உடம்புக்கு ஆரோக்கியம் தரும் பச்சைப்பயிறு கிரேவியை ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க. தோசை சப்பாத்தி, சுடச்சுட சாதம் எல்லாத்துக்கும் சூப்பர் சைட் டிஷ் இது.

gravy
- Advertisement -

உடம்புக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பச்சை பயிரை வைத்துதான் ஒரு கிரேவி ரெசிபியை இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த கிரேவியை முளைக்கட்டிய பயிரில் செய்தால் உடலுக்கு அதிகப்படியான சத்து கிடைக்கும். முதலில் 150 கிராம் அளவு பச்சைப் பயறை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். மறுநாள் காலை, இதில் இருக்கும் தண்ணீரை முழுமையாக வடித்துவிட்டு, ஊறவைத்த பச்சைப் பயிரை ஒரு வெள்ளைத் துணியில் போட்டு மூட்டை கட்டி வைத்தால் 5 மணி நேரத்தில் இந்த பச்சை பயிறு முளைவிட்டு இருக்கும். முளைவிட்டிருக்கும் இந்த பச்சை பயிரை கிரேவிக்கு பயன்படுத்த வேண்டும். இந்த முளைக்கட்டிய பயிறு அப்படியே இருக்கட்டும்.

gravy1

அடுத்தபடியாக ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மீடியம் சைஸில் இருக்கும் 2 பெரிய வெங்காயங்களை வெட்டிப்போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்க வேண்டும். வெங்காயம் கருதிவிடக்கூடாது. அதேசமயம் பச்சையாகவும் இருக்கக்கூடாது. பிரவுன் கலர் வரும் வரை வெங்காயத்தை வதக்கிக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இஞ்சி துண்டு – 2, தோல் உரித்த பூண்டு பல் – 8, மீடியம் சைஸ் தக்காளி பழங்கள் – 2, பொன்னிறமாக வதக்கி வைத்திருக்கும் வெங்காயம், இவை அனைத்தையும் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, விழுதாக அரைத்து இதையும் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

gravy2

இப்போது கிரேவியை செய்யத் தொடங்கலாம். ஒரு குக்கரை அடுப்பில் வைத்துக்கொள்ளுங்கள். அதில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் சீரகம் – 1 ஸ்பூன், சோம்பு – 1 ஸ்பூன், பிரியாணி இலை – 1, சேர்த்து ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு, தாளித்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு முளைகட்டிய பயிறை குக்கரில் போட்டு, இந்த எண்ணெயில் இரண்டு நிமிடம் வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பச்சைப்பயிறு எண்ணெயில் 2 நிமிடம் வதங்கியவுடன், அரைத்து வைத்திருக்கும் வெங்காய தக்காளி விழுதை குக்கரில் சேர்த்து, கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன், மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து, கிரேவி நன்றாக கலந்துவிட வேண்டும். இறுதியாக 1/2 ஸ்பூன் கரம் மசாலா, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், கஸ்தூரி மேத்தி – 1 ஸ்பூன் நுனுக்கி கிரேவியின் மீது தூவி நன்றாக விடவேண்டும்.

gravy3

கஸ்தூரி மேத்தி உங்கள் வீட்டில் இல்லை என்றால் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை இந்த கிரேவியின் மேலே தூவிக் கொள்ளலாம். இறுதியாக குக்கரை மூடி 3 விசில் வைத்து, பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து பார்த்தால், சூப்பரான கிரேவி தயாராகியிருக்கும். மிக மிக சுலபமாக அட்டகாசமான ஒரு பச்சைப்பயிறு கிரேவி தயார். இதை சப்பாத்திக்கும் வைத்துக் கொள்ளலாம். தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம். சுடச்சுட சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். அட்டகாசமாக இருக்கும். ஒரு முறை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -