இன்று தேய்பிறைப் பஞ்சமியில் இப்படி பூஜை செய்வதன் மூலமாக பிரச்சனைகள் முழுவதுமாக மறைந்து, பணம் பெருகிக் கொண்டே இருக்கும்

varahi-vilakku
- Advertisement -

பொதுவாகவே அமாவாசையை அடுத்து வரும் ஐந்தாவது நாள் பஞ்சமி திதி என்றும், அதுபோல பௌர்ணமியை அடுத்து வரும் ஐந்தாவது நாளும் பஞ்சமி திதி என்று சொல்லப்படுகிறது. திதி நாட்களில் செய்யப்படும் பூஜைகளுக்கு அதிக பலன் இருக்கிறது. அதிலும் பஞ்சமி திதியில் செய்யும் பூஜைகளுக்கு மிகவும் சக்தி வாய்ந்த பலன் கிடைக்கிறது. பஞ்சமி திதி என்றால் முதலில் ஞாபகத்திற்கு வருவது அம்பாள் மட்டுமே. அம்பாளுக்கு எவ்வித பூஜைகளை இன்றைய தினத்தில் செய்கிறோமோ அதற்கு ஏற்ற சிறந்த பலனைப் பெற முடியும். அதிலும் குறிப்பாக வராஹி அம்மனுக்கு விளக்கு ஏற்றி, விரதமிருந்து பூஜை செய்துவர நீங்கள் நினைத்தது நிறைவேறும். நினைத்ததை செய்வதற்கு பண தடை இருக்காது. வாழ்வில் எப்போதும் வெற்றி மட்டுமே கிடைக்கும். இந்த தேய்பிறை பஞ்சமி பூஜையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

குறிப்பாக இந்த பஞ்சமி திதி பூஜையை ஒரு சிலர் தவறாமல் செய்ய, அவர்களுக்கு விரைவாக பலன் கிடைப்பதை உணர முடியும். அவ்வாறு ஜாதகத்தில் நேரம் சரியில்லை, இப்பொழுது உங்களுக்கு பிரச்சனைக்கு உரிய நேரமாக இருக்கிறது, என்று இருப்பவர்கள் இந்த பூஜையை தவறாமல் செய்ய வேண்டும். இன்றைய தினத்தில் நீங்கள் செய்யும் பூஜையின் காரணமாக உங்களுக்கு இருக்கும் இந்த குறைபாடுகள் அனைத்தும் மறைந்து விலகிவிடும்.

- Advertisement -

அதிலும் வியாழக்கிழமையில் வரக்கூடிய எந்தவித திதியாக இருந்தாலும் அதற்கு கிடைக்கும் நற்பலன்கள் அதிகமாகவே இருக்கிறது இன்றைய தினத்தில் குபேரனும் மகாலட்சுமியும் சேர்ந்து வழிபடும் சிறப்பு தினமாக உள்ளதால் இன்றைய பூஜை மிகவும் சக்தி வாய்ந்த பூஜையாக மாறிவிடுகிறது.

இதற்காக முதலில் வீட்டில் எப்பொழுதும் போல பூஜை அறையை சுத்தம் செய்து, சுவாமி படங்களுக்கு மஞ்சள், குங்கும பொட்டு வைத்து, பூ வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். பிறகு வீட்டில் எத்தனை அம்பாள் படங்கள் வைத்து இருக்கிறீர்களோ, அதற்கு ஏற்றார்போல் அகல் விளக்கை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி அம்பாள் படத்திற்கு முன்பாக வைத்து மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு குபேர விளக்கில் ஒரு ஏலக்காய், சிறிய பச்சை கற்பூரம் இவை இரண்டையும் சேர்த்து, நெய் அல்லது நல்லெண்ணை ஊற்றி திரி போட்டு, தீபம் ஏற்றி, நிலை வாசலில் ஒன்றும்,வீட்டின் பூஜை அறையில் ஒன்றும் ஏற்றிவைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் பணப் புழக்கம் அதிகரிக்கும்.

இந்த பூஜையை காலை அல்லது மாலை இவை இரண்டு நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். அதிலும் கோவிலுக்கு சென்று பூஜை செய்வது மிகவும் விசேஷமானதாகும். உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று, ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் நெய் கலந்த கூட்டு எண்ணெயை சேர்த்து, சிகப்பு நிற திர் போட்டு, தீபம் ஏற்றி, ஓம் பஞ்சமி தேவியே நம் என்று சொல்லி, அம்பாளை வணங்க வேண்டும். இன்றைய தினத்தில் நவ தானியங்களால் செய்யப்பட்ட பிரசாதத்தை தானமாக கொடுக்க உங்கள் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும்.

- Advertisement -