வட இந்திய வியாபாரிகளின் வெற்றிக்கு அவர்கள் இப்படி செய்வதும் காரணமாம்! பணத்தைப் பெருக்கும் புத்திசாலித்தனத்தை பெறுவது எப்படி?

lakshmi-cash

பெரிய பெரிய வட இந்திய வியாபாரிகள் எல்லாம் சில நுணுக்கமான விஷயங்களையும், ஆன்மீக பரிகாரங்களையும் ரகசியமாக செய்து வருவார்கள். அவர்கள் இறைவனை முழுமையாக நம்புபவர்களாக இருப்பார்கள். கடவுளிடம் மனம் திறந்து தங்களுடைய கோரிக்கைகளை நண்பர்களிடம் பேசுவது போல் பேசுவார்கள். அவர்கள் மகாலட்சுமியின் மந்திரத்தை உச்சரித்து தினமும் அவர்களுடைய வியாபாரம் அல்லது தொழில் செய்யும் இடத்தில் வைத்து வழிபடுவார்கள். இவ்வாறு செய்ய செய்ய அவர்களுடைய தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் காண்பார்கள். அந்த சூட்சும ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் நாமும் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

owl-lakshmi

வட இந்திய வியாபாரிகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மற்றும் பௌர்ணமி அன்றும் விசேஷமான பிரார்த்தனைகளை தங்கள் கடையில் இருக்கும் தெய்வத் திருவுருவ படத்தின் முன்பு வைப்பார்கள். அவர்கள் ஏற்றும் விளக்கில் ஒளிரும் ஜோதியில் இறைவனை உருவேற்றுவார்கள். அது அவர்கள் எப்படி செய்கிறார்கள் தெரியுமா? எந்த ஒரு விஷயத்தையும் நாம் ஆழமாக எதை நம்புகிறோமோ! அப்படித்தான் அது நம் கண்களுக்கு தெரியும்.

வெள்ளி மற்றும் பௌர்ணமி தினத்தை அவர்கள் மிகவும் விசேஷமான நாட்களாக பார்க்கின்றனர். இந்த நாளில் பிரபஞ்சத்தில் அதிக சக்தி மற்றும் இறை ஆற்றல் இருக்கும். அந்த நாட்களில் நீங்கள் உங்களுடைய மற்றும் வியாபார வளர்ச்சிக்காக உங்களுடைய கடைகளிலேயே இருக்கும் லட்சுமி படத்திற்கு இது போல் வழிபாடுகள் செய்யலாம். அது எப்படி செய்ய வேண்டும்? பொதுவாக கடை மற்றும் வியாபார இடத்தில் விநாயகர், லட்சுமி, சரஸ்வதி மூவர் இருக்கும் படியான படமும், குலதெய்வ படமும், பெருமாளுடைய படமும் அல்லது லட்சுமி தேவி மட்டும் இருக்கும் படமும் வைத்திருப்பது மிகவும் நல்லது.

kalkandu

அப்படி சாதாரணமாக தினமும் வழிபடும் பொழுது மகாலட்சுமி தேவி படத்திற்கு முன்பு சிறிதளவு கல்கண்டை வைத்து வணங்க வேண்டும். மகாலட்சுமியின் மந்திரத்தை உச்சரித்து கொண்டே விளக்கு ஏற்ற வேண்டும். ஆனால் வெள்ளி மற்றும் பௌர்ணமி தினத்தில் விசேஷமாக வழிபாடு செய்யலாம். இதன் மூலம் உங்களுடைய வியாபாரம் மற்றும் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் மற்றும் பௌர்ணமியிலும் உங்களுடைய கடையில் இருக்கும் படத்திற்கு முன்பு ஏலக்காய் மற்றும் பச்சை கற்பூரம் சேர்த்து நன்கு காய்ச்சிய பாலை நிவேதனம் படைக்க வேண்டும்.

- Advertisement -

அது போல் மங்கலப் பொருளாக இருக்கும் வெற்றிலை, பாக்கு, பூ தாம்பூலம் வைக்க வேண்டும். பழங்களையும் வைக்கலாம். இனிப்புக்காக கல்கண்டு வைக்க வேண்டும். முடிந்தால் பாயாசத்தை நைவேத்யமாக படைத்து வழிபடலாம். இவைகளை எல்லாம் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அப்படி தீபம் ஏற்றும் பொழுது கீழ்வரும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

praying-god1

மந்திரம்:
ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தாயே!

உன் முழு உருவத்தோடும், அனைத்து ஆபரணங்கள் சாற்றிய கோலத்தோடும், இந்த விளக்கில் எழுந்தருளி எனக்கு கடன் வறுமையற்ற வளமான வாழ்வு தந்தருள வேண்டும் என்று மனமார மகாலட்சுமி தாயை அருள் புரியுமாறு வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் தீப ஒளியை எடுத்து தலையிலும், கண்களிலும் ஒற்றிக் கொள்ள வேண்டும். தீபம் முழுவதுமாக எரிந்து முடியும் வரை நாமாகவே தீபத்தை அணைக்க கூடாது.

vilakku1

தீபம் எப்பொழுதும் தானாக தான் அணைய வேண்டும். அப்படி அணைந்த பின் அதில் கருகி இருக்கும் கருக்கை எடுத்து உங்களுடைய நெற்றியில் வெற்றி திலகமாக இட்டுக் கொள்ள வேண்டும். இப்படி ஒவ்வொரு பௌர்ணமியும் மற்றும் வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து செய்து வருவதனால் உங்களுக்கு வியாபாரத்தை நல்ல வளர்ச்சிக்கு கொண்டு செல்ல முடியும். தொழில் மற்றும் வியாபார விருத்திக்கான புத்திசாலித்தனத்தை அடைவீர்கள். இதனால் பணத்தை பெருக்கும் உத்தியையும் கற்றுக் கொள்வீர்கள்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் பூஜை அறை இப்படி மட்டும் இருந்தால் நிச்சயமாக இறை சக்தி குறையும் தெரிந்து கொள்ளுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.