வீட்டில் அடிக்கடி பணம் வீண் விரயமாகிறதா? சேமிக்கவே முடியலையா? இந்த 1 பொருள் போதும் பணம் விறுவிறுன்னு சேர்ந்து கொண்டே இருக்குமாம்!

virali-manjal-cash
- Advertisement -

நாம் என்னதான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தாலும் உழைத்த பணம் கையில் தங்குவது என்பது தான் மிகவும் முக்கியம். பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தாலும் சரி, ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதித்தாலும் சரி உழைக்கின்ற பணத்தை எவ்வளவு சேமிக்க முடிகிறதோ, அது தான் நம்முடைய சொத்தாக இருக்கும். ஒரு மாதத்திற்கு 10 பைசா கூட என்னால் சேமித்து வைக்க முடியவில்லை என்று புலம்புபவர்கள், இது போல செய்து பாருங்கள், வீண் விரயங்கள் ஆகாமல் விறுவிறுன்னு சேகரித்து வைக்கலாம். வீட்டில் பணம் சேமிக்க செய்ய வேண்டிய எளிய பரிகாரத்தை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் இனி நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவைக்கு ஏற்ப பணம் சம்பாதித்தாலும் அனாவசிய செலவுகளும், திடீர் விரயங்களும் வந்தால் என்ன செய்வது? திடீர் விரயங்கள் அடிக்கடி வந்தால் அவ்வளவு தான் நிலைமை! என்று நினைப்பவர்கள் இந்த ஒரு விஷயத்தை கடைப்பிடித்து வந்தால் இது போன்ற விரயங்களில் இருந்து விடுபடலாம் என்கிறது சாஸ்திரங்கள். அப்படியான ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் இப்பதிவில் காண இருக்கிறோம்.

- Advertisement -

வீட்டில் இருக்கக்கூடிய சமையல் அறை வாஸ்து படி சரியான திசையில் அமைந்திருக்க வேண்டும். அடுப்படியில் நின்று சமைப்பவர்கள் கிழக்கு நோக்கி நின்று சமைக்க வேண்டும். இது தான் சரியான திசையாகும். கிழக்கு நோக்கி சமைக்கும் பொழுது வலது கை பக்கத்தில் உப்பு ஜாடி, எண்ணெய் போன்ற பொருட்கள் இருக்க வேண்டும். மற்ற அநாவசிய பொருட்களை அங்கிருந்து அகற்றி விடுங்கள்.

சமைக்கும் பொழுது எப்பொழுதும் அன்னபூரணியை நினைத்து சமைக்க வேண்டும். அப்பொழுது தான் வறுமை குறையும். அடுப்பங்கரையில் அன்னபூரணி படம் ஒன்றை மாட்டி வையுங்கள். அப்பொழுது தான் அன்னபூரணி நம் நினைவிலேயே வருகிறாள். அடுப்பின் வலது கை புறத்தில் ஒரு செம்பு சொம்பு ஒன்றை வையுங்கள். இந்த கலசத்தில் விரலி மஞ்சள் ஒன்றை போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தினமும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய சில்லரை நாணயங்கள் மற்றும் சில்லறை ரூபாய் நோட்டுகளை அதில் சேகரித்து வாருங்கள். எப்பொழுதெல்லாம் தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் அதில் பணத்தை போட்டுக் கொண்டே வர வேண்டும். சொம்பு நிறைந்த பின்பு அதில் இருக்கக்கூடிய பணத்தை பூரட்டாதி நட்சத்திரம் வரக்கூடிய நாள் அன்று சுப காரியங்களுக்காக செலவு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
நெருப்பை கனவில் கண்டால் என்ன பலன் தெரியுமா? உங்க கனவில் நெருப்பு வந்திருக்கிறதா?

பூரட்டாதி நட்சத்திரம் அன்றுதான் கால பைரவர் ஏழு கிழமைகளையும் படைத்தார் என்று புராணங்கள் குறிப்பிடுகிறது. ஏழு கிழமைகளிலும் வறுமை இல்லாமல் தன, தானியங்களோடு, செல்வ செழிப்போடு இருக்க இந்த நாள் அன்று நீங்கள் சேகரித்த பணத்தை எடுத்து செலவு செய்ய வேண்டும். கோவிலுக்கு அபிஷேக பொருட்கள் வாங்கவும் அல்லது அன்னதானம் செய்யவும் இந்த பணத்தை நீங்கள் பயன்படுத்தலாம். எந்த ஒரு சூழ்நிலையிலும் இதில் இருக்கும் பணத்தை சுயநலமாக நீங்கள் எடுத்து செலவு செய்யக்கூடாது. இந்த பரிகாரத்தை துவங்க நாள், நட்சத்திரம் கிடையாது, எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் துவங்கலாம். ஆனால் காசை எடுத்து செலவு செய்யும் பொழுது பூரட்டாதி நட்சத்திரம் அன்று மட்டும் செலவு செய்யுங்கள். நல்ல காரியங்களுக்காகவும், தான தர்மங்கள் செய்யவும், கோவிலுக்காகவும் நீங்கள் செலவு செய்யலாம். இப்படி செய்து வந்தால் பணமானது வீண் விரயம் ஆவது தடுக்கப்பட்டு மீண்டும் மீண்டும் உங்களிடம் பணம் சேரும் என்பது நம்பிக்கை.

- Advertisement -