உங்கள் ஜாதகத்தில் எந்த யோகம் இருந்தால் ராஜ வாழ்க்கை வாழ்வது உறுதி தெரியுமா ?

Astrology

உலகில் மனிதர்களாக பிறந்து வளர்ந்த எல்லோருமே வாழ்வின் ஒரு கட்டத்தில் தங்களின் மீத வாழ்க்கையை ஒரு மன்னருக்கு நிகரான வாழ்க்கையை வாழ வேண்டும் என ஆசைப்படுவார்கள். அப்படி வாழ அவர்கள் என்ன தான் கடினமாக உழைத்து பொருட்ச்செல்வத்தை சேர்த்தாலும், அவர்கள் அனைவருமே தாங்கள் விரும்பிய ஒரு ராஜயோக வாழ்க்கையை வாழ முடிவதில்லை. ஒரு மனிதன் ராஜயோக வாழ்க்கையை வாழ அவனது ஜாதகத்தில் சில யோகங்கள் இருக்க வேண்டும் என கூறுகிறது ஜோதிட சாஸ்திரம். அப்படியான யோகங்களில் ஒன்று தான் இந்த “பஞ்ச மகாபுருஷ யோகம்” இந்த யோகத்தை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

astrology

ஒரு நபரின் ஜாதகத்தில் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் மற்றும் சனி அதனதன் சொந்த ராசியான (மேஷம், விருச்சிகம்) , மிதுனம், (தனுசு, மீனம்), (ரிஷபம், துலாம்), (மகரம், கும்பம்) ஆகியவற்றை இருந்தாலும் , அல்லது இந்த ஐந்து கிரகங்களில் ஒவ்வொரு கிரகமும் அது உச்சம் பெறக்கூடிய ராசிகளான மகரம், கன்னி, கடகம், மீனம், துலாம் ஆகியவற்றில் இருந்தாலும் இந்த பஞ்ச மகாபுருஷ யோகம் ஏற்படுகிறது.

ராசிக்கான கட்டம் கீழே இணைக்கப்பட்டுள்ளது அதை வைத்து உங்கள் ஜாதகத்தில் உள்ள செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் மற்றும் சனி கிரகத்தை ராசிகளில் பொருத்தி பார்த்து உங்கள் ஜாதகத்தில் பஞ்ச மகாபுருஷ யோகம் உள்ளதா என்பதை அறிந்துகொள்ளலாம்.

Rasi Kattam

இந்த யோகத்தில் பிறந்த நபர் நல்ல வலிமையான உடலும், எதற்கும் அஞ்சாத மனோதிடம் கொண்டவராக இருப்பார். ஊன் உணவுகளில் அதிகம் உண்ணும் வாடிக்கை கொண்டவராக இருப்பார். சிறந்த அறிவாற்றல் கொண்டவராக இருப்பார் அதிகளவு புத்தகங்களை படிக்கும் ஆர்வம் கொண்டவராக இருப்பார். சிறந்த வாதத்திறமை இருப்பதால் ஒரு சிலர் சிறந்த வழக்குரைஞர்களாக மிளிரக்கூடும். பிறரின் பிழை பொறுத்து அவர்களுக்கு சரியானவற்றை கற்று தருவர். ஆன்மீக விடயங்களில் அதிகம் ஆர்வம் மற்றும் ஈடுபாடு இருக்கும். ஒரு சிலர் பிறர் போற்றக்கூடிய ஞானிகளாகவும், மகான்களாகவும் உயரக்கூடும்.

- Advertisement -

astrology

இவர்களுக்கு அழகான மற்றும் செல்வந்த நிலையிலுள்ள வாழ்க்கைத்துணை அமைவர். பொன், ஆபரணங்கள், வீடு, வாகனம், நிலம் போன்ற சொத்துக்களின் சேர்க்கை பெருகும். வெளிநாடுகளுக்கு செல்வது போன்ற அமைப்பு ஏற்படும். இவர்கள் எந்த ஒரு தொழில் மற்றும் வியாபார துறைகளில் ஈடுபட்டாலும் தங்களின் கடின உழைப்பின் மூலம் அந்த துறைகளில் உச்சங்களை தொடுவர். இரும்பு சம்பந்தமான தொழில்கள் மற்றும் கருப்பு நிற பொருட்கள் சம்பந்தமான பொருட்களில் அதிகளவு லாபம் கிடைக்கும். அரசாங்கத்தில் பணிபுரிபவர்களாக இருந்தால் பல பணியாளர்களை நிர்வாகிக்கக்கூடிய பதவிகளில் இருப்பர்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் ஜாதகத்தில் குரு பகவான் எங்கு இருந்தால் ஹம்ச யோகம் உண்டு தெரியுமா ?

English Overview:
Here we described what is Pancha mahapurusha yoga in Tamil and what are all the benefits of Pancha mahapurusha yoga in Tamil astrology.