு நாளும் காலை, மாலை உணவுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சட்னி, சாம்பார், வடை கறி, குருமா இது போன்ற டிஷ்களை செய்ய வேண்டி உள்ளது. ஆனால் என்றும் ஒரே மாதிரியான சுவையில் சாப்பிட்டு இருந்தால் அனைவருக்கும் போரடித்துவிடும். நாம் செய்யும் சட்னியை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சுவையில் செய்து கொடுத்தால் போதும். வீட்டில் உள்ள அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு தக்காளி, வெங்காயத்தை மட்டும் சேர்த்து சட்னி செய்யலாம். அல்லது அதனுடன் பூண்டு சேர்த்து ஒரு நாள், புதினா சேர்த்து ஒரு நாள், கொத்தமல்லி சேர்த்து ஒரு நாள் என்று ஒவ்வொரு சில பொருட்களைச் சேர்க்கும்போது அதன் சுவை மாறுபடும். அப்படி அசத்தலான சுவையில் செய்யப்போகும் ஒரு சட்னியை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 3, தக்காளி – 4, பூண்டு – 6 பல், பச்சை மிளகாய் – 4, வர மிளகாய் – 4, உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, கறிவேப்பிலை – ஒரு கொத்து, புதினா – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, எண்ணெய் – 3 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் தக்காளி, வெங்காயத்தை நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு பூண்டை தோல் உரித்து வைக்க வேண்டும். பின்னர் சிறிய துண்டு இஞ்சியைத் தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு பச்சை மிளகாய் மற்றும் வர மிளகாயை காம்பு கிள்ளி வைக்க வேண்டும்.

பிறகு கொத்தமல்லி மற்றும் புதினா தழையை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி அவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் பச்சைமிளகாய், வரமிளகாய் சேர்த்து வதக்கி விட்டு, நறுக்கி வைத்துள்ள தக்காளி, வெங்காயம், கருவேப்பிலை, புதினா, கொத்தமல்லி, பூண்டு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவற்றுடன் முக்கால் ஸ்பூன் உப்பு சேர்த்து அனைத்தையும் வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றை ஒரு தட்டிற்கு மாற்றி ஆற வைக்க வேண்டும்.

பின்னர் வதக்கிய இவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான சட்னி தயாராகிவிட்டது.

- Advertisement -