வீட்டில் இந்த இரண்டு பொருட்கள் இருந்தால் போதும். சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட அட்டகாசமான கிரேவி செய்திடலாம்

panneer
- Advertisement -

இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட எவ்வாறு சாம்பார், சட்னி சுவையாக இருக்குமா, அதேபோல சப்பாத்தி மற்றும் பூரியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட உருளைக்கிழங்கு மசாலா, சென்னா மசாலா போன்ற கிரேவி பதத்தில் இருக்கின்ற சைட் டிஷ்கள் தான் அருமையான சுவையில் இருக்கும். ஆனால் எப்போதும் ஒரே மாதிரியான சைடிஷ்களை செய்து வைத்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு போர் அடித்து விடும். எனவே உருளைக்கிழங்கு மசாலாவிற்க்கு பயன்படுத்தக்கூடிய உருளைக்கிழங்கை வைத்தே இப்படி சுவையான பன்னீர் கிரேவி செய்யலாம். இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். 2, 3 சப்பாத்தி சாப்பிடுபவர்கள் கூட இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று அதிகமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த சுவையான உருளைக்கிழங்கு கிரேவியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 2, கடலைப்பருப்பு – 3 ஸ்பூன், வெங்காயம் – 3, தக்காளி – 2, பூண்டு – 5 பல், இஞ்சி சிறிய துண்டு – 1, பட்டை – 1, ஏலக்காய் – 1, கிராம்பு – 2, மராட்டி மொக்கு – 1, ஸ்டார் பூ – 1, மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – அரை ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், வர மிளகாய் – 2, பச்சை மிளகாய் – 2, தனியா தூள் – அரை ஸ்பூன், தனி மிளகாய் தூள் – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கின் மேலுள்ள தோலை சீவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதன்பின் 3 ஸ்பூன் கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டையும் மிக்ஸியில் சேர்த்து அதனுடன் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து சற்றுக் கொரகொரப்பாக அரைத்துக் கொண்டு, அதன் பின்னர் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கடாயில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் மூன்று வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சேர்க்க வேண்டும். அதன்பின் 2 தக்காளி, பிரியாணி இலை, கிராம்பு, பட்டை, ஏலக்காய், மராட்டி மொக்கு, ஸ்டார் இவை அனைத்தையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். கடாயின் மீது ஒரு தட்டை வைத்து, அதன்மீது அரைத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு பேட்டை சமன் செய்து வைக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் அதற்கு மேல் ஒரு தட்டு போட்டு மூடி விட வேண்டும். கடாயில் இருக்கும் மசாலாக்கள் அனைத்தும் வேகும் பொழுது, அதன் மேலுள்ள உருளைக்கிழங்கு விழுதும் நன்றாக வெந்து விடும். பிறகு உருளைக்கிழங்கு விழுது வெந்ததும், அதனை கீழே இறக்கி வைத்து, சிறிது ஆறவிட்டு, அவற்றைக் கத்தி வைத்து சதுர வடிவில் சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் வேக வைத்த பொருட்களை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் இந்த விழுதை சேர்த்து நன்றாக கலந்து விட்டு, அதனுடன் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி விட வேண்டும். பின்னர் இதனுடன் உப்பு மற்றும் காய்கறி வேகவைத்த தண்ணீரையும் சேர்த்து கலந்து விட்டு, இவை கொதி வரும் பொழுது வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளையும் சேர்த்து கலந்து விடவேண்டும். பிறகு இறுதியாக கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையை தூவினால் சுவையான பன்னீர் கிரேவி தயாராகிவிடும்.

- Advertisement -