காரசாரமான ‘வெங்காய கார சட்னி’ ஒருமுறை இப்படி அரைத்துப் பாருங்கள். 10 இட்லி வச்சாலும் பத்தவே பத்தாது.

red-chutney
- Advertisement -

காரசாரமான ஒரு நல்ல சட்னி சாப்பிட்டு எத்தனை நாட்கள் ஆகின்றது. நாக்கு மரத்துப் போய்விட்டது. உப்பும் உறைப்பும் சேர்ந்த மாதிரி ஒரு காரச் சட்னியை சாப்பிட வேண்டும் என்று உங்களுக்கும் தோனுகிறதா. உடனடியாக உங்கள் வீட்டில் இருக்கும் வர மிளகாயையும், வெங்காயத்தையும் வைத்து இப்படி ஒரு சட்னியை அரைத்துப் பாருங்கள். இந்த வெங்காய கார சட்னியை இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். வெங்காய கார சட்னி செய்வது எப்படி. தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

onion-cutting

இந்த சட்னியை அரைப்பதற்கு தேவையான பொருட்கள். மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் – 2, பெரிய நெல்லிக்காய் அளவு – புளி, வரமிளகாய் – 10 லிருந்து 12 காரத்திற்கு ஏற்ப. தேவையான அளவு உப்பு. (இந்த வர மிளகாயை மட்டும் காம்பை நீக்கிவிட்டு 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும்.)

- Advertisement -

தாளிப்பதற்கு தேவையான பொருட்கள். நல்லெண்ணெய் – 1 ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை 1 கொத்து அவ்வளவுதான்.

tomato-chutney1

இப்போது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தயாராக வைத்திருக்கும் வெங்காயத் துண்டுகள், புளி, தண்ணீரில் ஊற வைத்திருக்கும் வர மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து, 2 ஸ்பூன் தண்ணீர் ஊற்றி இந்த பொருட்கள் அனைத்தையும் நைஸாக விழுது போல் அரைத்துக் கொள்ள வேண்டும். (இந்தச் சட்னியை அரைக்கும் போது தண்ணீர் நிறைய ஊற்றக்கூடாது. நிறைய தண்ணீர் ஊற்றிவிட்டால், சட்னியை கடாயில் ஊற்றி வதக்கும் போது நிறைய நேரம் எடுக்கும், தண்ணீர் சுண்டுவதற்கு.)

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கருவேப்பிலை தாளித்து, அரைத்து வைத்திருக்கும் வெங்காயம் மிளகாய் சட்னியை கடாயில் சேர்த்து மிதமான தீயில் நன்றாக கை விடாமல் வதக்கி கொண்டே இருக்க வேண்டும். இந்த வெங்காயம், மிளகாயின் பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும். வதக்கும் போதே நமக்கு தெரியும் சட்னியில் இருக்கும் தண்ணீர் அனைத்தும் வற்றி, சுண்டி சுருண்டு வரும். இந்த சட்னி பக்குவமாக தயாராக மொத்தமாக 4 லிருந்து 5 நிமிடங்கள்.

தயாரான இந்த சட்னி நன்றாக ஆறியதும், தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றிக்கொள்ளுங்கள். ஈரமில்லாத ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் இந்தச் சட்னி இரண்டு நாட்கள் ஆனாலும் ஃப்ரிட்ஜில் வைக்காமல் கூட நன்றாக இருக்கும். சுலபமாக வெறும் பத்தே நிமிடத்தில் இந்த வெங்காய கார சட்னியை தயாரித்து விடலாம். வெங்காயம், புளி, வர மிளகாய் காரம் சேரும் போது இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் ஒரு முறை உங்களுடைய வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள். மிஸ் பண்ணாதீங்க.

- Advertisement -