மண் சட்டியை பூஜை அறையில் இப்படி வைத்து பூஜை செய்து பாருங்களேன். பணம், நகை எல்லாம் அட்சய பாத்திரத்தில் வைத்து போல பல மடங்கு பெருகிக் கொண்டே இருக்கும்.

- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் வருமானம் என்பது எவ்வளவு வந்தாலும் போதாமல் செலவுகள் பெருகிக் கொண்டே தான் இருக்கிறது. அதற்காக செலவு செய்யாமலும் இருக்க முடியாது. ஆனால் சம்பாதிக்கும் பணம் அனைத்தும் வீண் விரயம் ஆகிக் கொண்டிருந்தால் நம்மால் சேமிப்பு என்பதை செய்யவே முடியாது. அப்படி இல்லாமல் நாம் சம்பாதிக்கும் சின்னத் தொகை கூட பல மடங்கு பெருக, நம் வீட்டில் இந்த ஒரு சின்ன பரிகாரத்தை செய்தால் போதும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையான முக்கியமான பொருள் மண்ணால் ஆன சின்ன சட்டி. இதற்கு புதிதாக தான் வாங்க வேண்டும். இதற்கு முன் பயன்படுத்தியதை பயன்படுத்தக் கூடாது. அடுத்ததாக இதில் வைக்க வேண்டிய முக்கியமான இரண்டு பொருள் மல்லிகைப் பூ, தாமரை பூ இவை இரண்டிற்கும் பணம், தங்கம் இரண்டையும் ஈர்த்து தங்க வைக்கும் சக்தி அதிகம் உள்ளது. எனவே இந்த பரிகாரத்திற்கு இவை மூன்றும் கட்டாயமாக தேவை.

- Advertisement -

பணம் நகை சேர பரிகாரம்
இந்த பரிகாரம் செய்வதற்கு முதலில் கடையிலிருந்து வாங்கி வந்த மண்சட்டியை சுத்தம் செய்து அதில் மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்த பிறகு உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். அதன் பிறகு இந்த சட்டியில் மல்லிகை பூக்களை நிரப்பி அதில் ஒரு தாமரை மலரையும் வைத்து விடுங்கள். தாமரை எந்த நிறத்தில் இருந்தாலும் பரவாயில்லை.

நீங்கள் சம்பாதிக்கும் பணம் சிறிய தொகையாக இருந்தாலும் பரவாயில்லை வீட்டிற்குள் பணத்தைக் கொண்டு வந்த உடன் முதல் வேலையாக இந்த சட்டியில் வைத்து விடுங்கள். ஒரு மணி நேரமாவது பணம் இந்த பானைக்குள் அப்படியே இருக்கட்டும். பணத்தை வைத்த பிறகு இதற்கு கற்பூர தீபாரதனை காட்டி மனதிற்குள் இந்த பணம் வீண் விரையம் ஆகாமல் பல மடங்கு பெருக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு பணத்தை  எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் இந்த பரிகாரம்.

- Advertisement -

இதை தொடர்ந்து செய்து வரும் போது பணமானது உங்களிடம் தங்கி பல மடங்கு பெருகுவதுடன், வீண் விரயம் என்பதே இருக்காது என்று சொல்லப்படுகிறது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை மட்டும் தான் இதில் வைக்க வேண்டும். கடனாக வாங்கிய பணத்தையோ பிறர் பணத்தையோ அதில் வைத்து விடக் கூடாது கவனமாக கையாளுங்கள்.

அதே போல் உங்கள் வீட்டில் ஒரு சின்ன குண்டுமணி தங்கம் இருந்தால் கூட இந்த மண்பானையில் போட்டு வையுங்கள். அதுவும் பல மடங்கு பெருகும். இந்த மண்பானையானது அட்சய பாத்திரம் போல் இதில் சேரும் பொருளை பல மடங்கு பெருகும் என்று சொல்லப்படுகிறது. இந்த மண்பானையில் இருக்கும் பூக்கள் மட்டும் வாடாமல் இருக்க வேண்டும்.

- Advertisement -

பூ வாடி விட்டால் உடனே அந்த பூக்களை எடுத்து விட்டு மறுபடியும் வேறு பூக்களை வைத்து விடுங்கள். இதில் எப்போதும் நகையோ அல்லது ஏதாவது கொஞ்சம் பணமும் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள். இந்த மண் சட்டியை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து கற்பூர தீபாராதனை காட்டி வந்தால் வீடு நல்ல செல்வ செழிப்போடு சுபிட்சமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகளை அழிக்க யாரை வணங்க வேண்டும் தெரியுமா? எப்பேர்பட்ட பகைவர்களையும் ஒழித்து ஒன்றும் இல்லாமல் செய்ய, கைவிடப்பட்ட நோய்களும் நீங்க இவரை வழிபட்டாலே போதும்! யார் இவர்?

இந்த எளிய பரிகாரத்தை நீங்களும் செய்து சம்பாதிக்கும் பணத்தை பல மடங்காக பெருக்கி நகை, நட்டுடன் நல்லதொரு செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

- Advertisement -