வடித்த சாதம் மீதமாகி விட்டதா? கவலை வேண்டாம். இப்படி அதனுடன் தேங்காய் சேர்த்து சுவையான வெரைட்டி ரைஸ் செய்து கொடுங்கள். கொஞ்சம் கூட மிச்சம் இல்லாமல் அனைத்தும் காலியாகி விடும்.

coconut
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் தினமும் சாதம் வடித்து அதனுடன் குழம்பு, பதார்த்தம் செய்வதென்பது வழக்கம்தான். ஆனால் என்னதான் அளவாக பார்த்து பார்த்து செய்தாலும் சில நேரங்களில் வடித்த சாதம் கொஞ்சம் மீதமாகிவிடுகிறது. இப்பொழுது குளிர்காலம் என்பதால் இந்த சாதத்தை தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் சாப்பிட்டால் உடம்பிற்கு தேவையில்லாத பிரச்சனைகள் வர ஆரம்பித்து விடும். இப்பொழுதுள்ள சூழ்நிலையில் சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது என்பதே வரக்கூடிய நோயிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கான வழியாகும். எனவே இந்த சாதத்தை கீழேயும் கொட்ட முடியாமல் சிலருக்கு கவலை தோன்றிவிடும். இவ்வாறு மீதியான சாதத்தை இப்படி தேங்காய் சாதமாக மாற்றி கொடுத்தால் கடாயில் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் அனைவரும் விருப்பமாக சாப்பிட்டு முடிப்பார்கள். வாருங்கள் இதை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

pazhaiya-sadham

செய்முறை:
சாதம் – 3 கப், தேங்காய் – அரை மூடி, கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், வேர்க்கடலை – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், பச்சை மிளகாய் – 6, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, எண்ணெய் – 5 ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் அரை மூடி தேங்காயைத் தேங்காய் துருவலை பயன்படுத்தி துருவிக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

coconut-milk-waste

பிறகு ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து நன்றாக வறுத்துக் கொண்டு, பின்னர் இவற்றுடன் ஒரு ஸ்பூன் வேர்க்கடலை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பிறகு 6 பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி விட்ட பின்னர், துருவி வைத்துள்ள தேங்காயிலிருந்து பாதி அளவு தேங்காயை இவற்றுடன் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இவற்றுடன் அரை ஸ்பூன் உப்பு மற்றும் கொத்தமல்லி தழைகளைத் தூவி நன்றாக கலந்துவிட்டு, 3 கப் சாதத்தை இதனுடன் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பிறகு மீதமுள்ள தேங்காய் துருவலையும் இதனுடன் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விட்டு அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

coconut

பிறகு இந்த சாதத்துடன் ஏதாவது துவையல் அல்லது சிறிதளவு ஊறுகாய் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையான சுவையில் இருக்கும். இவை எதுவும் இல்லை என்றாலும் இதனை அப்படியே சாப்பிட்டாலும் இதன் சுவைக்கு குறை இருக்காது. ஒரு முறை மீதமான பழைய சாதத்தை இவ்வாறு செய்து கொடுத்துப் பாருங்கள். நொடிப்பொழுதில் செய்த அனைத்தும் முழுமையாகத் தீர்ந்துவிடும்.

- Advertisement -