கஷ்டப்படாமல் கடனை திருப்பிக் கொடுக்க, குலதெய்வ கோவிலுக்கு இந்த 1 பொருளை வாங்கி கொடுங்கள். கடன் தொல்லையிலிருந்து சீக்கிரம் விடுபடலாம்.

kadan
- Advertisement -

சில பேருக்கு கழுத்தை நெரிக்கும் கடன் நிறைய சங்கடங்களை கொடுக்கும். கடன் பிரச்சனையை சுலபமாக சமாளிக்க முடியாமல் திக்கித் திணறி வருவார்கள். இப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டிய ஒரு சில சின்ன சின்ன பரிகாரங்களை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். ஆன்மீக ரீதியாக சொல்லப்பட்டுள்ள இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்தால் கடன் காணாமல் போகும். குலதெய்வ வழிபாடு தான் ஒருவருக்கு கஷ்டத்தை போக்கும். ஆகவே கடன் பிரச்சனை உள்ளவர்களாக இருந்தாலும் சரி, கடன் பிரச்சனை இல்லாதவர்களாக இருந்தாலும் சரி உங்கள் குலம் சந்தோஷமாக இருக்க குலதெய்வ வழிபாடு முக்கியம்.

வட்டி கூட கட்ட முடியாத அளவுக்கு கடன் தொல்லை உள்ளவர்கள் உங்கள் குலதெய்வ கோயிலுக்கு செல்லுங்கள். உங்கள் எடைக்கு நிகராக பச்சரிசியை வாங்கி தானமாக கொடுங்கள். (யார் பெயரில் அதிக கடன் இருக்கிறதோ அவர்களுடைய எடைக்கு நிகராக பச்சரிசி தானம் கொடுக்கப்பட வேண்டும்.) எடைக்கு எடை பச்சரிசியை குலதெய்வ கோவிலுக்கு தானமாக கொடுப்பது கடனை குறைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. முயற்சி செய்துதான் பார்ப்போமே. இந்த பச்சரிசி பரிகாரம் நிச்சயமாக உங்களுக்கு கை மேல் பலனை கொடுக்கும்.

- Advertisement -

அடுத்தபடியாக நிறைய பேர் ஊர்களின் எல்லையில் ஒரு சாமி இருக்கும். அது ஊரைக் காக்கும் தெய்வம். எல்லைச்சாமி என்று சொல்லுவார்கள். அந்த சுவாமிக்கு பொங்கல் வைத்து, புதிய துணி எடுத்துக் கொடுத்து, மாலை வாங்கி போட்டு அர்ச்சனை செய்து சிறியதாக உங்கள் செலவில் ஒரு பூஜையை செய்யுங்கள். இந்த எல்லைச்சாமி பூஜையும் கடன் பிரச்சினையை தீர்க்கும்.

கடன் ஒரு மனிதனை நிம்மதியாக வாழ விடாது. நோயும் அப்படித்தான் நிம்மதியாக ஒரு மனிதனை வாழ விடாது. இந்த கடன் பிரச்சனைக்கும் தீராத நோய் பிரச்சனைக்கும் ஒரு வகையில் நம்முடைய கிரக சூழ்நிலையும் காரணமாக இருக்கிறது. இப்படிப்பட்ட தொந்தரவுகளுக்கெல்லாம் காரணமாக இருப்பவர் சனிபகவான். ஆகவே சனிக்கிழமை தோறும் நவகிரக சன்னிதானத்திற்கு சென்று சனி பகவானை வழிபாடு செய்து எள் தீபமேற்றி வழிபடுவது நன்மையை தரும்.

- Advertisement -

காலையில் ஆறு மணி, மாலையில் ஆறு மணி இந்த இரண்டு நேரத்தையும் வீட்டில் இருக்கும் பெண்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். இந்த சமயத்தில் வீட்டில் பூஜை அறையில் தீபம் ஏற்றி, குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு அந்த நேரத்தில் மகாலட்சுமியின் வருகைக்காக காத்திருக்க வேண்டும். ஆறு மணி சமையத்தில் தூங்குவது வீட்டில் சண்டை போடுவது. அப்போதுதான் வீடு கூட்டுவது. அப்போதுதான் குளிப்பது, போன்ற தவறுகளை செய்யாதீங்க.

மேல் சொன்ன விஷயங்கள் எல்லாம் கடன் வந்த பிறகு தான் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கடன் இல்லாதவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி வந்தால் இனி வரும் காலங்களில் நம்முடைய சந்ததியினரும் கடன் இல்லாமல் வாழலாம். பரிகாரத்தை மட்டும் செய்துவிட்டால் கடன் பிரச்சனை தீராது. கடனை திருப்பித் தருவதற்கு உண்டான முயற்சிகளை நீங்கள் தான் எடுக்க வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். உங்களுடைய முயற்சிக்கு வரும் முட்டுக்கட்டையை சரி செய்யத்தான் பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. பரிகாரம் ஒரு பக்கம் இருந்தாலும், நீங்கள் முழு மனதோடு முழுமூச்சோடு முயற்சி செய்தால் தான் கடன் தொல்லையில் இருந்து விடுபட முடியும் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -